புகைப்படங்களை எளிதாக பகிர உதவும் சிம்பில்நோட்.

http _www.simpleneat.com_உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்ளாமல் நேரடியாகவே பயன்படுத்தலாம் என்று சொல்லும் இணையதளங்களை விரும்புகிறர்வர்கள் , சிம்பில்நோட் இணையதளத்தை நிச்சயம் நேசிப்பார்கள். புகைப்படங்களை எளிதாக பகிர்ந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த இணையதளம் வழங்கும் முதல் எளிமை , பதிவு செய்யாமலே பயன்படுத்தும் வசதி தான்.

இணையத்தில் புகைப்பட ஆல்பத்தை உருவாக்க விருப்பமா, சிம்பில்நோட் தளத்தில் நுழையுங்கள், புகைப்படங்களை பதிவேற்றத்துவங்குங்கள் அவ்வளவு தான்!. உங்களுக்கான ஆல்பம் தயார். தேவை என்றால் அதற்கு முன்னதாக , உங்கள் ஆல்பம் எப்படி இருக்கும் என்று பார்த்து கொள்வதற்காக மாதிரி ஆல்பத்தை கிளிக் செய்து பார்க்கலாம். மாதிர் ஆல்பம் அட்டகாசம்,அசத்தல் என்றெல்லாம் சொல்ல முடியாது. சிம்பிளாக இருக்கிறது. வரிசையாக புகைப்படங்கள்.மேலே ஒரு தலைப்பு . இது தான் ஆல்பம். புகைப்படங்களை பெரிய அளவில் பார்கும்/ டவுண்லோடு செய்யும் வ்சதி இருக்கிறது.

சரி , மாதிரி ஆல்பம் பார்த்தாகிவிட்டது. அடுத்து என்ன?  புதிய ஆல்பம் பகுதியை கிளிக் செய்துவிட்டு உங்கள் புகைப்பட கோப்பை இழுத்து வந்து ஆல்பம் பகுதியில் வைத்தால் போது. அல்லது பொறுமையாக ஒவ்வொரு படமாக கிளிக் செய்தும் பதிவேற்றலாம். உங்கள் வசதியை பொறுத்து.

இப்போது ஆல்பத்துக்கு ஒரு தலைப்பு கொடுக்க வேண்டும். அந்த ஆல்பத்தை மற்றவர்கள் பார்க்க அனுமதிக்கலாமா அல்லது நண்பர்களுக்கு மட்டும் தானா என குறிப்பிட வேண்டும். நண்பர்களுக்கு மட்டும் தான் என்றால் , ஆல்பத்துக்கான  இணைப்பை இமெயில் வாயிலாக அனுப்பி வைக்கும் வசதி இருக்கிறது.

எளிதாக புகைப்பட ஆல்பத்தை உருவாக்கி பகிர்ந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கு மிகவும் ஏற்ற் சேவை. தனிப்பட்ட முறையிலும் இந்த சேவையை பயன்படுத்தலாம். அதே நேரத்தில் மற்றவர்களையும் புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளும் கூட்டு முயற்சி நோக்கிலும் பயன்படுத்தலாம். இதற்காக ,ஆலபம் உருவாக்கும் போதே மற்றவர்களும் படங்களை பகிர அனுமதிக்க வேண்டுமா ? என கேட்கப்படுகிறது. குறிப்பிட்ட நிகழ்ச்சி சார்ந்த எல்லா புகைப்படங்களையும் திரட்டி பங்கேற்பு ஆல்பத்தை உருவாக்க இந்த வசதி உதவியாக இருக்கும். வர்த்தக் நிறுவங்ங்கள் தங்கள் பிராண்ட சார்ந்த நிகழ்ச்சி ப்டங்களை வாடிக்கையாளர்கள் பகிர வைக்க இதை பயன்படுத்தலாம். தனிநபர்களும் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளின் போது விருந்தினர்கள் எடுக்கும் புகைப்படங்களை ஒரே இடத்தில் திரட்ட இதை பயன்படுத்தலாம்.

அட எளிமையான சேவையாகவும் இருக்கிறதே. சூப்பராகவும் இருக்கிறதே என்று நினைக்கத்தோன்றுகிறதா? உண்மை தான். ஆனால் ஒரு சின்ன சிக்கல். பகிர்வு வசதி கட்டண சேவை. இலவச சேவை உண்டென்றாலும் ஒரு மாதத்திற்கு தான் புகைப்படங்களை சேமித்து வைத்திருப்பார்கள். அதன் பிறகு மாத கட்டணம் உண்டு. பயன்பாடு இருந்தால் காசு கொடுத்தால் தான் என்ன?

இணையதள முகவரி; http://www.simpleneat.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “புகைப்படங்களை எளிதாக பகிர உதவும் சிம்பில்நோட்.

  1. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    Reply
    1. cybersimman

      நன்றி. தங்களுக்கும் புத்தாண்டு சிறக்க வாழ்த்துக்கள்.

      Reply

Leave a Comment

Your email address will not be published.