இசை பிரியர்களுக்கான தேடியந்திரம்.

பாடகர்கள் பற்றியோ இசை கலைஞர்கள் பற்றியோ தகவல் தேவைப்பட்டால் கூகுலில் போய் அவர்களின் பெயரை டைப் செய்து அதன் பிறகு பட்டியலிடப்படும் ஒவ்வொரு பக்கமாக தேடிப்பார்க்க வேண்டிய அவசியமில்லை.அதற்கு பதிலாக இசை தேடியந்திரம் என்று வர்ணித்து கொள்ளும் மியூசிக்கி பக்கம் சென்றால் எல்லா பாடகர்கள் பற்றியும் அதிலேயே தகவல்களை தேடிப்பார்த்து விடலாம்.

எந்த பாடகர் பற்றி தகவல் தேவையோ அவர்களின் பெயரை டைப் செய்தால் அவரைப்பற்றிய விவரங்களை அழகாக ஒரே பக்கத்தில் தொகுத்து அளிக்கிறது. பாடகரின் பயோ டேட்டா ,அமேசானில் கிடைக்கும் அவரது ஆல்பங்கள் ஆகிய தகவல்கள் இடம்பெறுவதோடு தொடர்புடைய பிற கலைஞர்களின் பெயர்களும் சுட்டிக்காட்டபடுகின்றன.

பாடகர்களின் புகைப்பட தொகுப்பும் இணைக்கப்பட்டுள்ளது.அருகிலேயே பாடக்ர்கள் தொடர்பாக ரசிகர்கள் டிவிட்டரில் பகிர்ந்து கொள்ளும் கருத்துக்களையும் பார்க்க முடிகிறது.

ஒவ்வொரு பாடகர்களுக்கான விக்கிபீடியா பக்கம் போல தகவ்ல்கள் இடம் பெறுகின்றன.

இசை கலைஞர்கள் பற்றிய முழுமையான தகவல் திரட்டி என்று சொல்ல முடியவிட்டாலும் ஒரே இடத்தில் அவர்களை பற்றிய விவரங்களை தேடுவதற்கான எளிய வழி என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த தேடியந்திரத்தில் மற்றொரு ஆச்சர்யம் என்னவென்றால் உண்மையிலேயே எல்லா பாடகர்கள் மற்றும் இசை கலைஞர்கள் பற்றிய தகவலை தருகிறது என்பது தான்.காரணம் பொதுவாக் இது போன்ற இசை தளங்களில் பெரும்பாலும் மேற்கத்திய இசை கலைஞர்கள் தொடர்பான தகவல்களை மட்டுமே பெற முடியும்.

ஆனால் இதில் ஆச்சர்யப்படும் வகையில் நம் நாட்டி லதா மங்கேஷ்கரை தேடினாலும் தகவல் தருகிறது.பீ சுசிலா பற்றி தேடினாலும் தகவல் தருகிறது.

தேடியந்திர முகவரி;http://www.musikki.com/

0 thoughts on “இசை பிரியர்களுக்கான தேடியந்திரம்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *