எங்கே ஏ.டி.எம்? எங்கே பணம்? வழிகாட்டும் இணையதளங்கள்

cashnocash_1479371497620-jpegபிரதமர் நரேந்திர மோடியின் கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையால் என்ன பலன் ஏற்படுகிறதோ தெரியாது. ஆனால் இப்போதைக்கு பொது மக்கள், எந்த ஏ.டி.எம்மில் பணம் வருகிறது எனும் கேள்வியோடு ஒவ்வொரு ஏ.டி.எம்-மாக அலைந்து கொண்டிருக்கின்றனர். இந்த அலைச்சலை குறைக்கும் வகையில் ஏ.டி.எம் இயந்திரங்கள் இருக்கும் இடங்களை சுட்டிக்காட்டி வழிகாட்டும் இணையதளங்கள் உருவாகி இருக்கின்றன.
ஏடிஎம் தேடல்!
ஏடிஎம் சர்ச் இணையதளம் உங்கள் பகுதி அருகாமையில் உள்ள ஏடிஎம்களில் பணம் வரும் ஏடிஎம்-ஐ தேட உதவுகிறது. மிக எளிமையாக வடிவமைப்பக்கப்பட்டுள்ள இந்த தளத்தின் தேடல் கட்டத்தில் நீங்கள் இருக்கும் பகுதியை டைப் செய்தால் அருகாமையில் உள்ள ஏடிஎம் மையங்களை பட்டியலிட்டு அங்குள்ள பண பட்டுவாடா நிலையை தெரிவிக்கிறது. எவ்வளவு பேர் காத்திருக்கின்றனர் என்ற நிலையையும் தருகிறது.
ஐ.ஐ.டி பட்டதாரியான லோகேஷ் வர்மா என்பவர் இந்த தளத்தை உருவாக்கியிருக்கிறார். இதில் தரப்படும் தகவல்கள் துல்லியமானவை என்று சொல்ல முடியாவிட்டாலும் நிச்சயம் வழிகாட்டியாக விளங்க கூடியவை. பயனாளிகள் பதிவு செய்யும் தகவல்கள் மூலம் இந்த தளம் இயங்குகிறது. நீங்களும் கூட உங்களுக்கு தெரிந்த தகவலை பதிவு செய்யலாம்.
இணையதள முகவரி:http://atmsearch.in/
இதை உருவாக்கிய லோகேஷின் டிவிட்டர் முகவரி:@WoCharLog
இணைய நிறுவனமான குவிக்கர் மற்றும் சாப்ட்வேர் நிறுவனங்களுக்கான அமைப்பான நாஸ்காம் இணைந்து உருவாக்கிய கேஷ்னோகேஷ்.காம் தளமும் ஏ.டி.எம்களை தேட உதவுகிறது. இதில் உள்ள தேடல் கட்டத்தில் இருப்பிடத்தை டைப் செய்து, பணத்தை தேடு என்றால், அருகாமை ஏ.டி.எம்களை பட்டியலிடுகிறது.
இணையதள முகவரி:https://cashnocash.com
ஏ.டி.எம் இயந்திரங்களில் பணம் நிரப்பும் பணியில் ஈடுபட்டுள்ள சி.எம்.எஸ் நிறுவனமும் தன்பங்கிற்கு ஏடிஎம் தேடல் தளத்தை அமைத்துள்ளது. ஆனால் இந்த தளத்தில் இதன் வலைப்பின்னலில் உள்ள ஏடிஎம்களை மட்டுமே தேடலாம்.
கூகுளில் ஏடிஎம் தேடல்!
தேடியந்திரமான கூகுளும் ஏடிஎம் தேடல் சேவையை அறிமுகம் செய்துள்ளது. கூகுளின் முகப்பு பக்கத்திலேயே, உங்கள் அருகாமையில் உள்ள ஏடிஎம்களை தேட எனும் வாசகம் இடம்பெற்றுள்ளது. இந்த இணைப்பை கிளிக் செய்தால் கூகுள் வரைபடத்தின் மீது உங்கள் பகுதியில் உள்ள ஏடிஎம்களை பார்க்கலாம். ஆனால் அவற்றில் பணம் வருகிறதா? எனும் விவரம் தெரியாது.
இவைத்தவிர வால்நெட் செயலி, பண பட்டுவாடா செய்யும் ஏடிஎம்களை அடையாளம் காண உதவுகிறது. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ரூபாய் நோட்டு கிடைக்கிறதா எனும் விவரததை கூட இடம்பெற வைக்க இந்த செயலி திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி.கு: நெருக்கடியான நேரங்களில் தொழில்நுட்பம் போல உதவக்கூடியது வேறு எதுவும் இல்லை. 2015 சென்னை புயல் மழையின் போது மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் உதவ இணையவாசிகள் பல்வேறு இணைய முயற்சிகளில் ஈடுபட்டது போல, இப்போது பணத்தட்டுப்பாடி பரிதவிப்புக்கு நடுவே பொதுமக்களுக்கு வழிகாட்டும் வகையில் இந்த ஏடிஎம் தேடல் தளங்கள் செயல்பட்டு வருகின்றன.
இன்னொரு முக்கிய முயற்சியாக சென்னையை சேர்ந்த இளைஞர்கள் சிலர், வங்கிகளில் தன்னார்வ பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வங்கி விஷயங்களில் விவரம் அறியாத மக்களுக்கு விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்வது போன்ற உதவிகளை செய்து வருகின்றனர். சென்னை டிரைகலர் இனிஷியேட்டிவ் எனும் பெயரில் செயல்பட்டு வரும் இந்த இளைஞர்களுடன் இணைந்து செயல்பட விரும்பும் தன்னார்வலர்களுக்காக ஒரு விண்ணப்ப படிவமும் உள்ளது:https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeX5oIMv2JJKrUCOMClZeNSPJGPJbnoH9rTmF8maX9WT3GpfA/viewform?c=0&w=1

இளைஞர்களின் தன்னார்வ முயற்சி தொடர்பான யுவர்ஸ்டோர் தளத்தின் பதிவு:https://tamil.yourstory.com/read/fb8fd6efb0/vellamo-chennai-chennai-to-help-young-people-in-difficult-circumstances-tataiyo-bill-

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.