எளிதாக புக்மார்க் செய்ய உதவும் தளம்

firefox-pocket-alternatives-savedio-interfaceஇணையதளங்களை புக்மார்க் செய்வது இதைவிட எளிதாக இருக்க முடியாது என்று சொல்லக்கூடிய அளவுக்கு, சுலபமாக நாம் பார்க்கும் இணையதளங்களை குறித்து வைக்க வழி செய்கிறது டேவ்டு.இயோ இணையதளம்.
சேவ்டு.இயோ சேவையை பயன்படுத்தி புக்மார்க் செய்ய நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், இதில் உறுப்பினராக பதிவு செய்து கொள்ள வேண்டியது மட்டும் தான். அதன் பிறகு, இந்த தளத்திற்கு விஜயம் செய்யாமலேயே, தேவையான இணையதளங்களை புக்மார்க் செய்து கொள்ளலாம்.

இதற்காக, எதையும் டவுண்லோடு செய்து கொள்ளும் தேவையும் கிடையாது. எந்த தளத்தை பார்த்துக்கொண்டிருக்கிறோமோ அதன் இணைய முகவரியின் முடிவில் சேவ்டு.இயோ என டைப் செய்தால் போதும், அந்த தளம் சேமிக்கப்பட்டு விடும். இப்படி பார்க்கின்றன பயனுள்ள தளங்களை எல்லாம் புக்மார்க் செய்து கொண்டு, பின்னர் எப்போது தேவையோ அப்போது பார்த்துக்கொள்ளலாம்.

இணைய முகவரிகளை வகைப்படுத்த விரும்பினால், அதற்கான தலைப்பை குறிப்பிட்டு டைப் செய்தால் போதுமானது. ஒவ்வொரு இணைப்புக்கும் ஒரு வரி குறிப்பை எழுதலாம்.

மற்றபடி வேறு எந்த உபவசதியும் இல்லாமல் எளிமையாக இருக்கிறது. விரைவாக செயல்படும் சேவையாக இது இருக்கும் என்று சேவ்டு.இயோ சேவையை உருவாக்கிய ஆந்தோனி பியண்ட் குறிப்பிடுகிறார்.

இணையதள முகவரி:http://saved.io/

—-
குறிப்பு; புக்மார்கிங் சேவைகள் பல இருக்கின்றன. இவற்றில் ஒன்றான டூரீட். சிசி தளம் பற்றி இணையத்தால் இணைவோம் புத்தகத்தில் அறிமுக செய்திருந்தேன். ஆனால் அந்த தளம் இப்போது செயல்பாட்டில் இல்லை. மினிலாக்ஸ் எனும் மற்றொரு அருமையான புக்மார்கிங் சேவை பற்றிய அறிமுகமும் அந்த புத்தகத்தில் உள்ளது. இணையதளங்களை குறித்து வைப்பதை ஒரு சஞ்சிகை போல மாற்றிக்காட்டும் சேவையான அந்த தளம் இப்போது, இசை சார்ந்த இணைய இணைப்புகளை பிளே லிஸ்ட்டாக மாற்றும் சேவையாக உருவாறி இருக்கிறது. ஆக, விரைவில் இந்த தொகுப்பிற்கான அப்டேட் தேவை என நினைக்கிறேன். : http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.