லிங்க்டு இன் வழங்கும் தன்னார்வ சேவை வசதி.

linkeinஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் வகையில், தன்னார்வ சேவைக்கான வசதியை தொழில்முறை வலைப்பின்னல் தளமான லிங்க்டு இன் அறிமுகம் செய்துள்ளது. தன்னார்வ சேவையில் ஈடுபட விரும்பும் தொழில்முறை நபர்கள் மற்றும் திறமை மிகுந்த தன்னார்வளர்களை தேடிக்கொண்டிருக்கும் தொண்டு நிறுவனங்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் பாலமாக விளங்கும் வகையில் லிங்க்டு இன் இந்த சேவையை (http://volunteer.linkedin.com/ ) அறிமுகம் செய்துள்ளது.
லிங்குடு இன் சமூக வலைப்பின்னல் சேவை பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். இதுவும் பேஸ்புக் போன்றது தான். ஆனால் வேலை வாய்ப்பு மற்றும் தொழில்முறையிலான நட்புக்கானது. இதன் மூலம் புதிய வேலையை தேடிக்கொள்ளலாம். ஒரே துறையில் இருக்கும் நபர்களுடன் நட்பை ஏற்படுத்திக்கொள்ளலாம். பேஸ்புக்கிற்கு முந்தையது என்றாலும் பேஸ்புக் அள்விற்கு லிங்க்டு இன் பரவலாக அறியப்படவில்லை. பொழுதுபோக்கு எனும் பரந்துவிரிந்த வெளிக்கு மாறாக தொழில்முறை சார்ந்தவர்களுக்கானது என்பதாலோ என்னவோ லிங்க்டு இன் பேஸ்புக் அளவுக்கு பிரபலமாகவில்லை. ஆனால் தனது பிரிவில் லிங்குடு இன் தான் தனிக்காட்டு ராஜா. இது ஒருபுறம் இருக்க சமீபகாலங்களில் லிங்க்டு இன் தனது இருப்பை மேலும் விரிவாக்கும் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதன் பயனாக புதிய வசதிகளையும் அறிமுகம் செய்து வருகிறது.
 
சேவை செய்வதே ஆனந்தம்!

இந்த வரிசையில் வந்திருப்பது தான் , தன்னார்வ சேவைக்கான லிங்க்டு இன் வால்யுண்டர் வசதி. அடிப்படையில் இந்த சேவை என்னவென்றால் , தன்னார்வ சேவையில் ஆர்வம் உள்ள லிங்கடு இன் உறுப்பினர்கள் அதற்கான வாய்ப்புகளை தேடி பங்கேற்க உதவுவதே . வாழ்க்கை என்பது வேலையும் பொழுதுபோக்கும் தானா என்ன? நாம் வாழும் சமூகத்திற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் பலருக்கு இருக்கலாம். ஆனால் இதற்கான வாய்ப்புகளை தேடிச்செல்ல முடியாமல் சேவை ஆர்வத்தை மனதுக்குள்ளேயே பூட்டி வைத்திருக்கலாம். அதிலும் பெரிய நிறுவனங்களில் நல்ல வேலையில் இருப்பவர்கள் கைநிறைய சம்பாதிக்கும் நிலையில் ஓய்வு நேரத்தில் தங்கள் திறமையை நல்ல செயலுக்காக பயன்படுத்த நினைக்கலாம். ஆனாலும் பணிச்சுமைக்கு நடுவே தங்கள் பங்கேற்பு தேவைப்படகூடிய தொண்டு நிறுவனங்கள் அல்லது சேவை அமைப்புகளை தேடி தொடர்பு கொள்ள முடியாமல் தவிக்கலாம். அதே நேரத்தில் தொண்டு நிறுவனங்கள் தங்களுக்கு உதவ தயராக இருக்கும் தன்னார்வளர்களை அடையாளம் காண்பதும் சிக்கலாக இருக்கிறது. இந்த இரண்டுக்கும் தீர்வாக தான் லின்க்டு இன் தன்னார்வ சேவை வசதியை அறிமுகம் செய்துள்ளது.

சேவை பாலம்

தன்னாரவ சேவையில் ஆர்வம் கொண்ட தொழில்முறை நபர்கள் மற்றும் தன்னார்வளர்களை எதிர்பார்த்திருக்கும் தொண்டு நிறுவனங்கள் என இரு தரப்பினரையும் இணைக்கும் வகையில் லிங்க்டு இன் தளத்தின் இந்த புதிய வசதி அமைந்துள்ளது. இந்த வசதியை பயன்படுத்தி கொள்ள விரும்பும் உறுப்பினர்கள் தங்களது லின்க்டு இன் பக்கத்தில் தன்னார்வ (Volunteer and Causes  ) தொண்டு பகுதியை சேர்த்துக்கொள்ளலாம். இதன் மூலம் உறுப்பினர்கள் தன்னார்வ பணிக்கு தாங்கள் தயாராக இருப்பதை தெரிவிக்கலாம். எந்த வகையான் தன்னார்வ பணிகளில் ஈடுபட விரும்புகிறோம் என்பதையும் தெளிவாக குறிப்பிடலாம். இதை பார்க்கும் தொண்டு நிறுவனங்கள் தொடர்பு கொண்டு சேவை வாய்ப்பை அளிக்கும். சேவையில் பங்கேற்ற பிறகு அந்த அனுபவம் பற்றியும் பகிர்ந்து கொள்ளலாம். சேவை செய்த ஆனந்தத்தை அளிப்பதுடன் , சேவை மனப்பான்மையை வெளிப்படுத்தி கொள்ள

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *