ஒரு கட்டிடம் டிவிட்டர் செய்கிற‌து

oleஅமெரிக்காவில் உள்ள‌ க‌ட்டிட‌ம் ஒன்று டிவிட்ட‌ர் செய்ய‌ துவ‌ங்கியுள்ள‌து தெரியுமா?

பிரபலங்களும் விளையாட்டு நட்சத்திரங்களும் டிவிட்டர் செய்து வருவது தெரிந்த விஷயம் தான். சாமன்யர்களும் கூட ஆர்வத்தோடு டிவிட்டர் மூலம் கருத்துக்க‌ளை பகிர்ந்து கொண்டு வருகின்றனர். ஆனாலும் கூட ஒரு கட்டிட்டம் டிவிட்டர் செய்வது என்பது ஆச்சர்யம் தானே.

மிசிசிபி பல்கலையில் உள்ள கட்டிடம் ஒன்று தான் இப்ப‌டி டிவிட்டர் கட்டிடமாகியிருக்கிறது.

ஆச்சர்யம் இருக்கட்டும் ஒரு க‌ட்டிட‌ம் எப்ப‌டி டிவிட்ட‌ர் செய்ய‌ முடியும் என ச‌ந்தேக‌ம் எழ‌லாம்.இதில் சில‌ சுவார‌சிய‌மான‌ ச‌ங்க‌திக‌ள் உள்ள‌ன‌.சிந்த‌னைக்குறிய‌ விஷ‌ய‌ங்க‌ளும் இருக்கின்ற‌ன‌.

மிசிசிபி ப‌ல்க‌லைக‌ழ‌க‌த்தின் ப‌சுமை செய‌ல்பாடுக‌ள் பிரிவு இந்த‌ முய‌ற்சியை மேற்கொண்டுள்ள‌து.ப‌ல்க‌லையில் உள்ள‌ நூல‌க‌ம் ,விளையாட்டு அர‌ங்க‌ம் ஆகிய‌ க‌ட்டிட‌ங்க‌ளுக்காக‌ டிவிட்ட‌ர் ப‌க்க‌ங்க‌ளை இந்த‌ பிரிவு அமைத்துள்ள‌து.

க‌ட்டிட‌ங்க‌ளுக்காக‌ டிவிட்ட‌ர் ப‌க்க‌ங்க‌ளை ஏற்ப‌டுத்துவ‌து ச‌ரி. ஆனால் கட்டிடத்தால் டிவிட்ட‌ர் ப‌க்க‌த்தை எப்ப‌டி இய‌க்க‌ இய‌லும்.மேலும் ஒரு க‌ட்டிட‌ம் என்ன‌ த‌க‌வ‌ல்க‌ளை ப‌கிர்ந்து கொண்டு விட முடியும்?

இந்த‌ க‌ட்டிட‌ங்க‌ளில் ஸ்மார்ட்மீட்ட‌ர்ஸ் என்னும் சாத‌ன‌ங்க‌ள் பொருத்த‌ப்ப‌ட்டுள்ள‌ன.அதாவது இங்குள்ள மின்சாதன கருவிகளில் இவை பொருத்தப்பட்டுள்ளன. இந்த‌ சாத‌ங்க‌ள் மின் சாத‌ன‌ க‌ருவிக‌ளுக்கு ‘ஐபி ‘முகவரி என்று சொல்லப்படும் த‌னி இண்டெர்நெட் அடையாள‌த்தை ஏற்ப‌டுத்தி த‌ர‌ வ‌ல்ல‌வை.மேலும் அவ‌ற்றின் ப‌ய‌ன்பாடு குறித்த‌ விவ‌ர‌ங்க‌ளையும் செல்போன் அல்லது வயர்லஸ் இணைப்பு மூலம் வெளியிட‌ வைக்க‌ கூடிய‌வை.

இந்த‌ த‌ன‌மையை கொண்டு மின்ச‌க்தி ப‌ய‌ன்பாடு ப‌ற்றிய‌ விவ‌ர‌ங்க‌ள் டிவிட்ட‌ர் மூல‌ம் தெரிவிக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌.அதாவ‌து விள‌க்குக‌ள் எப்போது அணைக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌, எதுவ‌ரை எரிகின்ற‌ன‌ போன்ற‌ த‌க‌வ‌ல‌க‌ள் இந்த‌ சாத‌ன‌ங்க‌ள் மூல‌மே டிவிட்ட‌ர் ப‌திவுக‌ளாக‌ வெளியாகின்ற‌ன‌.

மின்ச‌க்தி ப‌ய‌ன்பாடு ப‌ற்றிய‌ விழிப்புண‌ர்வை உண்டாக்க‌ இந்த‌ த‌க‌வ‌ல்க‌ள் ப‌ய‌ன‌ப‌டும் என்று க‌ருத‌ப்ப‌டுகிற‌து.மின்சக்தி முறையாக‌ ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டுகிற‌தா,வீணாக்க‌ப்ப‌டுகிற‌தா போன‌ற‌ புரித‌லும் சாத்திய‌மாக‌லாம்.ப‌சுமை விழிழ்ப்புண‌ர்வு ஏற்ப‌ட்டு மின்ச‌க்தி ம‌ற்றும் எரிச‌க்தியை சிக்க‌ன‌மாக‌ ப‌ய‌ன்ப‌டுத்த‌ வேண்டும் என்று வ‌லியுறுத்த‌ப்ப‌டும் நிலையில் க‌ட்டிட‌ங்க‌ளே மின் ச‌க்தி ப‌ய‌ன்பாடு ப‌ற்றி டிவிட்ட‌ர் செய்வ‌து ப‌ய‌னுள்ள‌தாக‌ தானே இருக்கும்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

3 Comments on “ஒரு கட்டிடம் டிவிட்டர் செய்கிற‌து

  1. good useful informative news

    Reply
  2. Pingback: ஒரு மரம் டிவிட்டர் செய்கிறது « Cybersimman's Blog

  3. Pingback: ஒரு மரம் டிவிட்டர் செய்கிறது « Cybersimman's Blog

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *