வலை 3.0: ஆன்லைன் டேட்டிங்கை துவக்கியவர்

Match_US_screenshot

இணையத்தில் என்ன செய்வது எனும் கேள்விக்கான, சுவாரஸ்யமான பதிலாக 1995 ல் மேட்ச்.காம் அறிமுகமானது. டேட்டிங் வசதியை இணையத்திற்கு கொண்டு வந்த முன்னோடி இணையதளமாகவும் இது அமைகிறது. அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவில் அறிமுகமான திருமண பொருத்த இணையதளங்களுக்கும் ஒருவிதத்தில் மேட்ச்.காம் தான் துவக்கப்புள்ளி.

செல்போனில் இடப்பக்கமும், வலப்பக்கமும் ’ஸ்வைப்’ செய்வதன் மூலம் ஆன்லைன் டேட்டிங்கை டிண்டர் சேவை இன்னும் எளிதாக்கியிருக்கும் காலத்தில், மேட்ச்.காம் சேவையை திரும்பி பார்ப்பது சுவாரஸ்யமாக மட்டும் அல்ல, பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில், மேட்ச்.காமின் கதை இணையத்தின் கதையை ஒத்திருக்கிறது.

இன்று இணைய டேட்டிங் என்பது சர்வ சாதாரணமாக இருக்கிறது. ஆனால், மேட்ச்.காம் ஆன்லைன் டேட்டிங்கை அறிமுகம் செய்த போது, அது புதுமையாக இருந்தது மட்டும் அல்ல, சவாலானதாகவும் இருந்தது. மேட்ச்.காம் நிறுவனர் கேரி கிரெமன் (Kremen), அமெரிக்கர்களை இணைய டேட்டிங்கில் அடியெடுத்து வைக்க நிறைய மெனக்கெட வேண்டியிருந்தது. இதற்காக அவர் உளவியல் மற்றும் மார்க்கெட்டிங் நோக்கில் சில உத்திகளை கடைப்பிடிக்க வேண்டியிருந்தது.

புதுமையான கருத்தாக்கத்தை மீறி, மேட்ச்.காம் தளத்தின் ஆரம்ப கால போராட்டம், வியப்பாக மட்டும் அல்ல, புரியாத புதிராகவும் தோன்றலாம். ஆனால், அந்த காலகட்டத்தில் இணையத்தில் நிலவிய சூழலை நினைவில் கொள்ள வேண்டும்.

1990 களின் துவக்கத்தில் தான் இணையம் பொதுமக்களுக்கு அறிமுகமாகி, புதிய வலைதளங்களின் வாயிலாக மெல்ல வளர்ந்து கொண்டிருந்தது. இந்நிலையில், 1995 ல் அறிமுகமான இகாமர்ஸ் தளமான அமேசான் மற்றும் இணைய ஏல சேவையான இபேவும், இணையத்தின் வர்த்தக பயன்பாட்டை உணர்த்தி இணையவாசிகளை கவர்ந்தன. இன்னொரு பக்கம் ஜியோசிட்டீஸ் மற்றும் டிரைபாடு ஆகிய தளங்கள், சாமானியர்களும் இணையத்தில் தங்களுக்கு சொந்தமான பக்கங்களை அமைக்க வழி செய்திருந்தன. தகவல் தொடர்புக்கு இமெயில் இருந்தது. இணைய அரட்டையும் அறிமுகமாகியிருந்தது.

இந்த சூழலில் தான், கேரி கிரெமனுக்கு, வாழ்க்கை துணை தேடுபவர்கள் தங்கள் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற நபர்களை கண்டடைய இணையத்தை பயன்படுத்திக்கொள்ள வைக்கலாமே என்ற எண்ணம் தோன்றியது. அதாவது டேட்டிங் சேவையை இணையம் வழி சாத்தியமாக்கலாம் என்று அவருக்கு சிந்தனை பளிச்சிட்டது.

இப்போது திரும்பி பார்க்கையில், எல்லாவற்றுக்கும் பயன்படுத்தும் இணையத்தை டேட்டிங்கிற்கும் பயன்படுத்துவது என்பது வெகு இயல்பானதாக தோன்றும். ஆனால், அப்போது இது, புதுமையான யோசனையாக அமைந்தது. அதற்கேற்ப, ஒரு நாள் குளித்துக்கொண்டிருக்கும் போது இந்த யோசனை தனக்கு பளிச்சிட்டதாக கிரெமன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அது மட்டும் அல்ல, மற்ற பல இணைய சேவைகள் போலவே, இதுவும் கிரெமனின் தனிப்பட்ட தேவையினால் பிறந்த யோசனை தான்.

ஆம், கிரெமனும் அப்போது தனக்கான துணையை தேடிக்கொண்டிருந்தார். இதற்காக டேட்டிங் தகவல்களை வழங்கிய 900 எண் தொலைபேசி சேவை, நாளிதழ் விளம்பரங்கள், வீடியோ சேவைகள் ஆகியவற்றில் அவர் சந்தாதார்ராக இருந்தார். இந்த சேவைகள் எதுவுமே, குறிப்பாக 900 எண் சேவை அவருக்கு திருப்தி அளிக்கவில்லை. இந்த நிலையில் தான், ஒரு நாள் அவருக்கு தனிப்பட்ட விளம்பரங்களுக்கான இணையதளம் ஒன்று இருந்தால் எப்படி இருக்கும் எனத்தோன்றியது.

பொருத்தமான துணை தேடுபவர்கள், இந்த இணையதளம் வாயிலாக தங்களுக்கு பிடித்தமானவர்களை விளம்பரங்களின் மூலம் தேடி அடையலாம். அதிக செலவு இல்லாமல், தங்களைப்பற்றிய அதிக தகவல்களை வெளிப்படுத்திக்கொள்ளாமல், பொருத்தமானவர்களை தேடலாம்.

1993 ல் இந்த எண்ணம் தோன்றியதுமே, கையில் இருந்த கிரெடிட் கார்டை தேய்த்து, மேட்ச்.காம் இணைய முகவரியை வாங்கி வைத்தார். வளர்ந்து வந்த இணையத்தின் ஆற்றல் மீது அவருக்கு மிகுந்த நம்பிக்கை இருந்ததால், ஜாப்ஸ்.காம், ஆட்டோ.காம்,. செக்ஸ்.காம் உள்ளிட்ட இணைய முகவரிகளையும் வாங்கி குவித்தார். இவற்றை கொண்டு தொடர்ச்சியாக இணைய நிறுவனங்களை துவக்க திட்டமிட்டிருந்தார்.

இப்படி அவர் துவக்கிய முதல் சேவை தான் மேட்ச்.காம். எலக்ட்ரிக் கிளாசிபைட்ஸ் எனும் நிறுவனத்தின் கீழ், தனது நண்பர் ஒருவருடன் இணைந்து மேட்ச்.காம் சேவையை துவக்கினார். 1995 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இணையதளம் அறிமுகமானது. எடுத்த எடுப்பிலேயே இந்த தளம் இணைவாசிகளை ஈர்த்தது. டேட்டிங் துணையை தேடும் வகையில், தங்களைப்பற்றிய தகவல்களை இடம்பெற வைப்பதும், இத்தகைய பட்டியலில் இருந்து பொருத்தமானவர்களை தேடுவதும் ஈர்ப்புடையதாக இருந்தது.

ஆனால், இதில் சிக்கல் இல்லாமல் இல்லை. இணையத்தில் தனிப்பட்ட தகவல்களை அதிலும், துணை தேவை எனும் விருப்பத்தை வெளியிடுவதில் பலருக்கும் தயக்கம் இருந்தது. இந்த தகவல்களின் பாதுகாப்பு குறித்தும் கவலை இருந்தது. மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற சந்தேகமும் இருந்தது. அது மட்டும் அல்ல, வலையின் ஆரம்ப காலம் என்பதால், அமெரிக்காவில் கூட, இணையத்தை பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. அப்படி இருக்க இணைய டேட்டிங் எந்த அளவு பயனளிக்கும் என்ற தயக்கமும் இருந்தது.

இந்த தயக்கங்களை கிரெமனும் புரிந்து கொண்டார். மேலும் இதற்கு தீர்வாக அவர் பெண் உறுப்பினர்களை ஈர்ப்பதில் ஆர்வம் காட்டினார். பெண்களை நம்ப வைத்துவிட்டால், அவர்களை பின் தொடர்ந்து ஆண்கள் வந்துவிடுவார்கள் என அவர் நம்பினார். அதற்கேற்ப பெண்களுக்கான பாதுகாப்பு அம்சங்களையும் அளித்தார். அவர் எதிர்பார்த்தது போலவே, நடந்தது. அடுத்த சில மாதங்களில், மேட்ச்.காம் சேவை நல்ல வரவேற்பை பெற்றது, மேலும் பல இணைய டேட்டிங் சேவைகள் அறிமுகமாயின. ஒவ்வொன்றும் ஒரு புதுமையான வழியை பின்பற்றின.

நாளிதழ்களும், பத்திரிகைகளும் இணைய டேட்டிங் தளங்கள் பற்றி பரபரப்பாக செய்தி வெளியிட்டன. பெண்கள் தங்கள் எதிர்பார்ப்பை வெளியிட்டு, அதற்கு பொருத்தமான ஆண் துணைகளை டேட் செய்ய தேடுவது எத்தனை புதுமையானது என பார்டியூன் இதழ் குறிப்பிட்டிருந்தது. மேலும், டேட்டிங் எதிர்நோக்குபவர்கள், இமெயில் மூலம் தொடர்பு கொள்வதும், சின்ன சைஸ் புகைப்படங்களை அனுப்பிக்கொள்வதும் புதுமையாகவே இருந்தது. எல்லாம் சேர்ந்து மேட்ச்.காம் உள்ளிட்ட இணைய டேட்டிங் தளங்களை வெற்றி பெற வைத்தன.

இன்று வரை இது தொடர்கிறது.

மேட்ச்.காம் துவங்கிய சில ஆண்டுகளில் கிரெமன் இயக்குனர் குழுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விலகி விட்டார். ஆனால் அவர் வாங்கி வைத்திருந்த செக்ஸ்.காம் உள்ளிட்ட இணைய பெயர்கள் அவருக்கு அள்ளிக்கொடுத்தன. அதிலும் குறிப்பாக செக்ஸ்.காம் இணைய முகவரி உரிமையை நிலை நாட்ட அவர் நடத்திய போராட்டம் இணையத்தின் பேசு பொருளானது.

தமிழ் இந்துவில் எழுதும் வலை 3.0 தொடரில் இடம் பெற்ற பகுதியின் சுருக்கப்படாத வடிவம்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.