கருப்பு பண விவகாரமும், குவோரா கேள்வியும்!

zestகேள்வி பதில் சேவையான குவோரா என்னை எப்போதும் வியக்க வைத்துக்கொண்டே இருக்கிறது. நான் குவோராவின் தீவிர பயனாளி இல்லை என்றாலும் கூட, இந்த சேவை அடிக்கடி கவனத்தை ஈர்த்து தனது சேவையின் சிறப்பம்சத்தின் நீள அகலங்களை நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது.
குவோரா இப்படி கவர்வதற்கான காரணம் அதில் கேட்கப்படும் கேள்விகள். அவற்றுக்கு அளிக்கப்படும் பதில்கள்!
இதற்கு ஓராயிரம் உதாரணங்கள் சொல்லலாம். இதே சற்று முன் தடுக்கி விழுந்த உதாரணம் ஒன்றை சொல்கிறேன்.
ஜெஸ்ட் மணி எனும் இணைய சேவை தொடர்பான தகவல்களை இணையத்தில் தேடிக்கொண்டிருந்தேன். ரொக்கமில்லா பொருளாதாரம் தொடர்பான தகவல்களை தேடிக்கொண்டிருந்த போது ஜெஸ்ட்மணி சேவை பற்றிய கட்டுரையை படிக்க நேர்ந்தது. மேலும் தகவல்களை தேடலாம் என்ற தேடினேன். இந்த தேடலில் பட்டியலிடப்பட்ட முடிவுகளில் ஒன்று பளிச்சென கவனத்தை ஈர்த்தது.
ஜெஸ்ட்மணியின் கார்டு இல்லாத இ.எம்.ஐ வசதியை நம்பலாமா? எனும் கேள்விக்கான குவோரா தளத்தின் இணைப்பு தான் அது.
மிகவும் முக்கியமான கேள்வி இது. ஜெஸ்ட்மணி பற்றி அறிய விரும்புகிறவர்கள் பலரது மனதில் எழக்கூடிய கேள்வி தான் இது. ஏனெனில், ஜெஸ்ட்மணி கிரெடிட் கார்டு இல்லாமல் இணையத்தில் பொருட்களை வாங்க வழி செய்வதாக கூறுகிறது. அதன் பிறகு 12 மாதத்தவணைகளில் தொகையை அடைத்துவிடலாம்.
கார்டு இல்லாதவர்கள் லேப்டாப் போன்ற பொருட்களை இணைய கடனில் வாங்கிக்கொண்டு பின்னர் மாதத்தவணையில் அடைக்க வழி செய்வதே இந்த சேவையின் முக்கிய அம்சம்.
கொஞ்சம் புதுமையான ஐடியா என்பதால், ஜெஸ்ட்மணியை அறிமுகம் செய்து கொள்ளும் போது, உண்மை தானா? இதில் ஏமாற்று எதுவும் இல்லையே என்று கேட்கத்தோன்றும்.
இந்த கேள்வி எழுந்தவுடன், ஜெஸ்ட்மணியை நம்பலாமா என விசார்த்து பார்க்கத்தோன்றும். ஆனால் யாரிடம் கேட்பது? எப்படி கேட்பது?
இந்த குழப்பங்களுக்கு தேவையே இல்லாமல் குவோரா தளத்தில் யாரோ ஒருவர் இந்த கேள்வியை கேட்டிருக்கிறார். இப்படி பலரும் கேட்க விரும்பும் கேள்விகளுக்கான தளமாக இருப்பது குவோரா சேவையின் முதல் பாதி சிறப்பு!. இந்த கேள்விகளுக்கான பதில்கள் தான் அதன் இரண்டாம் பாதி சிறப்பு.’
குவோராவில் பெரும்பாலும் கேள்விகளுக்கான பதில்கள் பயனுள்ளதாகவும், ஆதாரபூர்வமாகவும் இருப்பது மட்டும் அல்ல விஷயம், பல நேரங்களில் சம்பதப்பட்ட நபரே அதற்கான பதில் அளிப்பதை பார்க்கலாம். அதாவது யாரை நோக்கி கேள்வி கேட்கப்படுகிறதோ அதற்கு பதில் அளிக்கும் பொறுப்பில் உள்ளவரே குவோராவில் ஆஜராக பதில் அளிப்பது உண்டு.
ஜெஸ்ட்மணி விஷயத்தில் அதன் சி.இ.ஓவான லிஸ் சாப்மேனே, பதில் அளித்திருக்கிறார்.
ஆம், நம்பலாம் என தனது பதிலை துவங்கியுள்ளவர், நிறுவனத்தை இணையம் மூலம் கடனில் பொருட்களை வாங்க உதவுவதற்கான புதிய தொழில்நுட்ப மேடை என்று விளக்குகிறார். அவரது பதிலை இங்கே படிக்கலாம்:https://www.quora.com/Can-I-trust-the-EMI-without-card-by-ZestMoney
இதற்கு நம்மூர் உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் சரவணா ஸ்டோர்ஸ் பற்றிய ஒரு கேள்விக்கு அதன் நிறுவனரே பதில் அளித்தால் எப்படி இருக்கும் சொல்வது பொருத்தமாக இருக்கும்.
நிற்க, ஜெஸ்ட்மணி இணையதளம் அல்லது நிறுவன செய்திக்குறிப்பில் அதன் சேவை பற்றி விளக்குவது அல்லது பெருமைப்பட்டுக்கொள்வது என்பது வேறு, குவோரா போன்ற பொதுவெளி மேடையில், இணையவாசிகளின் கேள்விக்கு வெளிப்படையாக பதில் அளிப்பது என்பது வேறு. இதில் நம்பக்த்தன்மையும், பொற்ப்பேற்பும் அதிகம்.
அதனால் தான் குவோராவை கொண்டாடத்தோன்றுகிறது. இதை நான் பல தருணங்களில் உணர்ந்திருக்கிறேன்.
இப்போது உணர்ந்து இன்னொரு உதாரணமும் இருக்கிறது.
ரொக்கமில்லா பொருளாதார தகவல் தேடலில், இன்னொரு புள்ளியில் ரெட்டிப் தளத்தில், 500, 1000 ரூபாய் நோட்டுகளை விலக்கி கொள்ள மோடிக்கு ஆலோசனை அளித்தவர் எனும் தலைப்பிலான கட்டுரையை பார்த்தேன். அதில் குறிப்பிடப்பட்டிருந்த அனில் போகில் பற்றி கூடுதல் தகவல் தேடிய போது, ’யார் இந்த அனில் போகில், ஏன் இவரைப்பற்றி எல்லோரும் பேசுகின்றன்றனர்? எனும் கேள்வி கண்ணில் பட்டது. குவோரா தளத்தில் கேட்கப்பட்டது தான்.
இந்த கேள்விக்கு குவோரா தீவிர பயனாளி ஒருவர் அருமையாக பதில் அளித்திருக்கிறார்.
பிரதமர் மோடியிடம் 9 நிமிடம் பேச அனுமதி கேட்டு அவரை இரண்டு மணி நேரம் கேட்க வைத்தவர் எனும் அறிமுகத்துடன் துவங்கும் இந்த பதில், அர்த்தகிரந்தி சன்ஸ்தன் எனும் பொருளாதார ஆலோசனை அமைப்பின் முக்கிய உறுப்பினராக அவர் இருப்பதை குறிப்பிட்டு அவர் சொன்ன யோசனைகளை விவரிக்கிறது.- https://www.quora.com/Who-is-Anil-Bokil-Why-is-there-so-much-talk-about-him
இப்படி குவோரா வியக்க வைத்துக்கொண்டே இருக்கிறது.

பி.கு: புதிய தலைமுறை கல்வி இதழில் எழுதி வரும் நம் காலத்து நாயகர்கள் தொடரில் குவோரா பற்றி விரிவாக எழுதியிருக்கிறேன். குவோரா நிறுவனரை மையமாக கொண்ட அந்தக்கட்டுரையை படிக்க விரும்புகிறவர்கள் மின்னஞ்சல் மூலம் கோரினால் அந்த கட்டுரையை அனுப்பி வைக்கிறேன்.

கேள்வி பதில் சேவையான குவோரா என்னை எப்போதும் வியக்க வைத்துக்கொண்டே இருக்கிறது. நான் குவோராவின் தீவிர பயனாளி இல்லை என்றாலும் கூட, இந்த சேவை அடிக்கடி கவனத்தை ஈர்த்து தனது சேவையின் சிறப்பம்சத்தின் நீள அகலங்களை நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *