வீட்டுக்கு ஒரு இமெயில்

elenaவருங்காலத்து தேர்தல் அறிக்கையில் இலவச இமெயில் வழங்கப்படும் எனும் வாக்குறுதி இடம் பெறலாம். அதோடு இந்த வாக்குறுதி வாக்காளர்கள் மத்தியில் அமோக வரவேற்பையும் பெறலாம். இதற்கான முதல் முயற்சியை தைவானின் தலைநகரம் மேற் கொண்டு இருக்கிறது.
நிர்வாக விஷயங்களுக்கு இன்டெர் நெட்டை பயன்படுத்தலாம் என்றும், இதன் மூலம் பொதுமக்களுக்கு மிகவும் திறமையான வகையில் சேவையாற்ற முடியும் என்றும் கருதப்பட்டு வருகிறது.
மின் நிர்வாகம் எனும் பொது தலைப்பின் கீழ் இதற்கான யோச னைகள் முன்வைக்கப்படுகின்றன. பல நாடுகள் மற்றும் நகரங்கள் சோதனை முறையில் மின் நிர்வாகத்தை செயல்படுத்தி வருகின்றன.
எதிர்பார்த்த வேகத்தில் இந்த முயற்சிகள் பயனளிக்கவில்லை எனும் கருத்து இருக்கிறது. அதோடு மின் நிர்வாகம் பெயரளவோடு நின்று விடுவதாகவும் நடைமுறையில் நிறைய சிக்கல்களை சந்திக்க நேர் கிறது என்றும் சொல்லப்படுகிறது.
இந்த குறைகளையெல்லாம்களை யும் நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. முழுமை யான மின் நிர்வாகத்தை அளிக்க சம்பந்தப்பட்ட அமைப்புகள் முழு ஈடுபாட்டோடு செயல்பட வேண்டும்.
அமெரிக்கா, பிரிட்டன், தென் கொரியா உள்ளிட்ட பல நாடுகளில் பல்வேறு விதமாக மின் நிர்வாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தைவான் தன் பங்குக்கு மிகவும் வித்தியாசமான ஆனால் பாராட்டத்தக்க மின் நிர்வாக முயற்சியை அறிவித்திருக்கிறது. தைவானின் தலைநகர் தைபே உலக புகழ் பெற்ற நகரங்களில் ஒன்று. அந்நகரத்தின் நிர்வாகம், வீட்டுக்கு ஒரு இமெயில் திட்டத்தை செயல் படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது.
இன்டெர்நெட் பிரபலமாக தொடங்கிய காலத்திலேயே இ மெயிலும் பிரபலமாகி விட்டது. சொல்லப் போனால் இன்டெர்நெட் சார்ந்த சேவைகளில் இமெயிலே முன்னணியில் இருக்கிறது.
சாமானிய மனிதன் கூட இமெயிலின் பயனை அறிந்திருப்ப தோடு எழுத, படிக்க தெரியாதவர்கள் கூட இமெயிலை பயன்படுத்து கின்றனர். இமெயிலை பெறுவது சுலபம் மற்றும் இலவசமானது என்பதால் பெரும்பாலானோர் சொந்த மாக இமெயில் முகவரி வைத்திருக்கின்றனர்.
சுயமாக இமெயில் பெறும் வசதி இல்லாதவர்களுக்கு இமெயில் முகவரி கணக்கை துவக்கி தரும் சேவையையும் ஒரு சில நிறுவனங்கள் செய்து வருகின்றன.
இந்த வரிசையில் தைபே நகர நிர்வாகமும் சேர்ந்திருக்கிறது. தைபே நிர்வாகம் நகரத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு இமெயில் முகவரியை இலவசமாக வழங்க உள்ளது.
தற்போது இன்டெர்நெட் யுகத்தில் அனைத்துவிதமான தகவல்களை அறியவும் பெரும்பாலான இன்டெர் நெட்டையே நாடி வருகின்றனர். இந்நிலையில் அரசு தனது குடிமக்களுக்கு வழங்க வேண்டிய தகவல்களை இன்டெர்நெட் மூலமே வழங்குவது மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று தைபே நினைக்கிறது.
எனவேதான் நகரவாசிகள் ஒவ்வொருவருக்கும் இமெயில் முகவரியை அளிக்க முன் வந்துள்ளது. இந்த பிரத்யேக இமெயில் முகவரிகள் மூலம் நகர சபையின் திட்டங்கள்,செயல்பாடுகள் பற்றிய விவரங்கள், நகரவாசிகளுக்கு உடனுக்குடன் தெரிவிக்கப்படும்.
நகரவாசிகள் இந்த முகவரியை பயன்படுத்தி நகர சபையோடு தொடர்பு கொண்டு தங்கள் மனக் குறைகளை வெளிப்படுத்தி தீர்வு காண முடியும்.
விரைவில் இந்த திட்டம் அமலுக்கு வரவுள்ளது. இதன் முதல் கட்டமாக வீட்டுக்கு ஒரு இமெயில் வழங்கு வதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை அமைக்கும் பணியில் தைபே ஈடுபட்டுள்ளது.
இன்டெர்நெட் இணைப்பு வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் இப்படி இமெயில் முகவரி இலவசமாக வழங்கப்படும். இன்டெர் நெட் இணைப்பு இல்லாதவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. அவர்களுக்கென்று பிரத்யேக தொலைபேசி எண் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் அவர்கள் நகரசபையை தொடர்பு கொள்ளலாம்.
தைபேவிற்கு வருகை தரும் வெளிநாட்டினர் மற்றும் சுற்றுலாப் பயணிகளும் இந்த சேவைகளை பயன்படுத்திக் கொள்ள முடியும். வீட்டுக்கு ஒரு இமெயில் திட்டம் நகரசபையை நிர்வகிப்பதிலும், நகரவாசிகளோடு தொடர்பு கொள் வதிலும் நல்ல பலனை தரும் என்று தைபே எதிர்பார்க்கிறது.
இதே சிந்தனை அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களுக்கும் இருந்தால் வாக்காளர்களின் நலன் பற்றி தேர்தலின்போது இலவச இமெயில் வழங்குவோம் என்ற உறுதிமொழி யையும் அளிக்க முன் வர கூடும்.
-மற்ற இலவசங்களை விட அது வரவேற்க கூடியதாகவே இருக்கும்.

—————–

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.