டிவிட்டரில் மகாபாரதம்

mbதம்பிகள் பின்தொடர அம்மாவோடு நடந்து கொண்டிருந்தேன்.அரண்மனை கதவு எங்களுக்கு பின் மூடப்பட்டது.அப்ப‌டியென்றால்
நாங்கள் இளவரசர்கள் என்பது உண்மைதானா?

இப்படி ஆச்சர்யப்படுவது பீமன்.

தொடர்ந்து பீமன்,இது நாள் வரை நாங்கள் காட்டில் வசித்து வந்தோம் என்று குறிப்பிடுகிறான்.முனிவர்கள் தந்தையை மன்னர் என்றே அழைப்பார்கள் .அப்போது என‌க்கு எதுவும் புரியாது என்று பீமன் தொடர்கிறான்.

மேற்கொண்டு பீமன் சொல்வதை தெரிந்துகொள்ளும் ஆர்வம் ஏற்பட்டுவிடுகிரது அல்லவா?
அது தான் மகாபாரதத்தின் சிறப்பு.

ஒரு கதையாக அந்த காவியம் ஏற்படுத்தக்கூடிய ஆர்வம் அபூர்வமானது.

இது வரை எத்தனையோ முறை மகாபாரதம் எத்தனையோ பேரால் சொல்லப்பட்டிருக்கிறது.

ராஜாஜி அதனை வியாசர் விருந்தாக படைத்திருக்கிறார்.பீட்ட்ர் பூரூக் அதனை அற்புதமான நாடகமாக நிகழ்த்தியிருக்கிறார்.
இப்போது சிந்து சீதரன் என்பவர் டிவிட்டரில் மகாபாரத்ததை சொல்லத்துவங்கியிருக்கிறார்.

குறும் வலைப்பதிவு சேவையான டிவிட்டரை புதுமையான வழிகளில் பயன்படுத்தி வருகின்றனர்.இலக்கிய ஆர்வலர்கள் டிவிட்டரை இலக்கியம் படைக்கவும் பயன்படுத்தி வருகின்றனர்.

டிவிட்டர் வடிவிலேயே இலக்கியம் படைக்கும் முயற்சி ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கத்தில் டிவிட்டர் மூலம் இலக்கிய படைப்புகளை கொண்டு செல்லும் முயற்சியும் நடைபெற்று வருகின்றன.

இந்த வரிசையிலேயே அமெரிக்காவில் வசிக்கும் இந்திய பேராசிரியரான சிந்து டிவிட்டர் மூலம் மகாபாரத கதையை சொல்லத்துவங்கியுள்ளார்.

எபிக்ரீடோல்ட் என்னும் டிவிட்டர் முகவரியிலிருந்து அவர் மகாபார‌த கதையை விவரிக்கத்துவங்கியுள்ளார். பீமனின் பார்வையில் அவர் இந்த கதையை சொல்லி வருகிறார்.

காந்தாரியை பாண்டவர்கள் பார்க்கச்செல்வதிலிருந்து அவரது கதை துவங்குகிறது.ஒவ்வொரு டிவீட்டாக (டிவிட்டர் வாசகம்) மகாபாரத கதையை படிப்பது சுவையாகவே உள்ளது.

—-
link;
http://twitter.com/epicretold

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “டிவிட்டரில் மகாபாரதம்

  1. chollukireen

    சுவையான நல்ல விஷயங்களை எல்லோரும் படிக்கலாம்

    Reply

Leave a Comment

Your email address will not be published.