பேஸ்புக் ஸ்டேடஸ் அப்டேட்டுக்கு ஒரு இணையதளம்

131114115523-facebook-what-would-i-say-story-topஉங்கள் வாழ்க்கையை நீங்கள் தான் வாழ வேண்டும் என்பது போல , உங்கள் பேஸ்புக் அப்டேட்டையும் நீங்கள் தான் எழுத வேண்டும். ஆனால் அதற்கும் ஒரு இணையதளம் இருந்தால் எப்படி இருக்கும்? அதாவது உங்களுக்காக பேஸ்புக் பதிவுகளை எழுதி தர ஒரு இணையதளம் இருந்தால் ? … ! அப்படி ஒரு இனையதளம் உருவாகப்படுள்ளது. வாட் வுட் ஐ சே .காம் எனும் அந்த இணையதளம் உங்களுக்காக அடுத்த பேஸ்புக் பதிவை உருவாக்கி தருகிறது.

உருவாக்குகிறது என்பதை கவனிக்கவும்! எனெனில் , இந்த தளம் நீங்கள் இது வரை பேஸ்புக்கில் எழுதியுள்ள பதிவுகளை அலசிப்பார்த்து அதனடிப்படையில் உங்கள் அடுத்த பதிவு எப்படி இருக்ககூடும் என யூகித்து அதை உருவாக்கி தருகிறது. இதற்காக உங்கள் பேஸ்புக் கணக்கை இந்த தளத்தில் ஒப்படைத்துவிட்டு புதிய பதிவை உருவாக்குக என கட்டளையிட்டு காத்திருந்தால் , உங்கள் அடுத்த பதிவை உருவாக்கித்தருகிறது. இந்த பதிவை நீங்கள் பேஸ்புக்கிலும் பகிரலாம்.

இந்த தளம் உருவாக்கிய பதிவு ஆச்சர்யம் அளிக்ககூடியதாகவோ அல்லது அதிர்ச்சி அளிக்ககூடியதாகவோ இருக்கலாம். எப்படி இருந்தாலும் அதற்கு நீங்களே பொறுப்பு! காரணம் இந்த தளம் உங்கள் வார்த்தைகளை கொண்டே பதிவை உருவாக்கித்தருகிறது.

இந்த பதிவுகள் சில நேரங்களில் அர்ததம் இல்லாமலும் இருக்கலாம். ஆனால் சுவாரஸ்யமாக இருக்கும்.

பேஸ்புக் சார்ந்து உருவாக்கப்பட்டுள்ள செயலிகளில் இந்த தளம் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது. ஆனால் ஆங்கிலத்தில் பேஸ்புக்கை பயன்படுத்துபவர்களுக்கு தான் சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது.

பயன்படுத்தி பாருங்கள்: http://what-would-i-say.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.