இணைய மோசடிகளில் இருந்து தப்பிக்கும் வழி

T5-Static-MPU-300x250இணையம் மூலம் பலவிதமான மோசடி வலை விரிக்கப்படுவதை நீங்கள் அறிந்திருக்கலாம். இத்தகைய மோசடி வலையில் சிக்கி ஏமாந்தவர்களின் கதைகளையும் நீங்கள் கேட்டிருக்கலாம். இணைய மோசடிகளில் சிக்காமல் இருப்பதற்கான அடிப்படையாக சொல்லப்படும் எச்சரிக்கை வழிமுறைகளையும் நீங்கள் அறிந்திருக்கலாம். இத்தகைய விழிப்புணர்வு அவசியம் தான்.

ஆனால் இணைய மோசடிகளை கண்டறிவதில் போதுமான ஆற்றல் இருக்கிறது என்று உங்களால் உறுதியாக சொல்ல முடியுமா? இந்த கேள்விக்கு நீங்கள் ஆம் என்று நம்பிக்கையுடன் பதில் சொன்னாலும் சரி, இல்லை எனத்தயக்கமாக உங்கள் நிலையை ஒப்புக்கொண்டாலும் சரி, இணைய மோசடிகளை இனங்காணுவதில் உங்களுக்கு எந்த அளவுக்கு ஆற்றல் இருக்கிறது என சோதித்து பார்த்துக்கொள்வது நல்லது. இதற்கான எளிய சோதனையை டேக்பை எனும் விழிப்புணர்வு இணையதளம் வழங்குகிறது.

இணைய மோசடிகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பிரிட்டன் அமைப்பால் இந்த தளம் நடத்தப்படுகிறது. இணைய மோசடியை கண்டறியக்கூடிய புத்திசாலி என நினைக்கிறீர்களா? எனும் கேள்வியோடு இந்த தளம், இணையவாசிகளை மோசடிகள் தொடர்பான சோதனையை எதிர்கொள்ள அழைக்கிறது. இந்த சோதனையில் வரிசையாக ஐந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன. அந்த கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.

பொதுவாக மோசடி நபர்கள், இமெயில் அல்லது குறுஞ்செய்தி மூலம் தான் வலை விரிக்கின்றனர். இவர்கள் பின்பற்றும் உத்திகளும் பொதுவானவையாகவே இருக்கின்றன. வங்கி அல்லது நிதி அமைப்புகளிடம் இருந்து வந்திருப்பது போன்ற எண்ணத்தை ஏற்படுத்தும் மெயில்களை அனுப்பி, பாஸ்வேர்டு அல்லது வங்கி கணக்கு உள்ளிட்ட ரகசிய விபரங்களை சமர்பிக்குமாறு கோருகின்றனர். பல நேரங்களில் இந்த விவரங்களை சமர்பிப்பதற்காக என்று தனியே ஒரு இணைப்பை கிளிக் செய்யவும் தூண்டுகின்றனர். வங்கி அல்லது நிதி அமைப்பின் அதிகாரபூர்வ இணையதளம் போலவே தோற்றம் தரக்கூடிய அந்த தளம், ரகசிய தகவல்களை திருடுவதற்காக என்றே அமைக்கப்பட்ட போலி தளம் என்பதை அறியாமல் அதில் விவரங்களை உள்ளீடு செய்தால் விஷமிகள் அதை கொண்டு பணத்தை சுருட்டி விடுவார்கள். இது தவிர, உங்களுக்கு பணம் வந்து சேர்ந்திருக்கிறது அல்லது உங்கள் கணக்கில் இருந்து பணம் களவாடப்பட்டு விட்டது என்று வங்கியில் இருந்து செய்தி வந்திருப்பது போன்ற எண்ணத்தை ஏற்படுத்தியும், தகவல்களை சேகரிக்க முயல்கின்றனர். பல நேரங்களில் அப்படியே கணக்கில் இருந்து பணத்தை மாற்றவும் வழி செய்து ஏமாற்றுகின்றனர்.

இத்தகைய மோசடி சூழல் தொடர்பான கேள்விகள் தான் வரிசையாக கேட்கப்படுகின்றன. உதாரணத்திற்கு முதல் கேள்வியை பார்க்கலாம்.

“ உங்கள் கணக்கில் மோசடி நடந்திருப்பதாக அறிகிறோம். எனவே, இது பற்றி நாங்கள் விசாரித்துக்கொண்டிருக்கும் நிலையில், எஞ்சிய தொகையை கீழே உள்ள பாதுகாப்பான கணக்கிற்கு மாற்றவும். உங்கள் கணக்கு பாதுகாப்பாக இருக்கிறது என்பதை உறுதி செய்த பிறகு முழுத்தொகையையும் உங்கள் கணக்கிற்கு மாற்றி விடுவோம்”. – இப்படி ஒரு செய்தி உங்கள் வங்கியிடம் இருந்து வந்திருப்பது போல தோன்றச்செய்தால், என்ன செய்வீர்கள், பணத்தை மாற்றுவீர்களா? என்பது தான் கேள்வி. இல்லை மாற்ற மாட்டேன் என்றோ அல்லது ஆம் மாற்றுவேன் என்றே இரண்டு விதமான பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் இருந்து தேர்வு செய்த பிறகு, உங்கள் பதிலுக்கு ஏற்ப விளக்கம் அளிக்கப்படுகிறது. உங்கள் பதில் சரி அல்லது தவறு என குறிப்பிடப்பட்டு, வங்கிகள் ஒரு போதும் இது போல பணத்தை மாற்றுமாறு கேட்பதில்லை என்பதால் இது மோசடி மெயில் என சுட்டிக்காட்டப்படுகிறது.

உங்கள் இமெயில் கணக்கில் சந்தேகப்படும்படியான செயல்கள் இருக்கின்றன, எனவே கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்து உங்கள் கணக்கை பாதுகாக்கவும் எனும் மெயில் வந்தால் என்ன செய்வீர்கள் என்பது இரண்டாவது கேள்வி. எதிர்பாராத விதமாக வரும் எந்த மெயில் உள்ள இணைப்பையும் ஒருபோதும் கிளிக் செய்ய வேண்டாம். ஏனெனில் இதுவும் மோசடி உத்தி என்று பதில் அளிக்கப்படுகிறது.

இப்படி வரிசையாக கேள்விகளுக்கு பதில் அளிப்பதன் மூலம் மோசடி நோக்கத்தோடு விரிக்கப்படும் இணைய வலையை நம்மால் அடையாளம் காண முடிகிறதா என்பதை தெரிந்து கொள்ளலாம். அது மட்டும் அல்ல, இதற்கான விளக்கத்தை படிக்கும் போது, இணைய மோசடி தொடர்பாக ஏமாற்றுக்காரர்கள் பின்பற்றும் வழக்கமான உத்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.

பிரிட்டனில் உள்ளவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள இணையதளம் என்றாலும், இணைய மோசடிக்கான உத்திகள் உலகம் முழுவதும் ஒரேவிதமாகவே இருப்பதால் எந்த நாட்டில் உள்ள இணையவாசிகளும் இந்த கேள்விகளுக்கு பதில் அளித்து தங்கள் விழிப்புணர்வு நிலை எப்படி இருக்கிறது என தெரிந்து கொள்ளலாம்.

இந்த சோதனை தவிர, இணைய மோசடிகள் தொடர்பான விரிவான ஆலோசனைகளும் இந்த தளத்தில் இடம்பெற்றுள்ளன. போன் மூலம் மோசடி, இமெயில் மூலம் மோசடி, குறுஞ்செய்தி மோசடி என இணைய மோசடிகளில் எத்தனை வகையான மோசடிகள் உள்ளன என்பதை பட்டியலிட்டு, அதை தொடர்பான தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. முக்கியமாக இவற்றில் எல்லாம் சிக்கி கொள்ளாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரகசிய பின் எண்களை யாருக்கும் தெரிவிக்க கூடாது, பாஸ்வேர்டு விவரங்களை தேவையில்லாத இடங்களில் சமர்பிக்க கூடாது போன்ற பொதுவான ஆலோசனைகளை பெரும்பாலானோர் அறிந்திருந்தாலும், மோசடி நபர்கள் இணையவாசிகள் கண்ணில் மண்ணை தூவும் வகையில் வலை விரித்து காத்திருக்கின்றனர். பல நேரங்களில் இவர்கள் யோசிக்க வாய்ப்பு கொடுக்காமல் உடனடியாக செயல்படும் நிர்பந்தத்தை உண்டாக்கி ஏமாற்றுகின்றனர். இத்தகைய வலையில் சிக்க கொள்ளாமல் இருப்பதற்கு தேவையான விழிப்புணர்வு தகவல்களை இந்த தளம் ஆலோசனைகளாக வழங்குகிறது. இணையம் மூலமான நிதி மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், இணைய பாதுகாப்பிற்காக அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய அடிப்படை தகவல்களை எளிய முறையில் இந்த தளம் வழங்குகிறது. இணைய தள முகவரி: https://takefive-stopfraud.org.uk/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.