பவர்பாயின்டை பயன்படுத்த புதுமையான வழிகள்!.

மைக்ரோசாப்டின் பவர்பாயின்ட் சேவையை யாருக்கு தான் தெரியாது. உலகம் முழுவதும் காட்சி விளக்கனக்களை( பிரசன்டேஷன்) அளிக்க பவர்பாயின்டே பயன்படுத்தப்பட்டு வருகிறது.பள்ளி கல்லூரிகளில் கூட பிரசன்டேஷன் என்றால் பவர்பாயின்டே கைகொடுக்கிறது. பவர்பாயின்ட் மிகவும் பிரபலமாக இருப்பதோடு , அது அலுப்பூட்டக்கூடிய உத்தியாக இருப்பதாகவும் ஒரு விமர்சனம் இருக்கிறது.

படைப்பாற்றலை ஊக்குவிப்பதற்கு பதிலாக அது ஒரே மாதிரியான தன்மையை வ‌ழங்குவதாகவும் குறை சொல்பவர்கள் இருக்கிறார்கள்.

இவை ஒரு புறம் இருக்க வழக்கமான வழிகளை விட பவர்பாயின்டை புதுமையான முறையில் பயன்படுத்தலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?

 பவர்பாயின்டை பயன்படுத்தக்கூடிய புதிய வழிகள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்;

 கதை புத்தகம் உருவாக்க:

பவர்பாயின்ட் நிறுவன அதிகாரிகள் பயனப்டுத்துவதற்கான உத்தி மட்டும் அல்ல. பள்ளிகளில் கற்றுத்தருவதற்கு ஏற்ற உத்தியாகவும் அது திகழ்கிறது.பவர்பாயின்ட் கொண்டு அழகாக புகைப்படம் சார்ந்த கதைகளை சொல்லலாம்.பொருத்தமான புகைப்படங்களை தேர்வு செய்து கொன்டு அவற்றுக்கான விளக்கத்தையும் தயார் செய்து குழந்தைகளுக்கு படக்கதை பாணியில் எடுத்து கொண்ட விஷயத்தை பவர்பாயின்டில் புரிய வைக்கலாம்.ஏன் பவர்பாயின்டில் சித்திரகதைகளை கூட உருவாக்கலாம்.இதே உத்தியை பயன்படுத்தி எளிய அறிவியல் விஷயங்களை கூட கற்றுத்தரலாம். இதற்கு எம் எஸ் ஆபிஸ் வ்சதி இருந்தாலே போதுமானது.

திட்டமிடல்

தினமும் செய்ய வேண்டியதை குறிப்பெழுதி வைக்கும் பழக்கம் கொண்டவரா,நீங்கள்.அப்படி என்றால் உங்கள் இலக்குகளை குறித்து வைத்து திட்டமிடவும் பவர்பாயின்டை பயன்படுத்தலாம் தெரியுமா?

 உங்கள் இலக்கை, தெளிவாக குறிப்பிட்டு, அதை சுட்டிக்காட்டும் புகைப்படங்களை இடம்பெற வைத்து, செய்ய வேண்டிய செயல்களை குறித்து கொள்ளலாம்.செயல்திட்ட வரைபடம் போல ஒவ்வொரு செயல்களாக குறித்டு வைத்து கொண்டு செயல்படலாம். செய்ய வேண்டியவற்றை பட்டியலாக பார்ப்பதை விட , திட்ட வரைபடமாக பார்க்கும் போது எளிதாக புரிவதோடு உற்சாகமாகவும் இருக்கும்.

போட்டோஷாப்புக்கு மாற்றாக.

வரைகலை போன்றவற்றுக்கு போட்டோஷாப்பை பல்ரும் பயன்படுத்துகின்றனர். ஆனால் வரைபடங்கள் போன்றவற்றை சொந்தமாக உருவாக்க வேண்டியிருந்தால் போட்டோஷாப் தெரியவில்லையே என கவலைப்பட வேண்டால். பவர்பாயின்டை கொண்டே எளிமையான வரைப்டங்களை உருவாக்கலாம்.அபோபில் உள்ள குறிப்புகளை இங்கேயும் பயன்படுத்தலாம்.

நிகழ்ச்சி நிரல் தயாரிக்க.

பிறந்த நாள் நிகழ்ச்சியா, நிறுவன விளம்பர திட்டமா, அதற்கான கையேடு அல்லது நிகழ்ச்சி நிரலையும் பவர்பாயின்ட் கொண்டே தயாரிக்கலாம்.நிஅக்ழ்ச்சியின் நோக்கம், நடைபெறும் நாள்,பங்கேற்பவர்கள் போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிட முடியும்.தேவையான இடத்தில் புகைப்படததையும் இடம்பெற வைக்கலாம்.

குடும்ப மரம் உருவாக்கலாம்.

மேலை நாடுகளில் ஒருவரது குடும்ப வரைபடத்தை உருவாக்கும் வழக்கம் பிரபமாக் உள்ளது. இதற்கான இனைய சேவைகளும் கூட இருக்கின்றன. ஆனால் பவர்பாயின்ட் மூலமே கூட உங்களுக்கான குடும்ப வரைபடத்தை உருவாக்கி கொள்ளலாம்.நீங்கள், உங்கள் முன்னோர்கள், பிள்ளைகளை உறவினர கிளைகள் என அழகாக குடும்ப வரைபடத்தை அமைக்கலாம்.இதற்கான மாதிரி வடிவங்களும் கூட இருக்கிறது.

 ஆக உங்கள் தேவைக்கும் கற்பனைக்கும் ஏற்ப பவர்பாயின்ட் சேவைய மேலும் சிறந்த வழிகளில் பயன்படுத்தலாம் இல்லையா!

 ——————-

பவர்பாயின்ட் பற்றி எனது முந்தைய பதிவு;

வெள்ளிவிழா காணும் பவர்பாயிண்ட்;ஒரு பிளேஷ்பேக் !http://cybersimman.wordpress.com/2012/08/01/powerpoint/

] ]>

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

2 Comments on “பவர்பாயின்டை பயன்படுத்த புதுமையான வழிகள்!.

  1. saravanan

    கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க பயன்படும் பவர் பாயிண்ட் கிளிப்ஸ் எந்த வெப்சைட்டில் உள்ளது சார்..

    Reply
    1. cybersimman

      மன்னிக்கவும் நண்பரே, நான் தேடிப்பார்த்த வரை இணையத்தில் கல்லூரி மாணவர்களுக்கான பவர் பாயின்ட் கிளிப் இருப்பதாக தெரியவிலை. நாம் தான் உருவாக்கி கொள்ள வேண்டும். வேறு யாரேனும் தெரிந்தால் சொல்லுங்கள்.

      அன்புடன் சிம்மன்

      Reply

Leave a Comment

Your email address will not be published.