ரெட்டிட்டிடம் கேளுங்கள் பதில் கிடைக்கும்!

v2_large_c6547924d40fd2f3be2ca7f207aa6aa6a8776b8cரெட்டிட் (Reddit) இந்தியாவில் ஏன் பிரபலமாகவில்லை என ஒரு பட்டிமன்றமே நடத்தலாம். இல்லை, பட்டிமன்றம் தேவையில்லை, அந்த விவாதத்தையும் ரெட்டிட்டிலேயே நடத்தலாம். ஏனெனில் விவாதிப்பது தான் ரெட்டிட்டின் பலமே. ஒரு கேள்வி, பல்வேறு நோக்கிலான பதில்கள், பகிர்வுகள், பார்வைகள், இடையே கொஞ்சம் கேலி, கிண்டல் (சீண்டலும் தான்) …இவை எல்லாம் தான் ரெட்டிட்டை இணைய சமூகமாக மாற்றுகிறது.

இணையத்தின் முகப்பு பக்கம் என வர்ணித்துக்கொள்ளும் ரெட்டிட்டில் இணைப்புகளை பகிர்ந்து கொள்ளலாம். அது தொடர்பாக விவாதிக்கலாம். இந்த விவாத சரடுகளை முகப்பு பக்கத்தில் இருக்கலாம். இவைத்தவிர, ரெட்டிட் உள் பக்கங்களில் ஆயிரக்கணக்கான துணை சரடுகள் மறைந்திருக்கின்றன.

ரெட்டிட் விவாத அருமைக்கு அண்மைக்கால உதாரணம் பார்க்கலாம். பிட்காயின் பர்சுக்கான பாஸ்வேர்டை மறந்து விட்டேன் என்று ரெட்டிட் பயனாளி ஒருவர் கேட்ட கேள்வி தான் இந்த விவாதத்தின் மையம்.

Kingofvodka எனும் விநோத பயணர் பெயர் கொண்ட ரெட்டிட் பயனாளி, 40 ஆயிரம் டாலர் மதிப்பிலான பிட்காயின் பர்சை (Bitcoin Wallet) தனது லேப்டாப்பில் வைத்திருக்கிறார். அந்த பர்சை திறப்பதற்கான பாஸ்வேர்டை மறந்துவிட்டார் என்பது தான் பிரச்சனை. எல்லா பாஸ்வேர்டுகளையும், ஒரு எக்செல் கோப்பில் வைத்திருக்கிறார். ஆனால் அவற்றில் எது பிட்காயின் பாஸ்வேர்டு என்பது அவருக்கே தெரியவில்லை என்பது தான் பிரச்சனை. இதை சுருக்கமாக விவரித்துவிட்டு இதற்கு ஏதேனும் தீர்வு இருக்கிறதா என ரெட்டிட் சமூகத்திடம் கேட்டிருக்கிறார்.

இணைய நாணயமான பிட்காயினின் மதிப்பு ஏறி இறங்கி கொண்டிருக்கும் நிலையில், 40,000 டாலர் மதிப்பிலான பிட்காயின் லேப்டாப்பில் தூங்கி கொண்டிருக்கிறது. அதை எடுத்து பயன்படுத்த வழி தெரியாமல் திண்டாடுவது கொஞ்சம் சிக்கலானது தான் அல்லவா? இந்த வேதனையோடு தான், அவர் ரெட்டிட் சமூகத்திடம், வழி கேட்டிருக்கிறார்.

இந்த கேள்விக்கு பலர் பலவிதமான பதில அளித்திருந்தாலும், அந்த பயனாளி எதிர்பார்த்த பதில் கிடைக்கவில்லை. அதாவது மறந்து போன பாஸ்வேர்டை எப்படி கண்டுபிடிப்பது எனும் கேள்விக்கு யாரும் நச்சென பதில் அளித்துவிடவில்லை. அது விஷயமும் அல்ல. ஆனால், இந்த கேள்விக்கான பதில்கள் ஒரு விவாதமாக உருவானதும், அதில் வெளிப்பட்ட விஷயங்களுமே முக்கியம்.

உதாரணத்திற்கு பெரும்பாலான பதில்கள், புரூட் போர்ஸ் தாக்குதலை முயன்று பார்க்கலாம் என்பது. புரூட் போர்ஸ் தாக்குதல் என்றால் மென்பொருள் உதவியுடன், எண்ணற்ற பாஸ்வேர்டு சாத்தியங்களை முயன்று பார்த்து சரியான பாஸ்வேர்டை ஊகிப்பது. ஹேக்கர்கள் எனும் தாக்காளர்கள் பயன்படுத்தும் வழி இது. இந்த யோசனை தெரிவிக்கப்பட்டதுமே, பலரும் இது உதவாது என நிராகரித்தனர். அதற்கான காரணத்தையும் அழகாக விவரித்தனர். பிட்காயின் போன்ற என்கிரிப்ட் செய்யப்பட்ட சேவையில் இத்தகைய உத்தியை கையாண்டால் அது பலன் தர லட்சக்கணக்கான வருடங்கள் ஆகும் என தெரிவித்திருந்தனர்.

இன்னும் சிலர், வேலட் ரிகவரி சேவையாளரை நாடலாம் என கூறியிருந்தனர். இது ஒரளவுக்கு பயன் தரலாம்.

இப்படி சுவாரஸ்யமாக இந்த விவாதம் நீள்கிறது. இதனிடையே பலரும் இதே போன்ற பாஸ்வேர்டு மறந்த கதைகளையும் பகிர்ந்து கொண்டிருந்தனர். மொத்தமாக இந்த விவாத சரட்டை படிக்கும் போது பல விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். பாஸ்வேர்டை மீட்பது எத்தனை சிக்கலானது, அதற்கான வழிகள், அவற்றின் போதாமைகள் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளலாம். முக்கியமாக, பாஸ்வேர்டை மறந்துவிட்டு திண்டாடுவது பலரது அனுபவமாக இருக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

எனவே, மறந்த பாஸ்வேர்டை மீட்பது எப்படி என கவலைப்படுவதோடு, பாஸ்வேர்டை மறக்காமல் இருக்க என்ன வழி என்றும் யோசிப்பது நல்லது. அதையும் ரெட்டிட் சமூகத்திடமே கேட்கலாம்.

பி.கு: ரெட்டிட் தளத்தின் தமிழ் சேவையும் இருக்கிறது. பயன்படுத்திப்பாருங்கள்: https://www.reddit.com/r/tamil/

இது ரெட்டிட் பிட்காயின் விவாத சரடு பற்றிய செய்தி: https://www.chepicap.com/en/news/4717/reddit-user-forgets-password-for-40-000-encrypted-wallet-asks-for-advice.html

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.