சிறந்த புத்தக பட்டியல் இணையதளம்

41ZsxDqUW1L._SL160_சிறந்த புத்தகங்களின் பட்டியல் எப்போதுமே சர்ச்சைக்கும், விவாதத்திற்கும் உரியவையாக இருந்தாலும், படிக்க வேண்டிய புத்தகங்களை அறிமுகம் செய்வது கொள்ள இத்தகைய பட்டியல்கள் சிறந்த வழி என்பதை மறுப்பதற்கில்லை. விடுபடல்கள் மற்றும் அளவுகோள் தொடர்பான கேள்விகளை மீறி, சிறந்த புத்தகங்களின் பட்டியல் கவனிக்க வேண்டிய நூல்களை முன்னிறுத்த தவறுவதில்லை. இத்தகைய பட்டியல்களின் அடிப்படையில் உலகின் சிறந்த புத்தகங்களின் பட்டியலை தொகுத்தளித்து வாசகர்களுக்கு வழிகாட்டுகிறது தி கிரேட்டஸ்ட் புக்ஸ்.ஆர்க் இணையதளம்.

இந்த தளத்தில் பிரதானமாக, உலகின் சிறந்த நாவல்களின் பட்டியல் முகப்பு பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. பல்வேறு கால கட்டங்களுக்கு ஏற்ப இந்த பட்டியலை மாற்றி அமைத்துக்கொள்ளலாம். இதே போல புனைகதை வரிசையில் சிறந்த புத்தகங்களின் பட்டியலும் தனியே இடம்பெற்றுள்ளது.

சிறந்த நூல்களுக்கான நூற்றுக்கும் மேற்பட்ட பட்டியல்களை ஒருங்கிணைத்து அவற்றில் இடம்பெற்றுள்ள பரிந்துரை மற்றும் புத்தகங்களின் அடிப்படையில் இந்த பட்டியல் மென்பொருள் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூல பட்டியல்களும் தனியே தொகுத்து அளிக்கப்பட்டுளது.

இவைத்தவிர பலவிதமான புத்தகங்களின் பட்டியலும் இடம்பெற்றுள்ளன. 2014 க்கு பிறகு இந்த தளம் புதுப்பிக்கப்பட்டதாக தெரியவில்லை என்றாலும், இதில் உள்ள புத்தக பட்டியல்கள் வாசகர்களுக்கு வழிகாட்டும் வகையில் அமைந்துள்ளன.

நிச்சயமாக புத்தக புழுக்களுக்கு சுவாரஸ்யம் அளிக்க கூடிய இணையதளம். தீவிர வாசிப்பு பழக்கம் கொண்டவர்கள் தாங்கள் தவறிவிட்ட பொக்கிஷங்களை இதன் மூலம் அறியலாம். புதிய வாசகர்கள் அடுத்து படிக்க வேண்டிய முக்கியமான புத்தகங்களை அடையாளம் காணலாம்.

இணையதள முகவரி: http://thegreatestbooks.org/

—–]

செயலி புதிது: சவால் விடும் மொபைல் விளையாட்டு

பிளாப்பி பேர்ட் மொபைல் விளையாட்டை நினைவு இருக்கிறதா? எளிதாக இருந்தாலும், ஒரு போதும் வெற்றி கொள்ள முடியாத அளவு சிக்கலானதாகவு8ம் இருந்து கடுப்பேற்றி ஸ்மார்ட்போன் பிரியர்களை பித்து பிடிக்க வைத்த இந்த விளையாட்டை உருவாக்கிய வியட்னாம் வடிவமைப்பாளர் புதிதாக நிஞ்சா ஸ்பிங்கி எனும் புதிய மொபைல் விளையாட்டை அறிமுகம் செய்துள்ளார். இந்த விளையாட்டும் பிளாப்பி பேர்ட் போலவே எளிதாக இருந்தாலும் சவால் விடக்கூடியதாக இருக்கிறது.

30 கட்டங்களை கொண்டதாக இருக்கும் இந்த விளையாட்டில், நிஞ்சா எனும் சிறுமியை ஒவ்வொரு கட்டமாக முன்னேற்றி கொண்டு செல்ல வேண்டும். முதல் கட்டத்தில் சிறுமி பெரிய பூனைகளால் அடிபடாமல் காத்து அழைத்துச்செல்ல வேண்டும். அடுத்த கட்டத்தில் சதுர தடைகளை அழித்து அவரை அழைத்துச்செல்ல வேண்டும்.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களுக்கு அறிமுகமாகி இருக்கிறது இந்த விளையாட்டு.

மேலும் விவரங்களுக்கு: http://www.obokaidem.com/

0–

நன்றி; தமிழ் இந்துவில் எழுதியது.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *