லினக்ஸ் பற்றி நீங்கள் அறிந்திராத 10 விஷயங்கள்

linux_runs_supercomputersநீங்கள் தவிர்க்க இயலாமல் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை பயன்படுத்தலாம். ஆனால் நீங்கள் நிச்சயமாக லினக்சையும் அறிந்திருப்பீர்கள். ஓபன் சோர்ஸ் என்ப்படும் திறவு மூலம் இயக்கத்தின் நன்கறியப்பட்ட உதாரணமாக இருக்கும் லின்க்ஸ் பரவலாக கருதப்படுவது போல ஏதோ மாற்று ஆப்பரேட்டிங் சிஸ்டமோ அல்லது விண்டோஸ் பிடிக்காத தொழில்நுட்ப பித்தர்கள் பயன்படுத்துவது என்றோ நினைத்து விட வேண்டாம்.

ஒரு இயங்கு தளமாக (ஆப்பரேட்டிங் சிஸ்டம்) லினக்ஸ் நாம் நினைத்துக்கொண்டிருப்பதை எல்லாம் விட பிரபலமாகவும் பரவலாகவும் இருக்கிறது. உண்மையில் எங்கும் லினக்ஸ் எதிலும் லினக்ஸ் என்று சொல்லக்கூடிய வகையில் லின்கஸ் பயன்பாடு இருப்பதை தொழில்நுட்ப தளமான மேக் யூஸ் ஆப் , கட்டுரை அழகாக உணர்த்துகிறது. சூப்பர் கம்ப்யூட்டர்கள் முதல் கூகுலின் தானியங்கி கார் வரை எல்லாவற்றிலும் லினக்ஸ் பயன்படுத்தப்படுத்தப்படுதவதாக இந்த கட்டுரை உணர்த்துகிறது.

லின்கஸ் பற்றி நீங்கள் அறிந்திறாத பத்து விஷயங்கள் எனும் தலைப்பிலான் இந்த கட்டுரை , உங்களுக்கு தெரிந்திருந்தாலும் தெரியாவிட்டாலும் ,லினக்ஸ் எங்கும் இருக்கிறது என்கிறது. ஓபன் சோர்ஸ் என்பதால் வளைந்து கொடுக்க கூடியது, எந்த அமைப்பிற்கும் மாற்றக்கூடியது மற்றும் எந்த ஹார்ட்வேரிலும் செயல்படக்கூடியது ஆகியவற்றை லின்கசின் நீக்கமற நிறைந்திருக்கும் தன்மைக்கான காரணங்களாக இந்த கட்டுரை குறிப்பிடுகிறது. எல்லாவற்றுக்கும் மேல் லினக்ஸ் இலவசமானது.

சரி லினக்ஸ் அப்படி எங்கெல்லாம் பயன்படுகிறது ? பார்க்கலாம்;

சூப்பர் கம்ப்யூட்டர்கள்

சூப்பர் கம்ப்யூட்டர் எனப்படும் உலகின் அதிவேக கப்யூட்டர்கள் பற்றி அடிக்கட்டி கேள்விபட்டிருக்கிறீர்கள் இல்லையா? நம்பர் ஓன் அந்தஸ்து மாறுவது போல ,சூப்பர் கம்ப்யூட்டரும் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும்? இவ்வளவு ஏன் ? உலகின் முன்னணி 500 சூப்பர் கம்ப்யூட்டர்களை பட்டியலிடுவதற்கு என்றே ஒரு இணையதளம் இருக்கிறது ( http://www.top500.org/). அதைவிட முக்கியம் இவற்றில் பெரும்பாலான சூப்பர் கம்ப்யூட்டர்கள் லினக்சில் தான் இயங்குகின்றன. 2013 நவம்பரில் வெளியான சூப்பர் கம்ப்யூட்டர்கள் பட்டியல்படி உலகின் 482 முன்னணி சூப்பர் கம்ப்யூட்டர்களை லின்கஸ் சார்ந்தவை. சதவீதப்படி இது 96.4 சதவீதம்! இந்த பட்டயலில் விண்டோசுக்கு கொஞ்சுண்டு இடம் தான். நாமெல்லாம் , டெஸ்க்டாப்பில் லின்க்ஸ் பயன்படுத்தவோ யோசித்துக்கொண்டிருக்கிறோம் ,ஆனால் சூப்பர் கம்ப்யூட்டர்களே லின்க்சை தான் நம்புகின்றன பாருங்கள்!

விமானங்களில்

விமான பயணங்களில் டிவி பார்க்கவும் திரைப்படங்களை கண்டு ரசிக்கவும் வசதி இருக்கிறது . இணையததையும் பயன்படுத்த்லாம், வீடியோ கேம் ஆடலாம். இவற்றுக்கெல்லாம் எது அடிப்படை என்று நினைக்கிறீர்கள்? லினக்ஸ் தான். லின்கஸ் சுலபமானது மற்றும் இலவசமானது என்பதால் விமான சேவை நிறுவனங்கள் தங்களுக்கு ஏற்ற அமைப்புகளை உருவாக்கி கொள்ளலாம் என்பதால் ஆகாயத்தில் லின்க்ஸ் கோலோச்சுகிறது. யுனைடெட்,ஏர் டெல்டா, வர்ஜின் என எல்லா விமான சேவை நிறுவனங்களும் லின்க்சை தான் பயன்படுத்துகின்றன.

ஸ்மார்ட் பிரிட்ஜ்

போனில் இருந்து வாட்ச், டி.வி  என எல்லாமே ஸ்மார்ட் ஆகி கொண்டிருக்கும் காலம் இது. பிரிட்ஜிலும் கூட ஸ்மார்ட் பிரிட்ஜ் வந்துவிட்டது. ஸ்மார்ட் பிரிட்ஜ் என்றால் இணைய வசதி கொண்ட பிரிட்ஜ்!. கொஞ்சம் பழைய கருத்தாக்கம் என்றாலும் இப்போது தான் பிரபலமா

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

14 Comments on “லினக்ஸ் பற்றி நீங்கள் அறிந்திராத 10 விஷயங்கள்

  1. எதிர்கால கணினி உலகம் லினக்ஸிற்கானதுதான். நமது மக்களும் லினக்ஸிற்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகின்றனர். உலக அளவில் லினக்ஸ் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதை மிகவும் அழகாக பட்டிகலிட்டுள்ளீர்கள். நமது இந்தியாவில் கீழகாணும் துறைகளில் லினக்ஸ் பயன்படுத்தப்படுகிறது.
    1. இந்தியாவின் உச்சநீதி மன்றம், அனைத்து மாநிலங்களிலும் உள்ள உயர்நீதி மன்றம்.(Ubuntu 10.04 LTS)
    2. LIC(இந்தியா முழுவதும்).(Redhat)
    3. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும்.(Ubuntu 10.04 LTS)
    4. ST Courier Service(Mandriva Linux)
    5. தமிழ்நாடு மின்சார வாரியம்(Redhat Linux)
    6. ELCOT(Suse Enterprise Desktop and Server).
    7. கேரளாவில் அனைத்து துறைகளிலும்.
    இத்தனை துறைகளும் லின்க்சை தான் நம்புகின்றன. நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல நாமெல்லாம் டெஸ்க்டாப்பில் லின்க்ஸை பயன்படுத்தவே யோசித்துக்கொண்டிருக்கிறோம்

    Reply
    1. cybersimman

      இந்தியல் லினக்ஸ் பயன்பாடு பற்றிய தகவல்களுக்கு மிகுந்த நன்றி. தமிழக லினக்ஸ் பயன்பாடு பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரிவிக்கவும்.

      அன்புடன் சிம்மன்

      Reply
  2. லினக்ஸ் ப்ற்றிய நல்ல தகவல்கள் கட்டுரையில் அளித்தமைக்கு நன்றி! லினக்ஸ் கதிர்வேல் தமிழகத்தில் லினக்ஸ் பயன்பாடு குறித்து ஒரு பட்டியலே அளித்துள்ளார். சமீபத்தில் தமிழக அரசே சமீபத்தில் விண்டோஸ் எக்ஸ்பி காலாவதியாவதால் இனி அரசு அலுவலகங்களில் லினக்ஸ் பயன்படுத்த துவங்குமாறு ஒரு சுற்றரிக்கையும் அனுப்பியுள்ளது. விரைவில் பயன்பாடு அதிகமாகலாம். தமிழில் லினக்ஸ் பற்றி அறிய ஒரு கட்டுரை அளித்தால் நன்றாக இருக்கும் வாழ்த்துக்கள்

    Reply
    1. cybersimman

      மகிழ்ச்சி .நிச்யமாக லினக்ஸ் பயன்பாடு பற்று எழுதுகிறேன்.

      அன்புடன் சிம்மன்

      Reply
  3. சிறந்த பகிர்வு

    Reply
    1. cybersimman

      மிக்க நன்றி.

      Reply
  4. கே.எம்.அபுபக்கர்

    லினக்ஸ் ஃபார் யூ என்ற மாத இதழ் ஒன்றில் இது படித்த ஞாபகம். தகவல்கள் இந்த காலகட்டத்திற்கு மிகவும் பயனுள்ளதாகவே உள்ளன.
    மேலும் தகவல்களை தமிழில் எதிபார்க்கிறேன்.
    கே.எம்.அபுபக்கர்
    கல்லிடைக்குறிச்சி 627416

    Reply
    1. cybersimman

      மிக்க நன்றி.

      Reply
  5. murali

    நான் கடந்த மூன்று வருடமாக லினக்ஸ் மற்றும் உபுண்டு இரண்டையும் உபயோகிக்கிறேன் ,என் மகளுக்கு ஒரு கணினி வாங்கி அதில் உபுண்டு மற்றும் விண்டோஸ் இரண்டையும் இன்ஸ்டால் பண்ணி கொடுத்தேன் .அதில் என் மகளுக்கு உபுண்டு உபயோகிப்பது தான் சுலபமாக இருக்கிறது என்று சொல்கிறாள்.ஆனால் அவள் கல்லூரி நண்பர்கள் நீ அவ்ளோ பெரிய பிரிலியன்டா என்று கேட்டு கிண்டல் அடிக்கிறார்கள் .எவ்வளவு சுலபம் மற்றும் பாதுகாப்பு என்று உபயோகப்படுத்தி பார்பவர்களுக்கு தான் தெரியும். நல்ல பதிவு தொடர்ந்து இது சம்மந்தமான விபரங்களை பதியவும் .நன்றி.
    முரளி
    ஆஸ்திரேலியா

    Reply
    1. cybersimman

      மகிழ்ச்சி. லினக்ஸ் பற்றி விரிவான பதிவை எழுத உத்தேசித்திருக்கிறேன்.

      Reply
  6. Respected Cybersimman ji,
    i am one of the regular visitor’s your blog. I wish to publish my Blogs here. this is for who are suffering & loss in the share market. If they wish ‘ll ready to help them related this field .i am giving free services.if you wish you ‘ll publish my blogs here this is my blog ID : http://tradersguides.blogspot.in/
    Thanks in advance
    Regds P.Bharath

    Reply
    1. cybersimman

      பங்குச்சந்தை ஆர்வலர்கள் பார்க்கலாம்: : http://tradersguides.blogspot.in/

      Reply
  7. கே.எம்.அபுபக்கர்

    திரு முரளி ,
    வணக்கம்.
    தங்கள் குறிப்புரைக்கு மிக்க நன்றி.
    நானும் லினக்ஸ் – உபண்டோ உபயோகப்படுத்த முடிவு செய்துவிட்டேன்.

    Reply
    1. cybersimman

      லினக்சுக்கு மாறுவது நல்லது தான்.

      அன்புடன் சிம்மன்

      Reply

Leave a Comment

Your email address will not be published.