அறிவியல் கற்றுத்தரும் கூடைப்பந்து வீடியோ

இணையத்தை கலக்கி கொண்டிருக்கும் அந்த கூடைப்பந்து யூடியூப் வீடியோவை நீங்கள் பார்த்துவிட்டீர்களா? ரிலிசான முதல் சில நாட்களில் வசூலை வாரிக்குவிக்கும் சூப்பர் ஹிட் படத்தைப்போல அந்த கூடைப்பந்து வீடியோ இணையத்தில் வெளியான மூன்று நாட்களில் 12 மில்லியன் முறைக்கு மேல் பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவை பார்த்தவர்கள் எல்லாம் அதை தங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். விரைவில் உங்கள் பேஸ்புக் பக்கத்திலோ அல்லது வாட்ஸ் அப் செய்தியிலோ கூட அந்த வீடியோ எட்டிப்பார்க்கலாம்.

அப்படி என்ன இருக்கிறது அந்த வீடியோவில்?

ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியாவில் உள்ள கார்டன் டேம் அணைக்கட்டு பகுதியில் எடுக்கப்பட்ட அந்த காட்சியில் இளைஞர் ஒருவர் மேலிருந்து கூடைப்பந்தை வீசி எறிகிறார். 415 அடி உயரமான பிரம்மாண்ட அணை அது. அதாவது 38 அடுக்குமாடிக்கட்டிடங்களின் உயரத்தை கொண்டது. அவ்வளவு உயரத்தில் இருந்து கூடைப்பந்தை வீசி எறிந்து அது கீழே விழும் காட்சி இந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.

அணைக்கட்டு உயரத்தில் இருந்து கூடைப்பந்தை வீசி எறிவதை படமெடுப்பது என்ன பெரிய விஷயமா என்று நீங்கள் கேட்கலாம். இதன் பின்னே விஷயமும் இருக்கிறது, விஞ்ஞானமும் இருக்கிறது. அதை தெரிந்து கொள்ள வீடியோவை தொடர்ந்து பார்க்க வேண்டும்.

முதல் முறை பந்தை வீசி எறிந்த பிறகு அந்த இளைஞர் மீண்டும் அந்த பந்தை வீசி எறிகிறார். ஆனால் அதற்கு முன்பாக, இந்த முறை பந்தை சுழலவிட்டு எறிவதாக சொல்கிறார். சுற்ற்ச்சுழலும் அந்த பந்து கீழே செல்கையில் அப்படியே காற்றில் அடித்துச்செல்லப்பட்டு நன்றாக தொலைவில் சென்று விழுகிறது. முதல் முறைக்கும் இரண்டாம் முறைக்கும் ஏன் இந்த வித்தியாசம்?

மேக்னஸ் விளைவு தான் இந்த வித்தியாசத்திற்கு காரணம் என்று இளைஞர் அதை அழகாக விளக்குகிறார்.
மேக்னஸ் விளைவு என்பது 1952 ம் ஆண்டு குஸ்தாவ் மேக்னஸ் எனும் விஞ்ஞானி கண்டுபிடித்த மேக்னஸ் விசையை சுட்டிக்காட்டுகிறது. இதை புரிந்து கொள்ள மீண்டும் வீடியோ விளக்கத்திற்கே செல்வோம்.
கூடைப்பந்தை சாதாரணமாக கீழே போடும் போது அது கிட்டத்தட்ட அப்படியே செங்குத்தாக சென்று விழுகிறது. ஆனால் அதே பந்தை சுழலவிடும் போது விஞ்ஞான விளைவுக்கு இலக்காகிறது. அதாவது சுழலும் பந்து காற்றின் வீச்சின் தாக்கத்திற்கு இலக்காகிறது. அதாவது காற்று அது சுழலும் திசையில் வீசுகிறது. ஆனால் பந்து முழுவதும் சுழலும் போது காற்று அதன் சுழற்ச்சியின் எதிர் திசையில் வீசுகிறது. இப்படி சுழலும் பந்தின் இரு பக்கமும் காற்று எதிர் எதிர் திசைகளில் வீசுவதால் ஏற்படும் தாக்கம் அதை தள்ளிப்போகச்செய்கிறது. அதனால் தான் சுழலும் கூடைப்பந்து அணைக்கட்டில் கொஞ்ச தூரம் அடித்துச்செல்லப்படுகிறது.

5 நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் ஒரு கூடைப்பந்தை வீசி எறிந்து மேக்ன்ஸ் எனும் பலரும் அறியாத அறிவியல் உண்மையை இந்த வீடியோ அழகாக விளக்கி விடுகிறது.
பலரும் அறியாத விளைவாக இருந்தாலும் மேக்ன்ஸ் விளைவு விளையாட்டு உள்ளிட்ட பல துறைகளில் பயன்படுகிறது. கால்பந்திலும் , கால்ப் களத்தில் சுழலும் பந்தின் திசையை தீர்மானிப்பது வீரர்களின் லாவகம் மட்டும் அல்ல; மேக்னஸ் விளைவும் தான்.
அது மட்டும் அல்ல கப்பல் போக்குவரத்தில் இந்த விளைவு மிக அழகாக பயன்படுத்தப்படுகிறது. இது பற்றியும் வீடியோ விளக்குகிறது.

இந்த அழகான வீடியோவை விஞ்ஞான வீடியோக்களுக்காக அறியப்படும் வெரிடாசியம் (Veritasium) யூடியூப் சேனல் பகிர்ந்து கொண்டுள்ளது. கொஞ்சம் சுவாரஸ்யமான முறையில் அறிவியலை புரிய வைக்கும் யூடியூப் சேனல்களில் இதுவும் ஒன்றாக இருக்கிறது. இந்த சேனலின் பின்னே உள்ள டெரிக் முல்லர் தான் இப்படி அசத்தலாக கூடைப்பந்து வீடியோவை உருவாக்கி இருக்கிறார்.

நீங்களும் சென்று பாருங்கள்: https://www.youtube.com/watch?v=2OSrvzNW9FE
மேக்னஸ் விளைவு பற்றி தெரிந்து கொள்ள விரும்பினால் அதற்கான இணைப்பு இதோ: http://www.humankinetics.com/excerpts/excerpts/magnus-effect-

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.