மாற்று இணையதளங்களை தேட!.

ஒரே போன்ற தன்மை கொண்ட இணையதளங்களை தேட உதவும் இணையதளங்களில் வெப்சைட்ச்லைக்.ஆர்ஜி இணையதளத்தியும் சேர்த்து கொள்ளலாம்.

எந்த இணையதளத்தை சமர்பித்தாலும் அதே போன்ற இணையதளங்களை முன்வைக்கும் இந்த தளம் இதே போன்ற சேவையை வழங்கும் வேறு எந்த தளத்தையும் விட இதனை சிறப்பாக நிறைவேற்றித்தருவதாக பெருமை பட்டு கொள்கிற‌து.அது மட்டும் அல்லாமம் ஒரு நாளில் பல முறை இதில் பட்டியலிடப்படும் இணையதளங்கள் புதுப்பிக்கப்படுவதால் ஒரே மாதிரியான தளங்கள் தொடர்பான சமீபத்திய தகவல்களை தன்னகத்தே கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கிறது.

தேடலில் கூகுல் எப்படி தனி உத்தியை பின்பற்றுகிறதோ அதே போல எங்களுக்கும் ஒரே மாதிரியான தளங்களை பட்டியலிட தனி உத்தி இருப்பதாகவும் இந்த தளம் சொல்கிறது.இணையதள‌ங்களின் அலெக்சா ரேங்க் உள்ளிட்ட அம்சங்களை கருத்தில் கொண்டு செயல்படுவதாகவும் சொல்கிறது.

ஒவ்வொரு தேடலுக்கும் குறைந்த பட்சம் 50 இணையதளங்களை கொண்டு வந்து கொட்டுவதாக‌வும் தெரிவிக்கிறது.

மற்றவர்கள் சமீபத்தில் தேடிய த‌ளங்களின் பட்டியலும் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆக குறிப்பிட்ட இணையதளம் போலவே உள்ள இணையதளங்கள் அல்லது அதற்கான மாற்று தளங்களை தேட விரும்பினால் இதனை பயன்படுத்தலாம்.

இதே போன்ற மற்ற இணையதளங்களை விட சிறப்பாக இருக்கிறதா என்று பயன்படுத்தி பார்த்து சொலுங்கள்.மற்ற தளங்கள் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.

இணையதள முகவரி;http://www.websiteslike.org/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “மாற்று இணையதளங்களை தேட!.

  1. LVISS

    I tried youtube and got the names of more than 40 like sites . That is something . Thanks for sharing

    Reply
  2. Pingback: இணையதளங்கள் தேட புதிய வழி. | Cybersimman's Blog

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *