ஒலிமயமான எதிர்காலம் இணையத்தில் தெரிகிறது.

மவுனத்தில் ஆழ்ந்திருக்கும் இண்டெர்நெட்டை ஒலிமயமாக்குவோம் வாருங்கள் என்று அழைப்பு விடுக்கிறது சவுண்டு கிளவுட்.

அதற்கேற்ப ஒலி கோப்புகளை எளிதாக பகிர்ந்து கொள்ளும் வகையில் இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இணையத்தில் பாடல்களை கேட்கலாம்,ஸ்கைப் போன்ற சேவை மூலம் தொலைபேசியில் பேசலாம் என்றாலும் என்றாலும் இண்டெர்நெட் பிரதானமாக பார்ப்பதற்கும் படிப்பதற்குமானதாகவே இருக்கிறது.ஆடியோ வசதி கொண்ட இணையதளங்கள் மற்றும் ஆடியோ புத்தகங்கள் போன்ற சேவைகள் அதிகம் இருந்தாலும் பெரும்பாலும் இண்டெர்நெட் மவுனமாகவே இருக்கிறது.

இந்த நிலையை கொஞ்சம் மாற்றி இணையத்தை ஒலிமயமாக்கும் உத்தேசத்தோடு சவுண்டு கிளவுட் அறிமுகமாகியுள்ளது.

ஒலிகளை பகிர்ந்து கொள்வதற்கான இந்த தளம் அடிப்படையில் இசை துறையில் ஆர்வம் கொண்டவர்களுக்கானது என்றாலும் ஒலியையும் ஓசையையும் விரும்பும் எவரும் இந்த சேவையை பயன்படுத்தலாம்.ஒலியை மையமாக கொண்ட உரையாடலில் ஈடுபட்டு இசை மயமான நட்பை வளர்த்து கொள்ளலாம்.

ஒலியை பகிர்வதை சுலபமாக்கி இருப்பதோடு ஒலியை காட்சி ரூபத்தில் புரிந்து கொள்ள உதவுவதுமே இந்த தளத்தின் தனிச்சிறப்பு.

ஒலி கோப்புகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறவர்கள் இந்த தளத்தில் உறுப்பினராகி தங்கள் வசம் உள்ள ஆடியோ வடிவத்தை பதிவேற்றலாம்.அல்லது இந்த தளத்திலேயே ஒலிப்பதிவு செய்தும் பகிர்ந்து கொள்ளலாம்.

இதன் பிறகு தான் சுவாரஸ்யமே இருக்கிறது.பதிவேற்றிய ஒலி கோப்பை பேஸ்புக்,டிவிட்டர் மூலம் நட்பு வட்டாரத்தில் பகிர்ந்து கொள்ளலாம்.நண்பர்கள் அந்த ஒலி கோப்பையை கேட்டு ரசித்து கருத்து தெரிவிக்கலாம்.

ஆடியோ கோப்புகள் ஒலிபரப்பாகும் போது அவற்றின் ஒலி வடிவம் வரைபட சித்திரம் போல காட்சி ரீதியாகவும் திரையில் தோன்றுகின்றன.இந்த சித்திரம் கண்ணுக்கு விருந்தாக அமைவதோடு ஆடியோவை கேட்டு ரசித்தவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும் போது வரைபடத்தில் அதற்கான பகுதியை குறிப்பிட்டு கருத்து சொல்ல முடியும்.

மிகவும் நுட்பமான விஷயங்களை சுட்டிக்காட்டி விவாதிக்க இது மிகவும் உதவியாக இருக்கும்.

இசையமைப்பாளர்கள மற்றும் இசை கலைஞர்கள் தாங்கள் உருவாக்க்கிய புதிய பாடல் அல்லது இசை குறிப்பை சமர்பித்து சக கலைஞர்கள் மற்றும் ரசிகர்களின் கருத்துக்களை கேட்டறிய இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளலாம்.

ஆடியோ கோப்புகளை பகிர்ந்து கொள்வது போலவே மற்றவர்கள் சம்ர்பித்த கோப்புகலையும் கேட்டு ரசிக்கலாம்.இதன் மூலம் புதிய இசையை அடையாளம் கண்டு மகிழும் வாய்ப்பும் உள்ளது.மேலும் டிவிட்டரில் இருப்பது போல இதிலும் பின் தொடரும் வசதி இருக்கிறது.எனவே யாருடைய இசை கோப்பு கவர்கிறதோ அவரை பின்தொடரலாம்.கருத்து பரிமாற்றம் மூலம் உரையாடலில் ஈடுபட்டு நட்பை வளர்த்து கொள்ளலாம்.

குறிப்பிட்ட இசை வகையில் ஆர்வம் கொண்டவர்கள் தங்களுக்குள் ஒரு குழுவை உருவாக்கி கொண்டு செயல்படவும் வாய்ப்புள்ளது.

இசை களைஞர்கள் இந்த சேவை மூலமாக தங்கள் இசையை பகிர்ந்து கொண்டு புதிய ரசிகர்களை தேடிக்கொள்ள முடியும்.அதே நேரத்தில் நிபுணர்களின் கருத்துக்களை அறிந்து தங்கள் படைப்பை மேலும் பட்டை தீட்டி கொள்ளலாம்.

இப்படி இசையின் அடிப்படையில் கருத்து பரிமாற்றத்தில் ஈடுபட்டு நட்பை வளர்த்து கொள்ள உதவுவதன் மூலம் இந்த தளம் மாபெரும் இணைய இசை சங்கமமாக உருவாகியுள்ளது.

இசை பிரியர்கள் இதில் உள்ள உறுப்பினர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களில் தங்களுக்கு பிடித்தமானவர்களை தேர்வு செய்து தொடர்பு கொள்ளலாம்.புதிய குழுக்களை உருவாக்கி கொள்ளலாம்.

இசை கலைஞரான அலாக்சாண்டர் ஜங் என்பவர் தனது நண்பரோடு சேர்ந்து இந்த தளத்தை அமைத்துள்ளார்.இசை குறிப்புகளை தனது நட்பு வட்டாரத்தில் பகிர்ந்து கொள்ள முறப்ட்ட போது அதற்கேற்ற இணைய சேவை இல்லாததால் வெறுத்து போய் தானே இத்தகைய சேவைய உருவாக்க விரும்பி சவுண்ட் கிளவுட்டை உண்டாக்கியுள்ளார்.

அவர் விரும்பியது போலவே இப்போது இசைத்துறையை சேர்ந்தவர்கள் இந்த தளத்தை தான் விரும்பி பயன்படுத்தி வருகின்றனர்.

அது மட்டும் அல்லாமல் சாமான்யர்களும் கூட இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.இசை மட்டும் அல்லாது,பேச்சு,உரையாடல்,பாட்காஸ்டிங்,யூடியூப் கோப்பு போன்றவற்றையும் இந்த தளத்தின் வழியே பகிர்ந்து வருகின்றனர்.

இதன் நிறுவனரே கூட நினைத்து பார்த்திராத வகையில் எல்லாம் இணையவாசிகள் இந்த சேவையை பயன்படுத்த துவங்கியுள்ளனர்.

இணையதள முகவரி;http://soundcloud.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “ஒலிமயமான எதிர்காலம் இணையத்தில் தெரிகிறது.

  1. யூர்கன் க்ருகியர்

    தகவலுக்கு நன்றி ..

    “Tamil” என்று டைப் செய்து தேடிப்பார்த்தேன்.. நிறைய சுவராஸ்யமான ஒலிக்கோப்புகள் கிடைத்தது

    Reply
    1. cybersimman

      மிக்க மகிழ்ச்சி நண்பரே.இது தான் இந்த தளத்தின் பலம்.

      Reply

Leave a Comment

Your email address will not be published.