இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் பார்த்து ரசிக்க எளிய வழி!

insஇணையத்தில் புகைப்படங்களை பார்த்து ரசிக்க ஒரு காலத்தில் பிலிக்கர் தான் சிறந்த வழி. இப்போது இன்ஸ்டாகிராம் வந்திருக்கிறது. புகைப்படங்களுக்கான டிவிட்டரான இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் மூலம் பேசலாம் ,நட்பு கொள்ளலாம். 

இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளும் நட்சத்திரங்களும் இருக்கின்றனர். இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டே நட்சத்திரங்களானவர்களும் இருக்கின்றனர். இன்ஸ்டாகிராம் உறுப்பினர்களை பின் தொடர்பவர்களும் ஆயிரக்கணக்கில் இருக்கின்றனர். இன்ஸ்டாகிராமில் புகழ் பெறுபவர்கள் மற்றும் இந்த சேவையில் அதிகம் பார்க்கப்படும் புகைப்படங்கள் பற்றி அவ்வபோது செய்திகள் வெளியாவதுண்டு.

ஆனால் இன்ஸ்டாகிராமில் வெளியாகும் எல்லா புகைப்படங்களையும் பார்த்து ரசிக்க சுலபமான வழி இருக்கிறதா? து ! அந்த வழியின் பெயர் வேர்ல்ட்கேம். இந்த இணையதளம் , இன்ஸ்டாகிராமில் பகிரப்படும் புகைப்படங்கள எல்லாம் எளிதாக பார்க்க வழி செய்கிறது. அதுவும் எப்படி தெரியுமா? புகைப்படம் எடுக்கப்பட்ட நகரங்கள் மற்றும் இடங்கள் சார்ந்து அவற்றை பார்க்கலாம். உதாரனத்திற்கு சென்னையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்த்து ரசிக்கலாம். தளத்தில் நுழையும் போதே இதில் உள்ள தேடல் கட்டத்தில் சென்னையில் உள்ள இடங்களின் புகைப்படங்களை தேடுங்கள் என்று வருகிறது. சென்னையில் உள்ள எந்த இடத்தையும் குறிப்பிட்டு தேடலாம். அல்லது வேறு எந்த நகரையும் குறிப்பிட்டு அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்த்து ரசிக்கலாம்.

இன்ஸ்டாகிராம் உலகில் நுழைய அருமையான வழி.

இணைய முகவரி: http://worldc.am/

இதில் கண்ணில் பட்ட சில நம்மூர் இன்ஸ்டாகிராமர்கள்; http://instagram.com/ajsriram

http://instagram.com/arundesigns

http://instagram.com/iniyanshan

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

2 Comments on “இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் பார்த்து ரசிக்க எளிய வழி!

  1. ravindran.k

    interesting netxork

    Reply
    1. cybersimman

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *