உங்கள் மகன் உயர்ந்த மனிதனாவானா?சொல்லும் இணையதளம்!.

என்னமா வளர்ந்துட்டான்! எல்லோரும் வளரும் பிள்ளைகளை பார்த்து வியந்து சொல்வது தான்.பெற்றோர்களுக்கே கூட பிள்ளைகள் வளரும் வேகம் வியப்பையே ஏற்படுத்தும்.நேற்று சின்ன பிள்ளையாக பார்த்த பையனை இன்று பார்த்தால் நெடுநெடுவென வளர்ந்து நிற்பது வாழ்க்கை தரும் ஆச்சர்யங்களில் ஒன்று தான்.

எல்லாம் சரி!பிள்ளைகள் வருங்காலத்தில் எத்தனை உயரமாக வளர்வார்கள்? என்பதை அறிய முடியுமா? என்று எப்போதேனும் நினைத்து பார்த்திருக்கிறீர்களா?

இந்த கேள்வியை தான் ஹைட் பிரடிக்டர் இணையதளமும் கேட்கிறது.இந்த கேள்விக்கான பதிலையும் தருகிறது.அதாவது பிள்ளைகள் வருங்காலத்தில் எந்த அளவுக்கு உயரமாக வளருவார்கள் என்பதை அவர்களின் தற்போதைய அம்சங்களை வைத்து கணக்கிட்டு சொல்கிறது இந்த தளம்.

இப்படி வளரும் பிள்ளைகளின் உயர்த்தை கணக்கிட்டு சொல்வதற்காக என்றே உருவாக்கப்பட்டுள்ள தளம் இது.

பிள்ளை ஆணா பெண்ணா ,வயது என்ன? எடை என்ன? அப்பா அம்மாவின் உயரம் என்ன என்ற விவரங்களை இந்த தளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தில் சமர்பித்தால் அதனடிப்படையில் எதிர்காலத்தில் அவர்கள் எந்த அளவுக்கு உயரமாக இருப்பார்கள் என்பதை இந்த தளம் ஊகித்து சொல்கிறது.

சிறுவர் சிறுமிகளின் வளர்ச்சி தொடர்பான கடந்த கால ஆய்வு மற்றும் புள்ளிவிவரங்களை அடிப்படையாக கொண்டு இந்த தளம் செய்லபடுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த யூகம் எந்த அளவுக்கு துல்லியமாக இருக்கும் என்று தெரியவில்லை.ஆனால் சுவாரஸ்யமான எளிமையான சேவை.

பிள்ளைகள் பற்றி பெற்றோர்களுக்கு பலவித கனவுகளும் கேள்விகளும் இருக்கும்.அதில் உயரம் தொடர்பான கேள்விக்கு யூக‌த்தின் அடிப்படையில் அழகான பதிலை சொல்கிறது இந்த தளம்.

கூடவே இயற்கையாகவே உயராமாக வளர்வத்ற்கான குறிப்புகளை வழங்கும் தளத்திற்கும் இணைப்பு தந்துள்ளது.

இணையதள முகவரி;http://heightpredictor.w3ec.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “உங்கள் மகன் உயர்ந்த மனிதனாவானா?சொல்லும் இணையதளம்!.

  1. தொடர்ந்து நல்ல பதிவுகளை தந்து கொண்டிருக்கிறீர்கள். பதிவுகளுக்கு பின்னர் உள்ள தங்கள் உழைப்பு கண்டு எப்போதும் வியப்பேன். வாழ்த்துக்கள்

    Reply
    1. cybersimman

      பாராட்டுக்கு நன்றி.இந்த உற்சாக வார்த்தைகள் தான் உழைக்க தூண்டுகிறது.’

      அன்புடன் சிம்மன்

      Reply

Leave a Comment

Your email address will not be published.