பிரிபேசிக்சை ஆதரிக்கலாமா? ஒரு விளக்கம்

_0eb19116-a47b-11e5-a915-4cd4d91edd66பேஸ்புக்கில் நண்பர்கள் பலரும் பிரிபேசிக்ஸ் திட்டத்தை ஆதரித்து கையெழுத்திட்டிருப்பதாக பேஸ்புக் தொடர்ந்து தகவல் அளித்துக்கொண்டே இருக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் டிஜிட்டல் இடைவெளியை போக்குவதற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் நம்ப வைக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் இந்த ஆதரவில் மிகப்பெரிய சிக்கல் இருக்கிறது. உண்மையில் பிரிபேசிக்ஸ் என்பது இணைய சமநிலைக்கு எதிரானது என சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு நாம் எல்லாம் எதிர்த்து போராடி டிராய் அமைப்பிறகு லட்சகணக்கில் மெயில் அனுப்பியது நினைவில் உள்ளதா?
அதே இணைய சமநிலைக்கு எதிராக தான் இப்போது பேஸ்புக் மூலம் பிரிபேசிக்சிற்கு ஆதரவாக மெயில் அனுப்புகிறோம்.

இது புதிராக இருக்கலாம். ஆனால் இதை பேஸ்புக்கின் தந்திரம் அல்லது ஏமாற்று வேலை என்கின்றனர். பேஸ்புக் மிக சாமர்த்தியமாக இந்தியர்களில் பெரும்பாலானோர் எதிர்த்த இணைய சமநிலைக்கு எதிரான ஒன்றை வார்த்தை விளையாட்டுகள் மூலம் ஆதரிக்க வைத்திருக்கிறது.
எப்படி என்றால், பிரிபேசிக்ஸ் என்பது ஏற்கனவே பேஸ்புக் முன்வைத்த இண்டெர்நெட்.ஆர்க் திட்டத்தின் வேறு பெயரே.

தொலைதொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து இணைய வசதி இல்லாதவர்களுக்கு இலவச இணைப்பை அளிக்கும் நோக்கம் கொண்டதாக இண்டெர்நெட்.ஆர்க் திட்டம் விளக்கப்படுகிறது.
ஆனால் இதில் உள்ள சிக்கல் என்ன என்றால், இது முழு இணையத்தையும் இலவசமாக அளிக்க முற்படாமல் பகுதி அளவு இணையத்தை மட்டுமே அளிக்கிறது. அதில் பேஸ்புக்கும் இன்னும் சில தளங்களும் இருக்கும்.
இந்தியாவில் இணைய சமநிலை எதிர்ப்பின் போது இந்த திட்டமும் கடும் விமர்சனத்திற்கும் இலக்காகி, பல நிறுவங்கள் இதில் இருந்து விலகின. அதன் பிறகு பேஸ்புக் இதன் பெயரை பிரிபேசிக்ஸ் என்று மாற்றி உள்ளது. மேலும் இதில் இணையதளங்கள் இடம்பெறும் முறையையும் மாற்றி உள்ளது.
ஆனால் அடிப்படையில் இது இன்னமும் இணைய சமநிலை கொள்கைக்கு எதிராகவே இருப்பதாக விமர்சிக்கப்படுகிறது.

இந்த நிலையில் தான் பேஸ்புக் பிரிபேசிக்ஸ் ஆதரவு விண்ணப்பத்தை முன்வைத்து கையெழுத்து கேட்கிறது.
இதில் உள்ள வாசகங்கள் மிக கவனமாக இந்தியாவில் இணைய்த்தை அணுக வாய்ப்பில்லாதவர்கள் அதை இலவசமாக பெறுவதை தடுக்க முயற்சி நடப்பது போலவும், அதற்கு மாறாக டிஜிட்டல் இடைவெளியை போக்கும் வகையி, பிரிபேசிக்சை ஆதரிக்குமாறு கூறப்பட்டுள்ளது.
இதை ஆமோதித்து கிளிக் செய்தால் , பிரிபேசிக்சை நான் ஆதரிக்கிறேன் எனும் செய்தி டிராய் அமைப்புக்க் போய் சேரும்.

இது தான் வில்லங்கம். பயனாளிகளை குழப்பி பேஸ்புக் தன் சார்பாக பேச வைக்கிறது.
எல்லாம் சரி, அது தான் கடந்த ஆண்டே டிராய் கருத்து கேட்ட போது எதிர்ப்பை தெரிவித்தோமே என நீங்கள் நினைக்கலாம். அது சரி தான். அது தொடர்பாக இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை.,
இந்நிலையில் ட்ராய் கடந்த வாரம் மீண்டும் ஒரு ஆவணத்தை வெளியிட்டு கருத்து கேட்டுள்ளது. இது இணைய சமநிலை தொடர்பானது அல்ல.

ஜிரோ ரேட்டிங் எனப்படும், வெவ்வேறு சேவைகளுக்கு வேறு வேறு கட்டணங்கள் வசூலிக்க அனுமதி கோருவது தொடர்பான அறிக்கை இது. ஆனால் உள்ளடக்கத்தி அது இணைய சமநிலைக்கு வேட்டு வைக்க கூடியது.
வெவ்வேறு கட்டண முறையை அனுமதிப்பது என்பது இணைய சமநிலையை குலைக்கவே வழி செய்யும்.
இது தொடர்பாக தான், பேஸ்புக் பிரிபேசிக்சை ஆதரிக்க கேட்கிறது.
இணைய சமநிலைக்கு இது எதிரானதல்ல என்று சொல்கிறது.
புரிந்து கொண்டு செயல்படுங்கள்.

தேவை எனில் பேஸ்புக்கிற்கு இந்த செய்தியை அனுப்பலாம் என இணைய சமநிலை ஆதரவாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.

டிராய் புதிய அறிக்கை பற்றிய அருமையான விளக்க செய்தி: http://www.hindustantimes.com/tech/decoded-what-trai-s-latest-paper-about-zero-rating-is-all-about/story-RhvyVx6OkbgsTkJlKo8vXP.html

அன்புடன் சைபர்சிம்மன்

குறிப்பு; இதை ஷேர் செய்யுங்க என்றெல்லாம் கேட்க மாட்டேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *