தேர்தல் கணிப்பு இனி உங்கள் கையில்

VotingLine1தேர்தல் கருத்துக் கணிப்புகளை செய்தி நிறுவனங்களும் , தொலைக்காட்சிகளும் தான் நடத்த வேண்டுமா என்ன? இனி திருவாளர் வாக்காளர்கள் ( நீங்கள் தான் ) நினைத்தாலும் கருத்துக்கணிப்பு நடத்தலாம். இதற்கான வசதியை உள்ளங்கையிலேயே கொண்டு வந்திருக்கிறது வோட்டர்லைன் செயலி ( அப்) .

ஆண்ட்ராய்டு, ஐபோன் மற்றும் விண்டோஸ் போன்களுக்காக அறிமுகமாகியுள்ள இந்த செயலி மூலம் இப்போது தேர்தல் களத்தின் போக்கு எப்படி இருக்கிறது என சாமான்யர்கள் தெரிந்து கொள்ளலாம். இதற்காக அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் இந்த செயலி மூலம் வாக்களிப்பது தான். 

இந்த செயலியை டவுன்லோடு செய்து கொண்டவுடன் , பயனாளிகள் தங்களைப்பற்றிய விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். விவரங்கள் என்றால், வசிக்கும் தொகுதி, கல்வித்தகுதி,வேலை,வருமானம் போன்றவை. அதன் பிறகு இதில் உள்ள மாதிரி வாக்குப்பெட்டியில் உங்கள் தொகுதியை தேர்வு செய்து விரும்பும் கட்சிக்கு வாக்களிக்கலம். உங்களைப்போலவே பல்ரும் வாக்களித்திருப்பார்கள் அல்லவா? அவற்றை எல்லாம் கணக்கிட்டு எந்த கட்சிக்கு எவ்வளவு ஆதரவு இருக்கிறது என இந்த செயலி அறிக்கைத்தரும். சும்மா இல்லை, எந்த எந்த பிரிவினர் மத்தியில் எந்த கட்சிக்கு எவ்வளவு ஆதரவு இருக்கிறது என விரிவாகவே அறிக்கை தரும்.

இந்த அறிக்கையை கொண்டு தேர்தல் களத்தில் முன்னணியில் உள்ள கட்சி எது என தெரிந்து கொள்ளலாம். தினமும் கூட இந்த செயலியை பயன்படுத்தி தேர்தல் நிலவரத்தை கண்காணிக்கலாம்.

மக்களவை , சட்டசபை இரண்டுக்குமே வாக்களிக்கும் வசதி இருக்கிறது. எந்த கட்சிக்கு அல்லது எந்த தலைவருக்கு வாக்களிக்கலாம் என்பதையும் கூட இதை வைத்து முடிவு செய்யலாம் என்கிறது இந்த செயலி.

உள்ளங்கையிலேயே தேர்தல் நிலவரத்தை தெரிந்து கொள்ள உதவும் இந்த செயலி அருமையானது தான் இல்லையா? ஆனால் ஒன்று , இந்த செயலி மூலம் வாக்களிப்பவர்களை வைத்தே இது நிலவரத்தை கணித்துசொல்கிறது. அதனால் என்ன கணிப்பு நிறுவனஙக்ளும் சில ஆயிரம் பேரிடம் கருத்து கேட்டு தானே தேசம் முழுவதற்கும் மாற்றிச்சொல்கிறது.

ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் முயன்று பாருங்கள் . முடிந்தால் கணிப்புகளையும் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.

செயலிக்கு செல்ல : https://play.google.com/store/apps/details?id=com.monocept.votingline&hl=en

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.