இணைய பக்கங்கள் மீது குண்டுகளை வீச!

எந்த இணையதளத்தின் மீதாவது கோபத்தை காட்ட‌ விரும்புகிறீர்க்ளா?அப்படி என்றால் அந்த தளத்தின் மீது இணைய‌ குண்டுகளை வீசுவதற்கான வாய்ப்பை தருகிறது ஃபான்ட்பாம்ப் இணையதளம்.

இணைய குண்டுகள் என்றால் எழுத்துரு குண்டுகள்.இந்த குண்டுகளை வீசினால் இணையதளங்களில் உள்ள எழுத்துக்கள் எல்லாம் அழிக்கப்பட்டு விடும்.

இந்த எழுத்துரு குண்டு எப்படி செயல்படுகிற‌து என்பதை இந்த இணையதளத்தின் முகப்பு பக்கத்திலேயே செயல் விளக்கமும் தரப்பட்டுள்ளது.எந்த இடத்தில் கிளிக் செய்தாலும் அந்த இடத்தில் உள்ள எழுத்துக்கள் அலையென அடித்து செல்லப்படுகின்றன.

இந்த குண்டுகளை நீங்களும் பயன்படுத்த விரும்பினால் இந்த சேவையை புக்மார்கிங் துண்டாக சேர்த்து கொள்ள வேண்டியது தான்.அதன் பிறகு எந்த இணையதளத்தின் மீது குண்டுகளை வீச விரும்பினாலும் புக்மார்க்கை கிளிக் செய்தால் போதும் எழுத்துரு குண்டுகள் சீறிப்பாய்ந்து அந்த பக்கத்தில் உள்ள எழுத்துக்களை அழித்து விடும்.

இந்த இணைய தாக்குதல் அநியாயமானது என யாராவது நினைத்தால் கவலைப்படாதீர்கள் ,இந்த சேவை சுவாரஸ்யத்திற்கானது மட்டும் தான்.எழுத்துரு குண்டுகளை வீசி எழுத்துக்களை அழிப்பது போல தோன்றினாலும் உண்மையில் எந்த சேதமும் ஏற்படுவதில்லை.

தாக்குதல் முடிந்த பிறகு பிரவுசரை புதுப்பித்தால் இணையதளத்தின் பழைய தோற்றம் தானாக வந்து விடும்.

பிலிப் அன்டோனியோ என்னும் மென்பொருள் நிபுணர் இந்த சேவையை உருவாக்கியுள்ளார்.

இணையதள முகவரி;http://fontbomb.ilex.ca/

0 thoughts on “இணைய பக்கங்கள் மீது குண்டுகளை வீச!”

  1. ஏற்கனவே அவனுங்க எல்லா இடத்துலேயும் குண்டு வச்சிகிட்டு இருக்கானுங்க இதுல நீங்க வேற ….ஏன் தம்பி… புது குண்டு போடறீங்க…?????

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *