இளம் தாயின் மரணமும் டிவிட்டர் கோபமும்.

அயர்லாந்து நாட்டில் கருக்கலைப்பு மறுக்கப்பட்டதால் இந்திய பெண்மணி சவிதா உயிரை இழந்த சம்பவம் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதோடு டிவிட்டர் உலகை சோகத்திலும் கோபத்திலும் பொங்க வைத்துள்ளது.சவிதாவின் பெயரில் உருவாக்கப்பட்ட ஹாஷ்டேகுகள் அவருக்கு மறுக்கப்பட்ட நியாயத்தை ஆவேசமாக சுட்டிக்காட்டியுள்ளதோடு இந்த நிலைக்கு காரணமான அந்நாட்டின் கருக்கலைப்பு சட்டம் தொடர்பான விவாத்தையும் தீவிரமாக்கியுள்ளன‌.

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவரான சவிதா தனது கணவர் பிரவினோடு அயர்லாந்தில் வசித்து வருகிறார்.கர்பினியாக இருந்த அவர் முதுகு வலியால பாதிக்கப்பட்டு மருத்துவ உதவியை நாடியிருக்கிறார்.மருத்துவ பரிசோதனையில் அவருக்கு குறைப்பிரசவம் ஆகியிருப்பது தெரிய வந்தது.

ஆனாலும் கூட மருத்துவர்கள் அவரது கருவை அகற்ற மறுத்து விட்டனர்.கருவின் இதயத்துடிப்பு அடங்காமல் இருந்ததே இதற்கு காரணம்.

அயர்லாந்து கத்தோலிக்க மத நம்பிக்கை கொண்ட நாடு என்பதால் அங்கு கருக்கலைப்பிற்கு அனுமதி கிடையாது.இதனை சுட்டிக்காட்டிய மருத்துவர்கள் கருவின் இதயத்துடிப்பு இருக்கும் வரை எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று கூறிவிட்டனர்.

வலியால துடித்த சவிதாவும் அதனை பார்க்க சகியாமல் அதற்கு மேல் துடித்த கனவர் பிரவினும் எவ்வளவோ மன்றாடியும் மருத்துவர்கள் சட்டத்தை மீற முடியாது என கூறி விட்டனர்.அதன் பிறகு இறந்த கரு அகற்றப்பட்டு சவீதா தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.ஆனால் சில நாட்களிலேயே சிகிச்சை பலனின்று இறந்து போனார்.

அயர்லாந்து சட்டத்தில் இடம் இல்லாததால் கருக்கலைப்பு மறுக்கப்பட்டு சவீதா உயிரிழந்த செய்தி வெளியான போது உலகமே திடுக்கிட்டு போனது.

பல நாடுகளில் கருக்கலைப்பு சாதரணமாக இருக்கிறது.சில நாடுகளில் சட்டப்பூர்வமாக இருக்கிறது.ஆனால் அய‌ர்லாந்து கத்தோலிக்க தேசம் என்பதால் அங்கு கருக்கலைப்பிற்கு அனுமதி கிடையாது.

ஆனால் ஒரு உயிரை விட சட்டமும் மத நம்பிக்கையும் முக்கிய‌மா என்று பலரும் ஆற்றாமையால் தவித்தனர்.

அது மட்டும் அல்ல அந்நாட்டிலே கூட 1992 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் கருக்கலைப்பு தவிர வேறு வழிகளில் தாயின் உயிரை காப்பாற்ற முடியாத மருத்துவ நிலை ஏற்பட்டால் கருக்கலைப்பு செய்யப்படலாம் என தீர்ப்பளித்தது.இருப்பினும் அதன் பின் பதவிக்கு வந்த எந்த ஒரு அரசும் இது தொடர்பான சட்டத்திருத்ததை கொண்டு வர துணியவில்லை.

இந்த துணிவற்ற தன்மையே சவிதாவின் உயிரை குடித்து விட்டது.

அவருக்கு ஏற்பட்ட பரிதாபம் இந்த சட்ட திருத்ததிற்கான தேவையை மீண்டும் விவாதத்திற்கு கொண்டு வந்துள்ளது.

இதனிடையே சவிதாவுக்காக டிவிட்டரில் பலரும் தங்கள் சோகத்தை கொட்டி தீர்த்தனர்.

ஆர் ஐ பி சவிதா போன்ற ஹாஷ்டேகுகள் உருவாக்கப்பட்டு சவீதவுக்கு நேர்ந்த கதி தொடர்பான மனக்குமுறலை டிவிட்டர் பயனாளிகள் வெளிப்படுத்தினர்.

மனித உயிரை காப்பாற்றுவதை விட மத நம்பிக்கை முக்கியமா என திஸ் காட் ராக்ஸ் என்பவர் குறும்பதிவு மூலம் ஆவேசமாக கேள்வி எழுப்பியிருந்தார்.சவிதாவுக்கும் இதயத்துடிப்பு இருந்தது என்று அவர் வேதனையோடு குறிப்பிட்டிருந்தார்.

அயர்லாந்து பெண்கள் கவுன்சில் சவிதாவின் மரணம் ஒரு தேசிய அவமானம் என்று குறிப்பிட்டிருந்தது.

மற்ற குறும்பதிவுகள் சோகத்தை வெளிப்படுத்தியிருந்ததோடு சட்ட திருத்ததிற்கான அவசியத்தையும் வலியுறுத்தின.

இந்த குரல் குறும்பதிவுகளாக தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “இளம் தாயின் மரணமும் டிவிட்டர் கோபமும்.

  1. Delavictoire

    Hi simman, Ihave a great respect for you ,your blog is helpful to many people poor in computer knowledge,, I used many of your techs posted by you,, What to say sometimes we put a situation to a contre
    opinion,, The issue of savitha’s death after her premature delivery is really sad and condemable,,But do you why doctor’s in foreign countries fear to attend a casuality case ,, Because if the result is negetive due to any reason is severe,, that goes even loosing their job even imprisonement,, It’s not like in our India where doctors can abort for money and the worst ,, in case of death they show the hand up,saying so cooly that they tried their level best but can’t able to save the patient,,, which cannot be done by foreign doctors,,they have to face law ,,unless in India they can easily buy law
    An example In France if you go to an argency of any hospital you won’t come out before 6 or 7 hours,,because unless they know the treatment they fear to touch the patient,, again due to severe law if anything goes wrong ,, Don’t think they are inhuman Doctors in all foreign countries are more human and kinder than Indian doctors who are mostly money minded

    oopinion

    Reply
    1. cybersimman

      i just summed up the situation presented from twitters viewpoint.i respect your views .i took no stand in this issue.just trying to understand the complexity of the issue.

      thanks
      simman

      Reply
  2. நம்ம நாட்டுக்கும் அவங்க நாட்டுக்கும் எவ்ளோ வித்தியாசமப்பா… இங்க காசு கொடுத்தா எதுவும் நடக்கும்

    Reply
  3. --- :) ----

    I agree with what Delavictoire is saying above. But again, they have malpractice coverage by the concerned hospitals. They can as well show their hands up. They right now did exactly that thing only. And anyway they are going to face the music as the international or ireland medical community is going to ask questions about the way they had treated their patient. All this being said and done, a life lost is lost. We cannot resurrect.

    Reply
    1. cybersimman

      lets not blame the doctors.its the situation.we need correct legislation

      Reply
  4. இப்படி இந்தியாவில் எத்தனையோ பெண்மணிகள் ஆஸ்பத்திரிகளின் அவலங்களால் இறக்கிறார்கள். ஆனால், அவைகள் எல்லாம் துட்சமாக கூட மதிக்கப்படுவதில்லை. இந்தியாவில் வாழும் இந்தியர்களின் உயிரெல்லாம் உயிரல்ல. வெளிநாட்டில் வாழ்பவர்களின் உயிர் மட்டுமே உயிர் என்கிற தோரணையே இவ்விவகாரத்தில் தெரிகிறது.

    ஏனெனில், இந்தியர் என்பதால் கருக்கலைப்பு அனுமதி மறுக்கப்படவில்லை. அந்நாட்டின் பெண்கள் பலருக்கும் இதேதாம் சட்டம் என்கிற போது, அந்நாட்டை நாம் எப்படி குறை கூற முடியும். நாமல்லவா (அப்பெண் அல்லவா) எச்சரிக்கையாகி, பிரசவிக்க இந்தியா வந்திருக்க வேண்டும். பல் மருத்துவரான அவரே, இப்படி எச்சரிக்கை இல்லாமல் இருந்ததற்கு யார் பொறுப்பேற்க முடியும்?

    பல் மருத்துவரான அப்பெண்ணின் மரணம் வருத்தத்திற்கு உரியதுதாம் என்றாலும், அந்நாட்டின் சமய கொள்கை முடிவில் தலையிட யாருக்கும் தகுதியில்லை. மிக முக்கியமாக, இந்தியா என்கிற உலகின் மிகப் பெரிய குடியரசு நாடுகளுக்கு இடமில்லை.

    ஆம்! இந்தியா மிகப் பெரிய குடியரசு நாடு என்பதற்கு அடிப்படை காரணம் என்ன என்பது தெரியாமல், நான் சொல்லும் இவ்விடயம் புரியாது.

    ஒருவர் எந்த நாட்டவராக இருந்தாலும், மதத்தவராக இருந்தாலும், இனத்தவராக இருந்தாலும் அவர்களுக்கு, அவர்களது பூர்வீக குடிநாட்டில் என்னென்ன அடிப்படை உரிமைகள் உண்டோ அவைகள் அனைத்தையும் வழங்கும் உலகின் ஒரே நாடு நமது இந்தியாதாம். அதே நேரம் தண்டனையும் அவர்களின் கொடுமையான தண்டனைகள் கிடையாது. மாறாக, நமது சட்ட முறையான தண்டனைகள்தாம்.

    உண்மையான உதாரணமாக, இந்தியாவில் வாழும் ஒரு இந்து ஒருவரைத்தாம் சட்டமுறைப்படி திருமணம் செய்ய முடியும். ஆனால், முகமதியர் அரபு நாடுகளைப் போலவே நான்கு திருமணங்களை செய்ய முடியும். இதுவே, இந்தியாவின் சிறப்பு.

    Reply
    1. cybersimman

      சரியான பார்வை நன்பரே!

      Reply
  5. Delavictoire

    வாரண்ட் பாலா அவர்களே, நீங்கள் சொல்வது போல் இங்கே கருகலைப்பை மறுப்பதெற்கு மதம் ஒரு அடிப்படை காரணம் என்பது சற்று உண்மையே,,ஆனால் அதற்காக அவர்கள் இது தாண்டா சட்டம் என்று ராஜசேகர் பாணியில் எல்லாம் சொல்வது இல்லை,,என் சொந்த அனுபவத்தை சொல்கிறேன்,எனக்கு 4 ஆண்பிள்ளைகள் ,அஜாக்கிரதையால்,ஐந்தாவதை முறையாக என் மனைவி கருத் தரித்துவிட்டாள்,,அச்சமயம் அவளுக்கு இலேசான சர்க்கரை இருந்தது அதனால் கொஞ்சம் டிப்பிரஷனும் இருந்தது,,நான் வசிப்பது 10 வது மாடியில்,ஆதனால் லிப்ட் கோளாறு (எப்போதாவதுதான்)என்றால் மாடிப்படி எற சிரமம் இருக்கும் என்று என் தரப்பு ஞயங்களை சொன்னேன்
    அவர்களும் அதில் உண்மை இருப்பதை அறிந்து கருகளைப்புக்கு சம்மதித்தார்கள்,,எதற்காக இதை சொல்கிறேன் என்றால் இங்கே நாம் செய்யும் செயலுக்கு
    சரியான காரணம் இருப்பின் அதை யாரும் சட்டம் என்கிற பெயரில் எதிப்பதில்லை என்பதை மற்றவர்லளுக்கு புரிய வைக்கவே

    அவர்கள் இது தாண்டா

    Reply
  6. அன்பின் சிம்மன் – ஆதங்கம் புரிகிறது – இருப்பினும் நாம் எந்த நாட்டில் இருக்கிறோமோ அந்த நாட்டின் சட்ட திட்டங்களை அறிந்து அதன் படி நடக்க வேண்டும். அதுதான் முறை. சமீபத்தில் நார்வே நாட்டில் குழந்தைகளைக் கண்டித்ததற்காக் பெற்றோருக்கு சிறைத்தண்டனை வழங்கினர் – நமது அரசும் ஒன்றும் செய்ய இயலவில்லை,.

    Reply

Leave a Comment

Your email address will not be published.