உலகின் மறுபக்கம் காட்டும் இணையதளம்.

உலகம் உருண்டை என்பது உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.ஆனால் இதன் முழு அர்தத்தை எப்போதாவது யோசித்து பார்த்திருக்கிறிர்களா? உலகின் ஒவ்வொரு பகுதிக்கும் மறு பக்கம் இருக்கிறது என்பதை நினைத்து பார்த்திருகக்கிறீர்களா?

அதாவது உலக பந்தின் எந்த ஒரு புள்ளிக்கும் நேர் எதிரே அதன் மறு பக்கம் இருக்கும் தானே!பூகோள நோக்கில் இதனை ஆன்டிபாட் என அழைக்கின்ற‌னர்.

பூமியின் ஒரு பகுதியில் இருந்து நேர் எதிரே உள்ள பகுதி இவ்வாறு குறிப்பிடப்படுகிறது.பிரிட்டனுக்கும் அயர்லாந்துக்கும் ஆஸ்திரேலியாவும் நியுசிலாந்தும் இப்படி நேர் எதிரே மறு முனையில் அமைந்திருக்கின்றன.

இப்படி உலகின் ஒவ்வொரு பகுதிக்கும் மறு பகுதி இருக்கிறது.இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் 4 சதவீத பகுதிகளுக்கு மட்டுமே மறு பகுதி நிலமாக அமைந்துள்ளது.மற்றபடி எல்லா மறு மகுதிகளும் கடலும் நீரும் தான்.

சரி இதை படித்ததும் உலகின் ஒவ்வொரு பகுதிக்கும் மறு பகுதி என்பதை கண்டறியும் ஆர்வம் உங்களுக்கு ஏற்பட்டாலோ அல்லது குறைந்த படம் உங்கள் நகரின் மறு பகுதியை அறிய விரும்பினாலோ ஆன்டிபாட்ஸ் மேப் இணையதளம் அதற்கான வழி காட்டுகிறது.

இந்த தளத்தில் உள்ள கூகுல் வரைபடத்தில் எந்த இடத்தில் கிளிக் செய்தாலும் வேறு ஒரு வரைபடத்தில் அந்த பகுதிக்கான மறு பகுதியை காட்டுகிறது.

இதே போல ஆன்டிபாடர் என்னும் இணையதளமும் உலகின் மறு பகுதியை காட்டுகிறது.இந்த தளத்தில் குறிப்பிட்ட நகரை டைப் செய்தால் அதன் மறு பகுதியை வரைபடத்தில் காட்டுகிறது.

————–

http://www.antipodemap.com/
]
———-
http://www.antipodr.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “உலகின் மறுபக்கம் காட்டும் இணையதளம்.

  1. நன்றி நன்றி உங்கள் எல்லா பதிவகளையும் காண்கின்றேன். உங்கள் பணி மேலும் மேலும் சிறக்கட்டும்.

    Reply
    1. cybersimman

      நன்றி நண்பரே.

      Reply
  2. a good info . thank for sharing dear bro .

    (and also ,at here unable to type our Tamil ,so pls somrthing to add )

    Reply
  3. வலைஉலகின் சிறந்த தளங்களை அறிமுகப்படுத்தும் தங்கள் சேவை என்றும் தொடரட்டும். வாழ்த்துக்கள்

    Reply
    1. cybersimman

Leave a Comment

Your email address will not be published.