புத்தாண்டு வாழ்த்துக்கள் -சிறந்த இணையதளங்கள்

ஆண்டின் ஒவ்வொரு நாளும் சிறந்த தினமே என்று உங்கள் இதயத்தில் எழுதி கொள்ளுங்கள் – எமர்சன்

புத்தாண்டு தொடர்பான சிறந்த இணையதளம் எது?  புத்தாண்டு வாழ்த்து சொல்வதும் , புத்தாண்டு வால்பேப்பர்களும் தான் உங்கள் மனதில் இருக்கின்றன என்றால் இந்த கேள்விக்கான பதில் http://www.happynewyear2015wallpaper.com/ . புத்தாண்டு இணையதளங்களில் மனதில் கொள்ள வேண்டிய விஷயம் என்ன என்றால் , அவை நிஜ தளங்களா? அல்லது நிழல் தளங்களா என்று புரியாத குழப்பம் தான்.  நிழல் தளங்கள் என்றால் புத்தாண்டு தொடர்பான குறிச்சொல் மூலம் கிடைக்கும் இணைய போக்குவரத்தை பயன்படுத்திக்கொண்டு விளம்பரம் மூலம் பணம் சம்பாதிப்பதற்காக அமைக்கப்பட்ட தளங்கள். இவற்றில் புத்தாண்டு குறிச்சொல்லை முன்னிலை படுத்தும் வகையில் ஏதேனும் தகவல் இருக்குமே தவிர ஊக்கமோ உற்சாகமோ தரக்கூடியவை அதிகம் இராது.

இப்படி புத்தாண்டு 2015 எனும் பெயரை தாங்கிய தளங்கள் பல இருக்கின்றன. மேலே சொன்ன இணையதளமும் இதே ரகமோ என சந்தேக்க வைத்தாலும் அதில் உள்ள தகவல்கள் புத்தாண்டை மெருக்கூட்டக்கூடிய வகையிலேயே இருக்கின்றன. புத்தாண்டு கொண்டாட்ட புகப்படங்கள், புத்தாண்டு மேற்கொள்கள், புத்தாண்டு வாழ்த்துக்கள் என வண்ணமயமாக இருக்கிறது இந்த தளம். குறிப்பாக புத்தாண்டு வால்பேப்பர்கள் அருமை. இந்தியா சார்ந்த வால்பேப்பர்களும் இருக்கின்றன. ஒவ்வொருவருக்கும் எப்படி புத்தாண்டு வாழ்த்து சொல்வது என்ற விவரமும் இருக்கிறது. புத்தாண்டில் உலா வந்தால் ஏமாற்றம் அளிக்காது. விளம்பரத்திற்காக அமைக்கப்ப்ட்டிருக்குமோ என்ற எண்ண்ணத்தை அளித்தாலும் இந்த தளம் அதை ஓரளவு நேர்மையுடன் நிறைவேற்றுவதை, விளம்பர்த்துக்காக மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது என்பதை அப்பட்டமாக உணர்த்தும் இந்த தளம் ; http://www.happynew-year.com/ மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இருக்கட்டும் , புத்தாண்டு தொடர்பாக அறிந்து கொள்ள வேண்டிய இரண்டு பொதுவான இணையதளங்களை பார்க்கலாம். ஒன்று டைம் அண்ட் டேட்.காம். இணையத்தின் மிக பழமையான இணையதளம் இது. உலகின் நேரம் காட்டி!. இந்த தளத்தில் உலகின் ஒவ்வொரு மூளையிலும் தற்போதைய நேரம் ,பல்வேறு டைம்சோன் ,நாட்காட்டி என பல விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். அவசியம் புக்மார்க் செய்ய வேண்டிய தளங்களில் முதம் 25 இடங்களில் எதில் வேண்டுமானலும் இந்த தளத்தை சேர்ந்த்துக்கொள்ளலாம். அது மட்டும் அல்ல புத்தாண்டை முன்னிட்டு விஷேச தகவலையும் இந்த தளம் அளிக்கிறது; புத்தாண்டி கவுண்டவுனை வழங்கியது. கவுண்டவுன் முடிந்து விட்டாலும் இதில் 2015 நாட்காட்டியை பார்க்கலாம்; http://www.timeanddate.com/calendar/?year=2015

இதே போல புத்தாண்டில் நினைவில் கொள்ள வேண்டிய இன்னொரு தளம் பிரைனிகோட்; இந்த தளம் புத்தாண்டுடன் நேரடியாக தொடர்புடையது அல்ல. இது மேற்காள்களுக்கான தளம். மேற்கோள்கள் அல்லது மொன்மொழிகளுககான தேடியந்திரம் மற்றும் வலைவாசலாக இந்த தளம் விளங்குகிறது. பொன்மொழிகளுக்கான தளம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக அமையும் இந்த தளம் எந்த குறிச்சொல்லுக்கான மேற்கோள்களையும் கொண்டிருக்கிறது.  புத்தாண்டு என தேடிப்பார்த்தால் புத்தாண்டு தொடர்பான அருமையான பொன்மொழிகளை காணலாம்.

கிழே ஆங்கில கவிஞர் டெனிசனின் புத்தாண்டு மேற்கோள்; http://www.brainyquote.com/quotes/quotes/a/alfredlord676236.html?src=t_newyears

வரவிருக்கும் ஆண்டுக்குள் இருந்து நம்பிக்கை புன்சிரிப்புடன் கிசுகிசுக்குகிறது; இது மகிழ்ச்சியாக இருக்கும்- டெனிசன்

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

மேலும் பயனுள்ள இணையதளங்கல், இணைய போக்குகள் மற்றும் இணைய கட்டுரைகளுடன் புதிய பகுதிகளுடன் தொடர்ந்து சந்திப்பொம்.- அன்புடன் சிம்மன்

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.