டக் டக் கோவில் புதிய தேடல் வசதி

duckடக் டக் கோ கூகுலுக்கு மாற்றாக சொல்லப்படும் தேடியந்திரம் . பிரதான தேடல் தவிர சின்ன சின்ன தேடல் வசதிகளை அறிமுகம் செய்வதிலும் கூகுல் போலவே தான் இருக்கிறது டக் டக் கோ! உதாரணத்துக்கு நேரடியாக தேடும் வசதி.

அதாவது , குறிப்பிட்ட இணையதளங்களில் தேட வேண்டும் என்றால் அந்த தளத்திற்கு சென்று தான் தேட வேண்டும் என்ற அவசியம் இல்லாமலேயே , டக் டக் கோவில் இருந்தே அதில் தேடிக்கொள்ளலாம். தேடலுக்கான குறிச்சொல்லுடன் குறிப்பிட்ட அந்த இணையதளத்தின் பெயரையும் சேர்த்து டைப் செய்தால் , நமது தேடலுக்கான அந்த இணையதள முடிவுகள் டக் டக் கோ பக்கத்திலேயே வந்து நிற்கும். இந்த வசதியை ஐபேங்! என்று டக் டக் கோ குறிப்பிடுகிறது. இதற்கும் ஒரு உதாரணம் பார்க்கலாம். தொழில்நுட்ப வலைப்பதிவான மேக்யூஸ் ஆப் ( இந்த வசதி பற்றி அறிமுகம் செய்த தளம்) தளத்தில் ஐபோன் அல்லது ஆண்ட்ராய்டு ( நடுநிலை!) பற்றிய கட்டுரைகளை தேட விரும்பினால், டக் டக் கோவில் ஐபோன் அல்லது ஆண்ட்ராய்டு என டைப் செய்து கூடவே மேக்யூஸ் ஆப்! என குறிப்பிட்டால் போதும், இந்த தளத்தில் உள்ள தொடர்புடைய கட்டுரைகளை எல்லாம் பார்க்கலாம்.

இது போல நூற்றுக்கணக்கான இணையதளங்கள் பெயரை அடைப்புக்குறியிட்டு தேடும் வசதி இருக்கிறது. இணையதளங்கள் மட்டும் அல்ல, பல பொதுவான குறிச்சொற்களையும் இவ்வாறு தேடலாம். எடுத்துக்காட்டாக புகைப்படங்களை தேட வேண்டும் என்றால் குறிச்சொல்லுடன் இமேஜஸ் எனும் சொல்லை அடைப்புக்குறியுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த வசதிக்கான விரிவான பட்டியலையும் டக் டக் கோ கொடுத்துள்ளது: https://duckduckgo.com/bang.html#menu

தேடிப்பார்த்து சொல்லுங்கள். டக் டக் கோ பற்றிய விரிவான அறிமுகம் தேவையா? இந்த முந்தைய பதிவு பயனுள்ளதாக இருக்கும் :கூகுலுக்கு குட்பை சொல்லுங்கள்: அழைக்கும் புதிய தேடியந்திரம்

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.