உலக கோப்பை அணிகளுக்கு ஆதரவு தெரிவிக்க டிவிட்டரில் ஹாஷ்பிளாக் அறிமுகம்

androidtimelines கால்பந்தின் சொர்கபூமி பிரேசில் உலககோப்பை கால்பந்து துவங்குகிறது. # இந்த உதைத்திருவிழாவை கொண்டாட டிவிட்டரை விட சிறந்த வழி எது? உடனுக்குடன் அப்டேட்கள், பிரத்யேக ஹாஷ்டேகுகளுடன் பிரத்யேக வசதிகளுடன் உங்களைப்போலவே டிவிட்டரும் உலக கோப்பை கொண்டாட தயாராகி இருக்கிறது. ஆம், குறும்பதிவு சேவையான டிவிட்டர் ,உலககோப்பைக்காக என்று புதிய வசதிகளை அறிமுகம் செய்துள்ளது.

இவற்றை நீங்களே கூட கவனித்திருக்கலாம். டிவிட்டர் தனது முகப்பு பக்கத்தையே மாற்றி அமைத்து கால்பந்து மயமாக்கி இருக்கிறது. # டிவிட்டரில் உலககோப்பை எனும் அழைப்புடன்!

உலக கோப்பைக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள வசதிகளில் அசத்தலானது ஹாஷ்பிளேகை பறக்க விடுவது. ஹாஷ்டேக் தெரிந்திருக்கும் , அதென்ன ஷாஷ்பிளேக்!. உலககோப்பையில் ஒவ்வொருவருக்கும் ஒரு அபிமான அணி இருக்கும் அல்லவா? அந்த அணிக்கு ஆதரவாக கொடி பிடிக்கும் வசதி தான் இது. அதாவது, உலககோப்பை தொடர்பாக பகிர்ந்து கொள்ளும் ஒவ்வொரு குறும்பதிவிலும் ஹாஷ்டேக் சின்னத்தை சேர்த்து அதனுடன் உங்கள் அபிமான நாட்டின் சுருக்க குறியீட்டினை குறிப்பிட்டால் ( உதார்ணமாக பிரேசில் என்றால் ) அந்த குறும்பதிவுடன் அதன் தேசியக்கொடி தோன்றும். ஆக ஒவ்வொரு குறும்பதிவிலும் அபிமான அணியின் கொடியை பறக்க விட்டு ஆதரவு தெரிவிக்கலாம். அது மட்டுமா.உங்கள் டைம்லைனில் கால்ந்து குறும்பதிவுகளில் உங்கள் அணியின் ஆதரவாளர்களையும் எளிதில் கண்டு கொள்ளலாம்.

ஹாஷ்பிளேக வசதி உண்மையில் , 2010 உலக கோப்பையிலேயே அறிமுகமானது.இப்போது மறு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மறு அறிமுகத்தை கொலம்பிய இசைக்குயில் ஷகிரா சிறப்பாக டிவீட் செய்திருந்தார். உலககோப்பை என்றால் ஷகிரா தான்!.

இதே போல உங்கள் டிவிட்டர் பின்னணியையும் அபிமான அணியின் வண்ணத்திற்கு மாற்றிக்கொள்ளலாம். அதே போல ஒவ்வொரு அணியிலும் டிவிட்டரில் பின் தொடர வேண்டிய முக்கிய டிவிட்டர் முகவரிகளையும் டிவிட்டரே முன் வைக்கிறது. அதே போலடைம்லைனுக்கு அருகிலேயே இன்றைய ஆட்டங்களின் பட்டியலும் இடம் பெறுகிறது.

இவைத்தவிர உலக கோப்பையின் ஒவ்வொரு நொடியையும் பின் தொடர இருக்கின்றன : #WorldCup2014 , #WorldCup .

ஆக ,டிவிட்டரில் உலக கோப்பையை கொண்டாடுங்கள்!.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.