பேஸ்புக் படுக்கை வந்தாச்சு!.


நம் காலத்து தலைமுறையினர் மத்தியில் பேஸ்புக்கின் ஆதிக்கம் எந்த அளவுக்கு தீவிரமாகி இருக்கிறது என்பதற்கு இதைவிட அழகான உதாரணம் தேவையில்ல.ஆம் பேஸ்புக் படுக்கை இப்போது அறிமுகமாகியிருக்கிறது.

சமுகவலைப்பின்ன சேவைகளில் நம்பர் ஒன்னாக இருக்கும் பேஸ்புக்கின் பிரபலமான லோகோ வடிவிலேயே இந்த படுக்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.பேஸ்புக்கின் லோகோவான எப் என்னும் ஆங்கில எழுத்து அப்படியே படுக்கையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.அதன் நிறம் நீலம் என்பதை சொல்ல வேண்டியதில்லை.

படுக்கை மீதான‌ போர்வையும் சமூக வலைப்பின்னல் சேவைகளின் லோகோவால் அழகாக அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.

தோற்றத்தில் மட்டும் இது பேஸ்புக் படுக்கை அல்ல;உள்ளடக்கத்திலும் தான்.காரணம் இதில் அமர்ந்தபடியே பேஸ்புக் செய்யலாம்.இதன் தலை பகுதியில் நேர்த்தியான இருக்கையோடு கம்ப்யூட்டரும் வைக்கப்பட்டுள்ளது.

ஆக காலை கண விழித்தவுடன் பேஸ்புக் முன் அமர்ந்து வலை நண்பர்களோடு உலாவ துவங்கி விடலாம்.அதே போல இரவு நெடுநேரம் பேஸ்புக்கில் உலாவி களைத்திருந்தால் அப்படியே படுக்கையில் சாய்ந்து தூங்கி விடலாம்.

எப்போர்துமே பேஸ்புக் தொடர்பில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்காக இந்த பேஸ்புக் படுக்கையை டாமிஸ்லாவ் வானரிக் என்னும் வடிவமைப்பு கலைஞர் உருவாக்கியுள்ளார்.

கட்டிலையும் படுக்கையும் எத்தனையோ விதங்களில் வடிவமைத்துள்ளனர்.சமகாலத்து மோகமான பேஸ்புக்க்கை உள்ளடக்கியபடி இந்த கட்டிலை வடிவமைத்துள்ள டாமிஸ்லாவை பாராட்டத்தான் வேண்டும்.

பேஸ்புக் பிரியர்கள் நிச்சயம் இந்த வடிவமைப்பை பார்த்து சொக்கிபோவார்கள்.

பேஸ்புக் போலவே இதனை வெறுக்கவோ விரும்பவோ செய்யலாம்.

பேஸ்புக் இல்லாமல் இருக்க முடியாது என்னும் அளவுக்கு பலரும் பேஸ்புக்கிற்கு அடிமையாகி வரும் காலத்தில் அதன் காட்சிரீதியான‌ அடையாளமாக இந்த பேஸ்புக் படுக்கை அமைந்துள்ளது.

இதே வடிவமைப்பு கலைஞர் பேஸ்புக் கீரிமையும் வடிவமைத்துள்ளார்.மனித வடிவமைப்பில் கில்லாடியாக தோன்றுகிறார்.அவரது தளத்தில் பல பொருட்களில் வடிவமைப்புகளை பட்டியலிட்டுள்ளார்.எல்லாமே நவீனமும் நேரத்தியும் இணைந்தவை.புதுமையான சிந்தனையை பிரதிபலிப்பவை.

இணையதள முகவரி;http://www.behance.net/deviantom/frame/2721891

0 thoughts on “பேஸ்புக் படுக்கை வந்தாச்சு!.”

  1. மிக அருமையான பதிவு
    வணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
    உங்கள் வரவை விரும்புகிறது.
    தினபதிவு திரட்டியின் சிறப்பு தினமும் பதிவர் பேட்டி
    தினபதிவு திரட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *