ஊர் சுற்றுவோம்! உழைப்போம்!

நீங்கள் ஒரு டாக்டர் என்று வைத்துக்கொள்வோம். வெளியூருக்கோ, வெளிநாட்டிற்கோ சுற்றுலா செல்கிறீர்கள் என்றும் வைத்துக்கொள்வோம். அங்கே ஓய்வு கிடைக்கும் போது, ஒரு சில நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும்?
டாக்டராகதான் இருக்க வேண்டும் என்றில்லை. எந்த துறையில் வேலை பார்ப்பவராக இருந்தாலும் உங்களுக்கென ஒரு நிபுணத்துவமும், தனி அனுபவமும் இருக்கத்தானே செய்யும்.

.
வெளியூர் சுற்றுலா செல்லும்“ போது, நடுவே அந்த அனுபவத்தை பயன்படுத்திக்கொண்டு வேலை வாய்ப்பு தேடி வரும் சாத்தியம் உண்டுதானே! அதனை பயன்படுத்திக்கொண்டால் நல்லதுதானே.

ஆனால், சுற்றுலாவின் நோக்கமே ஓய்வு எடுப்பது தானே, அங்கேயும் போய் வேலை செய்ய வேண்டுமா, என அலுத்துக் கொள்பவர்கள் கவனிக்க,இத்தகைய வேலை வாய்ப்பை தேடித் தருவதற்காக என்றே ஒரு இணையதளம் இருக்கிறது தெரியுமா?

அதாவது, ஊர்சுற்றிப் பார்க்க வருபவர்ளுக்கு உள்ளூரில் உள்ள தற்காலிக வேலை வாய்ப்புகளை அறிமுகம் செய்து வைக்கிறது இந்த தளம். சுற்றுலா போன இடத்தில் வேலை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் உங்களுக்கு உகந்ததாக தோன்றாதுதான். காரணம் நீங்கள் சுற்றுலா பயணிகளாக இருக்க விரும்புகிறீர்களே தவிர, புதிய ஊர்களில், புதிய அனுபவத்தை நாடும் ஊர்சுற்றியாக இருக்க விரும்பவில்லை என்பதே விஷயம்!

ஆம், சுற்றுலா பயணிகளுக்கும், ஊர் சுற்றிகளுக்கும் முக்கிய வேறுபாடுகள் இருக்கின்றன. யார் வேண்டுமானாலும் சுற்றுலா செல்லலாம். ஆனால், எல்லோராலும் ஊர்ச் சுற்றிகளாக இருக்க முடியாது. அதற்கென ஒரு தனி மனநிலை தேவை.
இவர்களுக்கு என்று தனி பெயரும் இருக்கிறது. – பேக்பேக்கர்ஸ்!

இவர்களை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கா விட்டாலும் கூட,நேரில் பார்த்திருக்க வாய்ப்பு உண்டு. மூட்டை போன்ற ஒரு பெரிய பையை முதுகில் சுமந்தபடி சுற்றித்திரியும் வெளிநாட்டவரை நீங்கள் அவ்வப்போது பார்த்து இருக்கிறீர்கள் அல்லவா? அவர்களுக்குத்தான் பேக் போக்கர்ஸ் என்று பெயர். தமிழில் ஊர் சுற்றிகள் என்று வைத்துக்கொள்வோமே!

இவர்கள் சராசரி சுற்றுலா பயணிகள் அல்ல. பொதுவாக சுற்றுலா செல்வது என்றால், அதுவும் வெளிநாடுகளுக்கு செல்வது என்றால் என்ன செய்வோம்? புறப்படுவது முதல், தங்குவது, சுற்றிப்பார்ப்பது, திரும்பி வருவது என அனைத்தையும் முன்கூட்டியே திட்டமிட்டு கொள்வோம் அல்லவா? இப்படி திட்டமிட்டுக் கொண்டாலும், எல்லாம் சரியாக இருக்குமா என்ற சந்தேகமும், கவலையும் இருக்கும்.

இதற்கு மாறாக, எதையும் திட்டமிடாமல் நினைத்த ஊருக்கு கிளம்பி வந்து விடுபர்வகள்தான் ஊர்ச்சுற்றிகள். தங்குமிடம், உணவு, பார்க்குமிடம் என எதைப்பற்றிய கவலையும் அவர்களிடம் இருக்காது. பயணத்திற்கு என எவ்வித தனிப்பட்ட ஆயத்தங்களையும் அவர்கள் மேற்கொள்வதில்லை.

அவர்களைப் பொருத்தவரை, முதுகின் பின்னே உள்ள மூட்டைப்பைதான் சகலமும். உணவு, தண்ணீர், உடைகள் என எல்லாமும் அதில் அடங்கிவிடும். எனவே, அவர்கள் தங்குவதற்கான ஓட்டல் பற்றி எல்லாம் அலட்டிக் கொள்ளாமல், கிடைக்கும் இடத்தில் கட்டையை சாய்த்து விடுவார்கள்.

அது சாலையோர பூங்காவாகக் கூட இருக்கலாம். சமயங்களில் தாங்கள் சந்தித்து பேசும் உள்ளூர் நபரின் வீட்டிலேயே கூட தங்கி விடுவதுண்டு. புதிய அனுபவத்தை பெறுவதையே முக்கியமாக கருதுவதால், இவ்வாறு நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்கி கொள்ளாமல் நினைத்தபடி ஊர் சுற்றுவது பொறுத்தமாக இருக்கிறது.

இத்தகைய ஊர்ச்சுற்றிகளின் பட்ஜெட் குறைவாகவே இருக்கும் என்பதோடு வந்த இடத்தில் கொஞ்சம் காசு கிடைத்தால் கூட நன்றாக இருக்கும் என்றுதான் நினைப்பார்கள். அதாவது ஊர் சுற்றிப்பார்பதற்கு நடுவே, ஏதாவது வேலை பார்க்க முடிந்தால், மனமுவந்து அதற்கு உடன்படுவார்கள்.

அதே நேரத்தில் உள்ளூரில் உள்ள நிறுவனங்களும் தற்காலிக வேலைகளுக்காக ஊர்சுற்றிகளை பயன்படுத்திக்கொள்ள விருப்பப்படும். காரணம் ஊர்ச்சுற்றிகள், தங்களது துறையில் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பார்கள். அவர்களது திறமைய பயன்படுத்திக்கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.

உதாரணத்திற்கு ஹாலந்தில் இருந்து வரும் ஊர்ச்சுற்றி ஒருவர் இணையதள வடிவமைப்பில் கில்லாடி என்று வைத்துக்கொள்வோம். உள்ளூரில் உள்ள சிறிய நிறுவனம் ஒன்று தனது இணைய தளத்தை மாற்றி அமைக்க விரும்பலாம்.

இதற்கு நிபுணர்களை அமர்த்தினால் செலவு அதிகமாகலாம். அதைவிட ஹாலாந்துக்காரரை அழைத்துப் பேசினால் இணையதளத்தை அதற்காக வடிவமைத்து கொடுத்து விடுவார்.
நியாயமான கட்டணத்தை கொடுத்தால் சந்தோஷமாக வாங்கி கொள்வார். அவரைப் பொறுத்தவரை அந்த இடத்தில் சில டாலர்கள் கிடைத்த மகிழ்ச்சி. உள்ளூர் நிறுவனத்திற்கோ குறைந்த செலவில் வேலை முடிந்த திருப்தி.

இப்படி எந்த நிறுவனமும் உள்ளூருக்கு வரும் ஊர்ச்சுற்றிகளின் திறமைகளை பயன்படுத்திக்கொண்டு பரஸ்பரம் பயன் பெறலாம். எல்லாம் சரி, வரும் ஊர்ச்சுற்றிகளில் யாருக்கு என்ன திறமை இருக்கிறது என்பதோ அல்லது அவர்கள் தனது சேவையை வழங்க தயாராக இருப்பதையோ தெரிந்து கொள்வது எப்படி? அதே போல் ஊர்ச்சுற்றிகள் நிறுவனங்களின் தேவையை தெரிந்து கொள்வது எப்படி சாத்தியம்?

இந்த கேள்விகளுக்கு பதிலாக பிறந்ததுதான் பேக்போக்கர்ஸ் ஜாப் சர்ச் டாட்காம். வேலை பார்க்க தயாராக உள்ள ஊர்ச்சுற்றிகளுக்கும் தற்காலிக வேலை வைத்திருக்கும் நிறுவனங்களுக்கும் இடையே தொடர்பு ஏற்படுத்தி தரும் பாலமாக இந்த தளம் செயல்படுகிறது.

ஊர்ச்சுற்றிகள் தங்கள் பயணத்தை தொடங்கும் முன், இந்த தளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அப்போது தங்கள் திறமை மற்றும் சார்ந்துள்ள துறை பற்றி குறிப்பிடவேண்டும். இதேபோல் நிறுவனங்களிடம் உள்ள வேலைகளை பட்டியலிடலாம்.

இருதரப்பினரும் பரஸ்பரம் பொறுத்தம் பார்த்து, தேவையானதை தேர்வு செய்து கொள்ளலாம். ஊர்ச் சுற்றிகளுக்கு தற்காலிக வேலையும், நிறுவனங்களுக்கு பல்வேறு திறமை கொண்டவர்களின் சேவையும் கிடைக்கச் செய்வதே தனது நோக்கம் எனச் சொல்லும் இந்த தளம், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் மட்டுமே செயல்படக்கூடியது.

———–
(இந்த தளம் இப்போதூ பயன்பாட்டில் இல்லை)

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “ஊர் சுற்றுவோம்! உழைப்போம்!

  1. இல்லாத இணையதளத்திற்கு கூட ஒரு பதிவா..??

    ஆனால் செய்தி நன்றாகதான் இருக்கு.

    வாழ்த்துக்கள்.

    Reply

Leave a Comment

Your email address will not be published.