கூகுலை மாற்ற வாருங்கள்

Screen-shot-2009-09-18-at-7_31_57-PMகூகுலின் முகப்பு பக்கம் எளிமையின் அடையாளமாக கருதப்படுவதும்,அதுவே மற்ற தேடியந்திரங்களுக்கான முன்னுதாரணமாகவும் அமைந்துள்ளதும் தெரிந்த‌ விஷ‌ய‌ங்க‌ள் தான்.குறைந்த‌ ப‌ட்ச‌ அம்ச‌ங்க‌ளை ம‌ட்டுமே கொண்ட கூகுலின் முக‌ப்பு ப‌க்க‌ம் அத‌ன் வெற்றியில் முக்கிய‌ ப‌ங்கு வ‌கிப்ப‌தையும் ம‌றுப்ப‌த‌ற்கில்லை.

கூகுல் அவ‌ப்போது முக‌ப்பு ப‌க்க‌த்தில் சிறிய‌ அள‌விலான‌ நுட்ப‌மான‌ மாற்ற‌ங்க‌ளை செய்தாலும் அடிப்ப‌டையில் முக‌ப்பு பக்க‌ம் மாறாம‌லேயே இருந்து வ‌ருகிற‌து.

கூகுல் அபிமானிக‌ளுக்கு இது குறித்து ம‌ன‌க்குறை உண்டா என்று தெரிய‌வில்லை.ஆனால் ஒரு சில‌ர் கூகுலின் ஒரே மாதிரியான‌ முக‌ப்பு ப‌க்க‌த்தால் அலுப்ப‌டைந்திருக்க‌லாம்.அதோடு வ‌டிவ‌மைப்பு பிரிய‌ர்க‌ள் கூகுல் முக‌ப்பு ப‌க்க‌த்தில் ம‌க‌த்தான‌ மாற்ற‌ங்க‌ள் செய்தால் எப்ப‌டி இருக்கும் என்று நினைத்து ஏங்க‌லாம்.

முக‌ப்பு ப‌க்க‌த்தை மாற்றும் எண்ண‌ம் கூகுலுக்கு இருப்ப‌தாக‌ தெரிய‌வில்லை. ஆனால் நீங்க‌ள் நினைத்தால் கூகுலின் முக‌ப்பு ப‌க்க‌த்தை மாற்றிப்பார்க்க‌லாம். அது ம‌ட்டும‌ல்ல‌ உங்க‌ளூக்கு பிடித்த‌மான‌ வ‌டிவ‌மைப்பில் கூகுகை ப‌ய‌ன்ப‌டுத்த‌லாம்.

எப்ப‌டி என்று கேட்கிறீர்க‌ளா?இத‌ற்காக‌ என்றே ‘ரீடிசைன்கூகுல்’ என்ற‌ இணைய‌த‌ள‌ம் உருவாக்க‌ப்ப்ட்டுள்ள‌து.இந்த‌ இணைய‌த‌ள‌ம் கூகுலை மாற்றிய‌மைப்ப‌த‌ற்கான‌ போட்டி ஒண்றை ந‌ட‌த்தி வ‌ருகிற‌து.ஆக‌ நிங்க‌ள் வ‌டிவ‌மைப்பாள‌ர் என்றால் கூகுல் வ‌டிவ‌மைப்பில் செய்ய‌ விரும்பும் மாற்ற‌ங்க‌ளை செய்து அத‌னை இந்த‌ த‌ள‌த்தில் ச‌ம‌ர்பிக்க‌லாம். மிக‌ச்சிற‌ந்த‌ வ‌டிவ‌மைப்பிற்கு ப‌ரிசு அளிக்க‌ப்ப‌டும்.

வ‌டிவ‌மைப்பு தெரியாது என்றாலும் க‌வ‌லையில்லை இந்த‌ த‌ல‌த்தில் ம‌ற்ற‌வ‌ர்க‌ள் ச‌ம‌ர்பித்துள்ள‌ கூகுல் த‌ள‌ வ‌டிவ‌மைப்புக‌ளை பார்த்து அவ‌ற்றில் பிடித்த‌தை தேர்வு செய்து உங்க‌ளுடைய‌ கூகுல் முக‌ப்பு ப‌க்க‌மாக‌ ப‌ய‌ன்ப‌டுத்திக்கொள்ள‌லாம்.

கூகுல் முக‌ப்பு ப‌க்க‌த்தை விருப்ப‌த்திற்கேற்ப‌ மாற்றிய‌மைத்துக்கொள்ளும் வ‌ச‌தியை ப‌ய‌ன்ப‌டுத்தி இத‌னை செய்து கொள்ள‌லாம்.

கூகுல் மாற‌விட்டால் என்ன‌ நீங்களாக‌ மாற்றிக்கொண்டால் போச்சு.

பின்குறிப்பு; இந்த இணைய தலத்தில் இடம்பெற்றுள்ள‌ ஒரு சில‌ வ‌டிவ‌மைப்புக‌ள் உண்மையிலேயே அச‌த்த‌லாக‌ உள்ள‌ன‌.கூகுல் ப‌க்க‌த்தில் புகைப்ப‌ட‌ங்க‌ளை ப‌ய‌ன்ப‌டுத்தியிருப்ப‌தே அவ‌ற்றின் சிற‌ப்பு.

————-
link;
http://redesigngoogle.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.