பொன்மொழிகளுக்கான வலைவாசல்.

qotables

கோட் காயில்‘ தளம் பொன்மொழிகளுக்கான கூகுல் என்றால் கோட்டபில்ஸ் தளத்தை பொன்மொழிகளுக்கான யாஹூ என்று சொல்லலாம்.அதாவது அது பொன்மொழி தேடியந்திரம் என்றால் இது பொன்மொழிகளுக்கான வலைவாசல்.

பொதுவாக இணைய உலகில் வலைவாசல் என்னும் கருத்தாக்கமே தேய்பிறையாகி கொண்டிருக்கிற‌து.ஒரு காலத்தில் இணையய உலகின் நுழைவு வாயில் என்று வர்ணிக்கப்பட்ட யாஹு இன்று களையிழந்த இணைய மாடமாகிவிட்டது.

இந்த சூழலில் யாஹூவுடன் ஒப்பிடக்கூடிய எண்ணம் ஏற்படுவதே வியப்பானது தான்.ஆனால் கோட்டபில்ஸ் தளம் இந்த எண்ணத்தை தான் ஏற்படுத்துகிறது.

வலைவாசல் தளங்கள் எப்படி செய்திகள்,தகவல்கள்,தளங்கள் என சக‌லவிதமான தகவல்களையும் ஒரே இடத்தில் வழங்குகின்றனவோ அதே போல இந்த தளம் பொன்மொழிகள் தொடர்பான விரிவான அனுபவத்தை வழங்குகிறது.இந்த தளம் வலைவாசல் மட்டும் அல்ல;ஒருவிதத்தில் பொன்மொழிகளுக்கான விக்கிபிடியா இன்னொரு விதத்தில் பொன்மொழி வலைப்பின்னல் சேவை.

காரணம் ,இங்கு பொன்மொழிகளை தேடலாம்.பகிர்ந்து கொள்ளலாம்.குறித்து வைக்கலாம்.கருத்து தெரிவிக்கலாம்.பொன்மொழிகளை மையமாக கொண்டு இன்னும் நிறைய விஷயங்களை செய்யலாம்.

மொத்தத்தில் பொன்மொழி பிரியர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தக்கூடிய தளம் தான்.

பொன்மொழிகளுக்கான இணைய இருப்பிடம் என்று தான் இந்த தளம் தன்னை வர்ணித்து கொள்கிற‌து.இணையவாசிகள் இங்கு புதிய பொன்மொழிகளை பலவிதங்களில் தெரிந்து கொள்ளலாம்.முகப்பு பக்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பொன்மொழி வாசகங்கள் வரவேற்பதோடு சமீபத்தில் சேர்க்கப்பட்டவை,அதிகம் பார்க்கப்பட்ட பொன்மொழிகள் போன்ற தலைப்புகளின் கீழும் பொன்மொழிகளை தெரிந்து கொள்ளலாம்.இதை தவிர பொன்மொழிகள் அவற்றின் வகைகளுக்கு ஏற்பவும் பொருத்தமான குறிச்சொற்களோடு இடம் பெறுகின்றன.

பொன்மொழிகள் அவசர தேவை என்றால் நேராக தேடல் கட்டத்தில் குறிச்சொல்லை அடித்து தேடிக்ககொள்ளலாம்.இல்லை என்றால் விலாவாரியாக பொன்மொழிகளை அலசி ஆராயலாம்.

பொன்மொழிகளை படித்து ரசித்தவுடன் அவற்றை பிடிச்சிருக்கு என்று நமக்கான பக்கத்தில் குறித்தும் வைக்கலாம்.(உறுப்பினர்களுக்கான வசதி இது)இதற்கான பொன்மொழிகளின் இடது பக்கத்தில் உள்ள இதயத்தின் சின்னத்தை கிளிக் செய்தால் போதும்.

நாளைடைவில் நமது பக்கத்திலும் நாம் விரும்பிய பொன்மொழிகள் சேர்ந்து விடுவதோடு எப்போதாவது பொன்மொழியை நினைவுபடுத்தி கொள்ள முயன்றால் எப்போது எந்த இடத்தில் பார்த்தோம் என்றெல்லாம் குழம்பி தவிக்க தேவையில்லாமல் நமது பட்டியலில் இருந்து சுலபமாக தேடி எடுத்துவிடலாம்.

பொன்மொழிகள் பிடித்திருந்தால் என்ன செய்வோம் ,நண்பர்களிடம் சொல்ல நினைப்போம் அல்லவா அதையும் இங்கிருந்தே செய்து விடலாம்.பேஸ்புக் மறும் டிவிட்டர் வழியே பொன்மொழிகளை பகிர்ந்து கொள்ளும் வசதியும் இருக்கிற‌து.

அதே போல நமக்கு மிகவும் பிடித்த பொன்மொழிகளை இங்கு சம்ர்பிக்கவும் செய்யலாம்.அதிக பட்சம் 75வார்த்திகளுக்குள் இருக்க வேண்டும் என்றும் ஆபாசமாகவோ அவதூறாகவோ இருக்க கூடாது என்பது மட்டும் தான் நிபந்தனை.

பொன்மொழிகளின் கீழ் எப்போது யாரால் சமர்பிக்கப்பட்டவை போன்ற விவரங்காளையும் காணலாம்.விரும்பினால் பொன்மொழிகள் குறித்து அவை பாதித்தவிதம் குறித்தும் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம்.இவை போதாதென்று பொன்மொழிகளுக்கான வலைப்பதிவும் இருக்கிறது.

இணையதள முகவரி;http://quotabl.es/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “பொன்மொழிகளுக்கான வலைவாசல்.

  1. உங்கள் வலைப்பூவின் இந்தப் புதிய வடிவம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. கண்ணுக்கு இதமாகவும், எழுத்துக்கள் தெளிவாகவும் தெரிகின்றன. வாசிப்பதற்கு எளிதாக இருக்கிறது. தலைப்புக்களை வித்தியாசப்படுத்த சாய்வு எழுத்துக்களைப் பயன்படுத்தியிருபதும் நல்ல யோசனைதான் (இணையத்தில் தமிழ் எழுத்துருக்கள் அதிகம் இல்லை என்பது வெட்கக்கேடு. இத்தனைக்கும் நமது ரூபாய்க்கான புதிய குறியீட்டை உருவாக்கியவர் ஒரு தமிழர்!). பதிவுகள் எப்போதும்போலவே புதுமையாகவும் பயனுள்ளவையாகவும் இருக்கின்றன. நான் தினமும் வந்து பார்ப்பதும் அதனால்தான்.

   Reply
   1. cybersimman

    நன்றி நண்பரே

    Reply
 1. நன்றி நீங்கள் கொடுத்த இரண்டு லின்கையும் http://quotecoil.com/, http://quotabl.es/ பேவரைட் செய்து விட்டேன். எல்லாமே ஆங்கிலம். பொன்மொழிகள் தமிழில் இருந்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.

  Reply
  1. cybersimman

   தமிழ் பொன்மொழி தளத்தை உருவாக்குவோம்.

   Reply
 2. Pingback: இசை மேதைகளின் பொன்மொழிகளை தரும் இனையதளம் . « Cybersimman's Blog

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *