சொந்த ஊர் பற்றை பறைசாற்ற ஒரு இணையதளம்.

அடிப்படையில் மிக மிக எளிமையானது ஆனாலும் முதல் பார்வையிலேயே கவர்ந்து விடக்கூடிய அளவுக்கு அழகான கருத்தாக்கத்தை கொண்டது.ஐலோசி (http://ilocy.com/)இணையதளம் இப்படி தான் பிரம்மிக்க வைக்கிறது.

இந்த உலகில் சொந்த ஊர் மீது பற்றும் பாசமும் இல்லாதவர் யார் சொல்லுங்கள்.சொந்த ஊர் மீதான் பாசத்தை பகிர்ந்து கொள்ள வழி செய்வது தான் இந்த தளத்தின் நோக்கம்.

உங்கள் ஊரை நேசிக்கிறீர்களா என்று கேட்கும் இந்த தளம் அதற்கான காரண‌த்தை பகிர்ந்து கொள்ள வைக்கிறது.அதாவது உங்கள் சொந்த ஊரை நீங்கள் ஏன் விரும்புகிறீர்கள் என்று இந்த தளத்தில் தெரிவிக்கலாம்./

இதற்காக இரண்டு சின்ன கட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.முதல் கட்டத்தில் உங்கள் சொந்த ஊரை குறிப்பிட்டு விட்டு அதன் கீசே உள்ள கட்டத்தில் அந்த ஊரை நீங்கள் விரும்புவதற்கான காரணத்தை குறிப்பிடலாம்.

இவ்வாறு சொந்த ஊர் பற்றி எல்லோரும் பகிர்ந்து கொள்ளும் தகவல்கள் அருகிலேயே ஊர் பட்டியலாக கொடுக்கப்பட்டுள்ளது.மிகவும் நேசிக்கப்படும் ஊர்கள் என்னும் அந்த பட்டியலை கிளிக் செய்து பார்த்தால் ஒவ்வொரு நகரங்கள் பற்றி அதன் விரும்பிகள் தெரிவித்துள்ள கருத்துக்களை தெரிந்து கொள்ளலாம்.

டிவிட்டர்,பேஸ்புக் போன்ற சேவைகள் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள வழி செய்கின்றன.இருந்தாலும் சொந்த ஊரு மீதான பற்றை சுருக்கமால நச்சென நாலு வரியில் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு சிறந்தது தானே.

சொந்த ஊர் பற்றிய கருத்துக்களை படித்து பார்த்த பின் அது தொடர்பாக கருத்துக்களையும் தெரிவிக்கலாம்.அந்த ஊரை பற்றிய உங்கள் எண்ணத்தையும் பகிர்ந்து கொள்ளலாம்.அல்லது அந்த கருத்தை பேஸ்புக் பாணியில் லைக் செய்து ஆதரவு தெரிவிக்கலாம்.

அது மட்டும் அல்ல ஒவ்வொரு ஊர் தொடர்பாக மேலும் பல எண்ணங்களை பகிர்ந்து கொள்ளும் வசதி இருக்கிறது.

அந்த நகரில் பிடித்த விஷயத்தை சொன்ன பிறகு அந்த நகரம் தொடர்பாக இன்னும் நினைவில் இருக்கும் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம்.அந்த நகரம் பற்றி மற்றவர் எண்ணங்களையும் வெளியிடலாம்.எல்லாவற்றுக்கும் தனித்தனி பட்டன்கள் இருக்கிறன.

நகரின் சிறப்புகளை வெளியிடுவது மட்டும் அல்ல குறிப்பிட்ட நகரங்கள் பற்றிய தகவல்களையும் கேட்டு பெறலாம்.இதற்காக என்றே நகரை பற்றி தெரிய வேண்டிய விஷயங்கள்,நகரில் எதிர்பார்ப்பவை,நகரில் செல்ல விரும்பும் இடம் ஆகியவற்றை தெரிந்து கொள்வதற்கான பகுதிகளும் இருக்கின்றன.

இந்த வசதி மூலம் இந்த தளத்தை நகரம் பற்றிய தகவலக்ளை திரட்டும் கையேடாகவும் பயன்படுத்தி கொள்ளலாம்.

இத்துடன் முடிந்துவிடவில்லை.நகரில் இப்போது இருக்கும் இடத்தை,இருந்த இடத்தையும் கூட பகிர்ந்து கொள்ளலாம்.

எல்லா தகவ்லகளுமே கூகுல் வரைப்படத்தின் மீது அழகாக பொருத்து காட்டப்படுகிறது.

சொந்த ஊர மீதான உணர்வு பூர்வமான பற்றை வெளிப்படுத்த வாய்ப்பை ஏற்படுத்து தந்து அதன் மூலம் ஒவ்வொரு நகரம் சார்ந்த தகவல்களை விரிவாக தெரிந்து கொள்ள வழி செய்து வியக்க வைக்கிறது இந்த தளம்.

உலக நகரங்களுக்கான செழுமையான் கையேடாக மாறும் வாய்ப்பை கொண்டுள்ள இந்த தளம் இப்போது தான் துவக்கப்பட்டுள்ளது என்பதால் பெரிய அளவில் நகரங்கள் இடம் பெறவில்லை.

குறிப்பாக இந்திய நகரங்கள் பற்றிய பதிவு இல்லை.எனவே நம்மவர்கள் சென்னை பற்றியும் மதுரை தேனி நெல்லை பற்றியும் பகிர்ந்து கொள்ளலாம்.

இணையதள முகவரி;http://ilocy.com/

———

சொந்த ஊர் தொடர்பான உணர்வுபூர்வமான பதிவு,படித்துப்பாருங்கள்.;http://vivasaayi.blogspot.in/2011/11/blog-post_21.html

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “சொந்த ஊர் பற்றை பறைசாற்ற ஒரு இணையதளம்.

  1. உடனே எங்கள் ஊரைப்பற்றி எழுத வேண்டும்போல இருக்கிறது. முயற்சிக்கிறேன்!

    தகவலுக்கு நன்றி!

    Reply
    1. cybersimman

      அவசியம் எழுதுங்கள்.

      Reply
  2. மிகவும் நல்ல தகவல்……உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி……..

    நன்றி,
    மலர்
    http://www.tamilcomedyworld.com/

    Reply
  3. sundar

    சுவையான செய்தி

    Reply

Leave a Comment

Your email address will not be published.