இமெயிலில் நன்றி தெரிவிப்பது எப்படி தெரியுமா?

eஇமெயிலை நாம் எத்தனை சகஜமாகவும், சாதாரனமாகவும் எடுத்துக்கொண்டாலும் சரி, அதில் கற்றுத்தேர வேண்டிய நுட்பங்கள் கொட்டிக்கிடக்கின்றன. இமெயில் வல்லுனர்கள் இது பற்றி அலுக்காமல் எழுதிக்கொண்டிருக்கின்றனர். டைம் இதழின் மணி பிரிவில் அண்மையில் இது தொடர்பாக வெளியாகியுள்ள கட்டுரை, நன்றி தெரிவிக்கும் இமெயிலில் செய்யக்கூடாது ஒரு விஷயம் பற்றி வலியுறுத்துகிறது.

கட்டுரை சுவையாக இருப்பதோடு, சிந்திக்கவும் வைக்கிறது. நன்றி தெரிவித்து அனுப்பும் மெயிலில், ஒரு போதும், ஒரு போதும், ஏதேனும் ஒரு கோரிக்கையை கோர்த்துவிட வேண்டாம் என்பது தான் அந்த கட்டுரை வலியுறுத்தும் விஷயம். இதற்கான காரணத்தை விவரிக்கும் முன், முதலில் இமெயிலில் நன்றி தெரிவிப்பதன் அவசியத்தை கட்டுரை வலியுறுத்துகிறது.

வேலைவாய்ப்புக்கான நேர்காணலுக்கு சென்று வந்த பின், பதற்றமாக இருந்தாலும் சரி, உற்சாகமாக இருந்தாலும் சரி, சம்பந்தபட்ட நிறுவனத்திற்கு ஒரு நன்றி நவிலல் மெயிலை அனுப்பி வைக்க வேண்டும். இது வெறும் சம்பிரதாயமானது மட்டும் அல்ல. நம் நன்றி உணர்வை வெளிப்படுத்தும் செயல், இதை பெறுபவர்களும் விரும்புவதாக உளவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எனவே, வேலைவாய்ப்பு நேர்காணல் அல்லது சந்திப்புகளுக்கு பிறகு முறையாக ஒரு நன்றி மெயிலை அனுப்புவது அவசியம். ஆனால் அவ்வாறு அனுப்பும் மெயிலில், ஏதாவது ஒரு கோரிக்கையை இடம்பெற வைப்பதை தவிர்க்க வேண்டும்.

மெயில் பெறுபவரை இது சங்கடத்தில் ஆழ்த்துவதோடு, அனுப்பி வைப்பவரின் நோக்கத்தையும் சந்தேகிக்க வைக்கும். உள்ளபடியே நன்றி தெரிவிப்பது தான் நோக்கம் எனில் அதை மட்டும் செய்வதே முறை. கோரிக்கைகள் இருந்தால் பின்னர் அனுப்பி வைக்கலாம். அடுத்த மெயிலில் கூட செய்யலாம். ஆனால் நன்றி மெயிலில் நிச்சயம் கோரிக்கை வைப்பதை ஒரு போதும் செய்யக்கூடாது.

நன்றி தெரிவிப்பவர்கள், அந்த உணர்வை வெளிப்படுத்தவே இவ்வாறு செய்கின்றனர், மற்ற நோக்கங்கள் இதில் இல்லை என்பதை உணர வேண்டும்

மேலும், நன்றி தெரிவிக்கும் போது கடனுக்கு என்று வார்த்தைகளை எழுதாமல், உள்ளபடியே எந்த காரணத்திற்காக நன்றி தெரிவிக்க விரும்புகிறீர்கள் என குறிப்பிடுவது நல்லது. அதாவது பொத்தம் பொதுவாக எழுதாமல், குறிப்பிட்ட காரணத்தை சுட்டிக்காட்டுவது நல்லது.

அதே நேரத்தில் நன்றி நவிலல் வாசகங்கள் இலக்கியத்தரமாக இருக்க வேண்டும் என்று முயற்சிக்க வேண்டியதில்லை. எளிமையாக, உள்ளத்தில் உள்ளதை கோடிட்டு காட்டுவது போல் இருந்தால் போதுமானது என்கிறது கட்டுரை.

இமெயிலில் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றன அல்லவா!

=-

மூலக்கட்டுரை:

இமெயில் தொடர்பான முந்தைய பதிவுகள் சில:

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.