பேஸ்புக் நண்பர்களுக்கு பரிசளிக்க.

இதனை இவன் விரும்புவான் என்றறிந்து சரியான பரிசுப்பொருளை பரிசளிக்க முடிந்தால் சிறப்பாக தான் இருக்கும்.ஆனால் இதனை கண்டறிவது தான் சவாலான செயல்.

இதற்கு உதவுவதற்காக என்றே பரிசு பொருள் பரிந்துரைக்கும் இயந்திரங்கள் எத்தனையோ இருக்கின்றன.அவற்றில் பேஸ்பு நண்பர்களை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது கிப்டிவோ இணையதளம்.

பேஸ்புக் மூலம் உள்ளே நுழைந்தால் இந்த தளம் நீங்கள் சுட்டிக்காட்டும் பேஸ்புக் நண்பர்களுக்கு சிறந்த பரிசு எது என்பதை பரிந்துரைக்கிறது.

அதற்கு முன்னர் அந்த குறிப்பிட்ட நண்பருக்கு பிடித்த விஷயங்களை எல்லாம் குறிப்பிட்டால் அதற்கேற்ப பரிசு பொருள் பரிந்துரைக்கப்படுகிறது.நண்பர்களின் விடுப்பங்களை சுட்டிக்காட்ட அழகாக சினிமா,இசை,விளையாட்டு என பலவேறு வகையான துறைகள் சுட்டிக்காட்டப்படுகிறது.நண்பருக்கு பிடிக்காத விஷய்த்தை குறிப்பிட்டு அதனை விலக்கி கொள்ளச்செய்யும் வசதியும் இருக்கிறது.

பரிசுபொருளுக்கான பரிந்துரை படித்திருந்தால் அந்த பொருளை இணையத்தின் மூலமே ஆர்டர் செய்து கொள்ளலாம்.

இணையதள முகவரி;http://www.giftivo.com/

0 thoughts on “பேஸ்புக் நண்பர்களுக்கு பரிசளிக்க.”

  1. அன்பின் சிம்மன் – இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் பல அரிய செயல்களைப் பற்றிய தளங்களை ஆராய்ந்து – பதிவாக இடும் நற்செயல் நன்று. தொடர்க – பாராட்டுகள் _ நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *