உசேன் போல்ட் என்னும் மனிதன்.

உசேன் போல்டு யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அவரது டிவிட்டர் பக்கத்திற்கு சென்று பார்க்க வேண்டும்.தடகளத்தில் அவர் தான் ராஜா என்பது உலகிற்கே தெரிந்த விஷயம்.

லண்டன் ஒலிம்பிக்கில் மீண்டும் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கத்தை வென்று தடகளத்தில் தனக்கு நிகராக யாரும் இல்லை என்று அவர் உணர்த்தியிருக்கிறார்.

ஆனால் உசேன் போல்ட் தடகள ராஜா மட்டும் அல்ல.தங்கமான மனிதரும் தான்!.

தடகள சாம்பியனின் அடையாளம் சாதனைகளும் வெற்றிகளும் என்றால் தன்னடக்கமும் ,தலைவணங்கும் பண்பும் நல்ல மனிதனுக்கான இலக்கணம்.

உசேன் போல்டிடம் இரண்டுமே நிறைந்திருக்கிறது.

போல்ட்டின் நல்ல மனதிற்கு அவரது டிவிட்டர் பக்கமே சான்றாக உள்ளது.

தங்கப்பதக்கத்தை வென்று உலகின் அதிவேக மனிதன் என்னும் பட்டத்தை தக்க வைத்து கொண்ட போல்ட் வெற்றி செருக்கில் முழங்கியிருக்கலாம்.நானே ராஜா என மார் தட்டியிருக்கலாம்.

ஆனால் அவர் அதையெல்லாம் செய்யவில்லை.

மாறாக ‘என்னை ஆதரித்ததற்கும் நம்பியதற்கும் ரசிகர்களுக்கும் நன்றி,இந்த பயணத்தில் நீங்களும் என்னுடன் இருந்தீர்கள்’என்று தனது வெற்றிக்காக ரசிகர்களூக்கு டிவிட்டர் மூலம் நன்றி தெரிவித்து கொண்டார்.

வெற்றியை கூட அவர் தங்கம் வென்றுவிட்டேன் என அறிவிக்கவில்லை.ஒலிம்பிக் இணையதள அறிவிப்பை அப்படியே மறு டிவீட் செய்திருந்தார்.இன்னும் சில டிவீட்கள் கழித்து சிஎன்என் செய்தியை மறு டிவீட் செய்தார்.

அது மட்டும் அல்ல டிவிட்டர் மூலம் அவரது வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்திருந்த இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் யுவராஜ் சிங்கின் வாழ்த்தை கவனித்து அதற்கு நன்றியும் தெரிவித்திருந்தார்.

அதற்கு அடுத்த குறும்பதிவில் வெற்றிக்களிப்பின் சாயலே இல்லாமல் நான் தயார்,மீண்டும் ஓட! என்று கூறியிருந்தார்.

உசேன் போல்ட் புது யுகத்தின் சாம்பியன் தான்.

தன்னை ஆராதிக்கும் ரசிகர்களோடு தொடர்பு கொள்வது தனது கடமை என்பதை உணர்ந்தவராக ஒலிம்பிக் வெற்றி நிமிடங்களுக்கு பிறகு அவர் டிவிட்டர் மூலம் தனது எண்ணங்களை ரசிகர்களோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

கிட்டத்தட்ட போல்டின் கரம் பற்றி அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் உணர்வையும் அதனை அவர் நன்றியோடு ஏற்று கொள்ளும் உணர்வை இந்த குறும்பதிவுகள் தருகின்றன.

போல்ட்டின் கடந்த கால குறும்ப‌திவுகளை பார்வையிட்டால் ஒலிம்பிக்கிற்கு அவர் தயாராகி வந்திருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது.எல்லாமே மிகவும் ஆழமானவை என்றோ போல்ட் என்னும் சாதனையாளர் பற்றிய உள்ளொளியை தரக்கூடியது என்றோ சொல்வதற்கில்லை.

ஆனால் பயிற்சிக்காக ஜிம்மிற்கு செல்வது பற்றியும் ,கடினாமான உடற்பயிற்சிக்கு பிறகு களைப்படைந்தது பற்றியும் அவர் குறிப்பிட்டிருந்தார்.இடையே தனது ஐபோன் விளையாட்டு பற்றியும் பிபிசி பேட்டி குறித்தும் தகவலை பகிர்ந்து கொண்டார்.

இன்னொரு குறும்பதிவில் ஆதரவுக்கு நன்றி லண்டனில் சந்திப்போம் என்று கூறியிருந்தார்.

இண்ஸ்டாகிராம் செயலி மூலம் நிறைய புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளவும் செய்தார்.(ரசிகர்களூக்கு இதை விட வேறு என்ன வேண்டும்)

ரசிகர்களோடு தொடர்பு கொள்ள விரும்பும் அவரது விருப்பதை இந்த குறும்பதிவுகள் உணர்த்த தவறவில்லை.அதோடு போல்ட்டின் தடகள் வாழ்க்கை பற்றிய மின்னல் கீற்றுகளாகவும் அமைந்திருந்தன.

ஐஸ் குளியல் அடுத்து கொண்டது பற்றியும்,ஒரு நாள் ஆசிரியராக செயல்பட்டது குறித்தும்,சிறுஅவர்களை சந்தித்து உரையாடி மகிழ்ந்தது பற்றியும் ஆர்வத்தோடு குறிப்பிட்டிருந்தார்.உசேன் போல்ட் என்னும் மனிதர் பற்றி உணர்த்தும் கீற்றுகளாக இவை அமைந்திருந்தன.

லண்டன் ஒலிம்பிக் நெருங்கியதும் ஒலிம்பிக் கிராமத்திற்கு வருகை தந்தது பற்றியும் துவக்க விழாவுக்கு தயாராவது பற்றியும் குறும்பதிவிட்டிருந்தார்.

துவக்க விழாவின் போது ஜமைக்கா தேசியக்கொடி ஏந்தி சென்றதை பெருமையோடு குறிப்பிட்டிருந்தார்.

இப்போது ஒலிம்பிக்கில் தங்கம் வென்று அந்த மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி நன்றி தெரிவித்து கொண்டிருக்கிறார்.அப்படியே பதக்கம் வழ்னக்கும் நிகழ்ச்சிக்கு தயாராவதையும் குறிப்பிட்டிருந்தார்.

போல்ட்டின் இந்த சாதனை தருணத்தில் டிவிட்டரில் அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை கடதிந்ருப்பது மிகவும் பொருத்தமானது என்றே சொல்ல வேண்டும்.

போல்ட்டிற்கு பேஸ்புக் பக்கமும் இருக்கிறது.சொந்த இணையதளமும் இருக்கிறது.அவரது இணையதளத்தில் கோட் சூட்டில் ஒரு கார்ப்பரேட் நிறுவன அதிகாரி போல போல்ட் மிடுக்கோடு தோன்றும் படங்களையும் காணலாம்.

அது மட்டும் அல்ல போல்ட் பொது சேவைக்கான மையம் ஒன்றை தன் பெயரில் நடத்தி வருவது பற்றியும் தெரிந்து கொள்ள முடிகிறது.இந்த மையத்தின் மூலம் தன்னை தடகள மன்னனாக உருவாக்கிய ஜமைக்காவிற்கு அவர் தன் பங்கிற்கு திருப்பித்தர விரும்புவதையும் குறிப்பாக ஏழை சிறுவர்களின் நலனுக்காக செய்லபடுவதை கடமையாக கருதுவதையும் புரிந்து கொள்ள முடிகிறது.

பபோல்ட் பவிண்டேஷன் மூலம் அவர் ஆற்றும் பணிகள் அவர் மீது மேலும் மதிப்பை ஏற்படுத்துகிறது.

போல்ட் டிவிட்டர் முகவரி;http://twitter.com/usainbolt

இணையதள முகவரி;http://usainbolt.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “உசேன் போல்ட் என்னும் மனிதன்.

  1. தங்கள் பதிவுகள் மற்றுமொரு புதிய அத்தியாத்தை துவங்கியிருக்கின்றன இந்த ஜனரஞ்சகமான பதிவின் மூலம். வாழ்த்துக்கள்.

    Reply
    1. cybersimman

      நன்றி நண்பரே.கல்வி எஸ் எம் எஸ் தொடர்பான தங்கள் பதிவும் நன்றாக இருந்தது.

      அன்புடன் சிம்மன்

      Reply
  2. அப்போ அவரு போல்ட் இல்ல… BOLDனு சொல்லுங்க…

    Reply
  3. Pingback: நான் ஏன் டிவிட்டர் செய்கிறேன்? உசேன் போல்ட். | Cybersimman's Blog

  4. அறியாத தகவல்கள் …இதோ மேரி கோம் பற்றிய தகவல்கள்…http://tamilmottu.blogspot.in/2012/08/25.html

    Reply
    1. cybersimman

      தகவலுக்கு நன்றி.மேர் கோம் பற்றி பகிர்ந்து கொண்டதற்காக கூடுதல் நன்றி.

      அன்புடன் சிம்மன்

      Reply
  5. very informative husainbolt is awonderfull and agreat humanbeing

    Reply
    1. cybersimman

  6. Pingback: நான் தடகள மகாராஜா ;உசேன் போல்ட்டின் டிவிட்டர் முழக்கம்! | Cybersimman's Blog

  7. Pingback: நான் தடகள மகாராஜா ;உசேன் போல்ட்டின் டிவிட்டர் முழக்கம்! | Cybersimman's Blog

Leave a Comment

Your email address will not be published.