எப்படி எல்லாம் இணையதளங்கள் இருக்கின்றன என்று நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.இப்படி வியக்க வைக்கும் தளம் ஒரு கேள்வியை கேட்டு அந்த கேள்விக்கு பதில் அளிக்கிறது.அவ்வளவு தான் அதை தவிர வேறு எதுவும் செய்யவில்லை அந்த தளம்.
இப்போது விண்வெளியில் எத்தனை பேர் இருக்கின்றனர்?இது தான் அந்த கேள்வி! இந்த கேள்வி தான் அந்த தளத்தின் முகவரியும் கூட.( http://www.howmanypeopleareinspacerightnow.com/ )
இந்த கேள்விக்கு தான் அந்த தளம் பதில் அளிக்கிறது.இப்போது இந்த கேள்விக்கான பதில் 6 என குறிப்பிடப்பட்டுள்ளது.அவர்கள் அனைவரும் விண்வெளியின் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ளனர் என்ற உப தகவலையும் தருகிறது.
அவ்வளவு தான் மொத்த தளமும் .வேறு எந்த விவரமும் கிடையாது.பதிலுக்கு அருகே விண்வெளி வீரரின் புகைப்படம் இருக்கிறது.
பெரிய அளவில் பயனுள்ள தளம் என்று சொல்ல முடியாது.ஆனால் சுவாரஸ்யமான இணையதளம் தான்.
விண்வெளி ஆய்வு மையத்திற்கு வீரர்கள் போய் வந்து கொண்டிருகின்றனர்.அதற்கேற்ப இந்த கேள்விக்கான பதில் புதுப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
அவப்போது விஜயம் செய்து பார்த்தால் இப்போது விண்வெளியில் எத்தனை பேர் இருக்கின்றனர் என்று தெரிந்து கொள்ளலாம்.
ஒரு வெற்றிகரமான இணையதளத்தை உருவாக்குவது எப்படி என விடை தேடுபவர்கள் எளிமைக்கும் புதுமைக்குமான உதாரணமாக இந்த தளத்தை கொள்ளலாம்.
இணையதள முகவரி;http://www.howmanypeopleareinspacerightnow.com/