பொன்மொழிகளுக்கான தேடியந்திரம்.

திருக்குறளை கூறிவிட்டு கம்பர் எழுதியது தானே என்று கேட்பது போன்ற காமெடிகளை தமிழ் சினிமாவில் பார்த்து அலுத்து போயிருக்கலாம் என்றாலும் மேதைகள் சொன்னதை தவறாக மேற்கோள் காட்டுவது பலருக்கும் நடக்க கூடியது தான்.சில மேற்கோள்கள் நன்றாக நினைவில் இருக்கும் ஆனால் அதனை சொன்னவர் யார் என்பது நினைவில் இருக்காது.அதே போல சில பொன்மொழிகளில் சரியான வாசகங்கள் தெரியாமல் இருக்கும்.

இது போன்ற நேரங்களில் மேற்கோள்களின் வாசகங்களை தேட விரும்பினாலோ,அல்லது அதனை சொன்னது யார் என்று தெரிந்து கொள்ள விரும்பினாலோ அதற்காக என்றே ஒரு தேடிய்ந்திரம் இருக்கிறது.

கோட்காயில் என்னும் இந்த தேடியந்திரத்தை பொன்மொழிகளுக்கான கூகுல் என்று சொல்லலாம்.

பிளேட்டோவோ தாகூரோ பெர்னார்டு ஷாவோ சொன்ன பொன்மொழிகள் தேவைப்பட்டால் இந்த தேடியந்திரத்தில் அவர்களின் பெயரை டைப் செய்தால் போதும் பொன்மொழிகளாக வந்து நிற்கின்றன.அதே போல நினைவில் உள்ள பொன்மொழி வாசக‌ங்களை டைப் செய்தாலும் அதற்கான சரியான பொன்மொழி பட்டியலிடப்படுகிற‌து.

குறிப்பிட்ட பொருள் தொடர்பான பொன்மொழிகளையும் தேடலாம்.

எளிமையான தளம் தான்.ஆனால் அதன் வேலையை நேர்த்தியாக செய்கிறது.

பொன்மொழி பற்றிய பதிவை பொன்மொழியுடனேயே நிறைவு செய்யலாம்.

நல்ல கல்வி என்பது மகிழ்ச்சிக்கான இன்னொரு பெயர்.சொன்னவர் ஆன் பிலாட்டோ என்கிறது இந்த தளம்.

இணையதள முகவரி;http://quotecoil.com/

————

பொன்மொழி தொடர்பான இந்த பதிவையும் படித்துப்பாருங்கள்;http://cybersimman.wordpress.com/2011/09/17/quote-3/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

3 Comments on “பொன்மொழிகளுக்கான தேடியந்திரம்.

  1. shakkthi

  2. Pingback: பொன்மொழிகளுக்கான வலைவாசல். « Cybersimman's Blog

  3. Pingback: இசை மேதைகளின் பொன்மொழிகளை தரும் இனையதளம் . « Cybersimman's Blog

Leave a Comment to shakkthi Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *