வர்த்தக பேரரசாக கனவு கண்ட இணையதளம்!

bபிஸ்னஸ்.காம் இணையதளத்தால் நீங்கள் கவரப்படுவதற்கான வாய்ப்பு குறைவு. அந்த தளத்தில் நுழைந்தால், நவீன கால வடிவமைப்பை மீறி, அதன் தோற்றமும், உள்ளடக்க அமைப்பும் அலுப்பூட்டலாம். வர்த்தக நிறுவனங்களை இலக்காக கொண்ட எண்ணற்ற இணையதளங்களில் இன்னொரு இணையதளம் இது என்ற எண்ண, ஏற்படுவதை தவிர்க்க முடியாது.

ஆனால், பிஸ்னஸ்.காம் இணையத்தின் இன்னொரு இணையதளம் அல்ல. அது, இணைய வரலாற்றின் மைல்கற்களில் ஒன்று. அதன் கடந்த காலம் இணைய வரலாற்றின் பொற்கால பக்கங்களை கொண்டதாக இருக்கிறது. அது மட்டும் அல்ல, இணையத்தில் ’போர்டல்’கள் எனப்படும் பேரரசு வகை இணையதளங்கள் கோலோச்சிய காலத்தின் சாட்சியாகவும் அது இருக்கிறது. அந்த தளங்களின் வீழ்ச்சியின் அடையாளமாகவும் இருக்கிறது.

பிஸ்னஸ்.காம் தளம் 1999 ம் ஆண்டின் இறுதிப்பகுதியில் துவங்கியது. பிஸ்னஸ்.காம், துவக்கத்தை விட, அது துவக்கப்பட்டவிதம் தான் செய்தி. பிஸ்னஸ்.காம் எனும் டொமைன் பெயர், 7.5 மில்லியன் டாலருக்கு விலைக்கு வாங்கப்பட்டு, அந்த பெயரையே முக்கிய மூலதனமாக கொண்டு, இணையதளம் அமைக்கப்பட்டது. நிறுவனத்தை துவக்குவதற்கான மூலதனத்தில் பெரும்பகுதி, டொமைன் பெயரை வாங்குவதற்கு என்றே செலவிடப்பட்டது.

வரத்தக உலகில், பெயர் என்பது விற்பனை அடையாளமாக கருதப்பட்டு, வெற்றிகரமான பெயர்களுக்கு தனி மதிப்பு இருந்தாலும் கூட, பிஸ்னஸ்.காம் எனும் பெயருக்கு 7.5 மில்லியன் டாலர் வழங்கப்பட்டது என்பது பெரிய செய்தி தான். ஜேகே வைன்பாவும் மற்றும் ஸ்கை டேட்டன் (Jake WinebaumSky Dayton ) உண்டாக்கிய, புதிய இணைய நிறுவனங்களை உருவாக்குவதற்கான அடைகாக்கும் நிறுவனமாக துவங்கப்பட்ட இகம்பெனிஸ் எனும் நிறுவனம் சார்பாக இந்த டொமைன் வாங்கப்பட்டது.

பிஸ்னஸ்.காம், பெயருக்கு ஏன் இத்தனை பெரிய தொகை அளிக்கப்பட்டது, என்பதை புரிந்து கொள்ள, அந்த காலகட்டத்தில் இணையம் தொடர்பான சில முக்கிய அம்சங்களை தெரிந்து கொள்ள வேண்டும். முதல் விஷயம், அந்த காலத்தில், டொமைன் பெயர்கள் இணைய நிலமாக அதாவது, இணைய ரியல் எஸ்டேட்டாக கருதப்பட்டன. ஒரு நல்ல டொமைன் பெயர் கைவசம் இருந்தால், அது தங்கமாக கருதப்பட்டது. தொலைநோக்குடன் அல்லது தற்செயலாக இத்தகைய டொமைன் பெயர்களை பதிவு செய்திருந்தவர்கள் பின்னர் தேவையான நேரத்தில் அந்த பெயர்களை விற்று கோடிகளை சம்பாதித்திருக்கின்றனர்.

இப்படி எதிர்கால கணக்கின் அடிப்படையில் முன்கூட்டியே டொமைன் பெயர்களை பதிவு செய்து வைக்கும் பழக்கமும் அப்போது இருந்தது. இதற்கு சைபர்ஸ்க்வேட்டிங் என பெயர். இப்படி சரியான நேரத்தில் டொமைன் பெயர் வாங்கி வைத்து அதன் மூலம் தொழிலதிபர்கள் ஆனவர்களும் உண்டு. இணைய டேட்டிங் முன்னோடி சேவையான மேட்ச்.காம் தளத்தை துவக்கியவர், வாங்கி வைத்திருந்த செக்ஸ்.காம் தளத்திற்கான உரிமை போராட்டம் தனியே விவரிக்கப்பட வேண்டிய கிளைக்கதை.

இந்த பின்னணியில் தான் பிஸ்னஸ்.காம் எனும் ஒற்றை பெயருக்கு பெரும் தொகை கொடுக்கப்பட்டதை புரிந்து கொள்ளலாம். எல்லாம் சரி, இந்த அளவு பெருந்தொகை கொடுத்து டொமைன் பெயரை வாங்கி வைத்துக்கொள்வதால் என்ன பயன் என்று கேட்கலாம். புதிய வர்த்தகம் துவங்கும் போது அதற்கு ஏற்ற இடம் வாங்குவது போல தான் இதுவும். நகரின் முக்கிய பகுதியில், வாகான இடம் கிடைத்தால், அதுவே விளம்பரம் போல் அமைந்து விற்பனைக்கி வழிவகுக்கும் என்று கருதப்படுகிறது அல்லவா? அதே போல தான் இணைய உலகிலும், நல்ல டொமைன் பெயர் கையில் இருந்தால் பாதி வெற்றி கிடைத்தது போல என கருதப்பட்டது. இந்த அடிப்படையில் தான், செக்ஸ்.காம், பிஸ்னஸ்.காம் போன்ற பொதுவான பெயர்கள் மதிப்பு மிக்கதாக கருதப்பட்டன.

இணைய போக்குவரத்திற்கு இவை வழிவகுக்கும் எனும் எதிர்பார்ப்பே இந்த கருத்திற்கான அடிப்படை. பரவலாக நன்கறியப்பட்ட டொமைன் பெயர் எனில், இணையவாசிகளை அதை தேடி வருவார்கள் என்பது எழுதப்படாத விதியாக இருந்தது. குறிப்பிட்ட டொமைன் பெயரால் ஈர்க்கப்பட்டு வருபவர்கள் தவிர, தேடியந்திரங்களில் தேடப்படும் போது, இந்த பெயர்களில் தட்டுப்பட்டும் இணையதளத்திற்கு வந்து சேருவார்கள் என்று கருதப்பட்டது. எனில், வர்த்தகத்திற்கான இணைய பொதுப்பெயரான பிஸ்னஸ்.காம் என்பது இத்துறையில் ஆர்வம் கொண்ட எவரையும் கவர்ந்திழுக்க கூடியது தானே. அதனால் தான், பிஸ்னஸ்.காம் பெயருக்காக கொட்டி கொடுக்கப்பட்டது. அந்த காலத்தில், இணையத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட டொமைன் பெயர்கள் பட்டியலில் இது 3 வது இடம் பிடித்தது.

நிற்க, பிஸ்னஸ்.காம் பெயரை வாங்கிய இகம்பெனிஸ் நிறுவனம் அதை வைத்து என்ன செய்தது என்பது இணைய வரலாற்றில் இன்னும் முக்கியமானது. பிஸ்னஸ்.காம் பெயரில் அது மாபெரும் வர்த்தக வலைவாசலை துவக்கியது. போர்டல் எனப்படும் வலைவாசல் தான் அந்த காலகட்டத்தில் இணையத்தில் பிரதானமாக இருந்தது. அப்போது முன்னணியில் இருந்த இணைய நிறுவனமான யாஹு இத்தகைய வலைவாசல் தான்.

ஒரே இடத்தில் எல்லா விதமான தகவல்களையும் அணுக வழி செய்யும், அதற்காக என பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் தான் வலைவாசல் என குறிப்பிடப்பட்டன. பொதுவாக இணையதளம் என்றால் குறிப்பிட்ட நோக்கத்திலான தகவல்களை வழங்குவதாக அமையும். அதற்கு மாறாக, செய்திகள் உள்ளிட்ட எல்லா வகை தகவல்களையும் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்படும் தளங்கள், வலைவாசல் என கருதப்பட்டன. இணையத்தில் தகவல்களுக்காக அங்கும் இங்கும் அல்லாடும் தேவையில்லாமல் ஒரே இடத்தில் எல்லாவற்றையும் அணுக வழி செய்வதால் இந்த வகை தளங்கள், சூப்பர் இணையதளங்கள் என்றும், இணையத்தின் நுழைவு வாயில் என்றும் கூட அழைக்கப்பட்டன.

இணையத்தின் ஆரம்ப காலத்தில், யாஹுவே இணையத்தின் நுழைவு வாயிலாக கொண்டாடப்பட்டது. ஒரு கட்டத்தில், இணையத்தில் உள்ள முன்னணி நிறுவனங்கள் பல, வலைவாசல்களாக மாற போட்டி போட்டன. டிஸ்னி, மைக்ரோசாப்ட் போன்ற பெரிய நிறுவனங்களும் வலைவாசல் பரப்பில் கடை விரித்தன. ( டிஸ்னி, இன்போசீக் நிறுவனத்தை விலைக்கு வாங்கி, கோ வலைவாசலை அமைத்தது. மைக்ரோசாப்ட், எம்.எஸ்.என் வலைவாசலை நடத்தி வந்தது,). இதுத்தவிர எக்ஸைட், லைகோஸ் போன்ற இணைய தேடியந்திரங்களும் வலைவாசலாக தங்களை மேம்படுத்திக்கொண்டன.

இணையத்தில் வலைவாசல் அலை வீசிக்கொண்டிருந்த சூழலில், இகம்பெனிஸ் நிறுவனம், வர்த்தக வலைவாசலாக கோலோச்சும் திட்டத்துடன் பிஸ்னஸ்.காம் தளத்தை வலைவாசலாக துவக்கியது. அதன் பழைய முகப்பு பக்கத்தை திரும்பி போய் பார்த்தால், அது செயல்பட்டு வந்த விதத்தை புரிந்து கொள்ள முடிகிறது. யஹுவை ஒத்த தோற்றம் கொண்ட முகப்பு பக்கத்தில், பிஸ்னஸ்.காம், வர்த்தக தேடியந்திரம் எனும் அறிமுக வாசகத்திற்கு கீழ், வர்த்தக இணைப்புகள் பல்வேறு தலைப்புகளில் நீல நிற எழுத்துகளில் வகைப்படுத்தப்பட்டிருந்தன. நிர்வாகம், ஆட்டோ, விவசாயம், சட்டம், உற்பத்தி, சிறு வணிகம் உள்ளிட்ட தலைப்புகளில் கிளிக் செய்தால் துணைத்தலைப்புகளையும் அவற்றுக்கான இணைப்புகளையும் காணலாம்.

வர்த்தக துறைக்கான இணைய கையேடு போல இது அமைந்திருந்தது. முன்னணி வணிக நாளிதழ்கள் கூட்டுடன் வர்த்தக செய்திகளும் பிரத்யேகமாக வழங்கப்பட்டன. நிறுவனம் சார்ந்த தகவல்களையும் தேடலாம். பயனாளிகள் அதிகம் நாடும் தகவல்கள், தனியே அடையாளம் காட்டப்பட்டிருந்தன.

வர்த்தக தகவல்களை தேட வேண்டும் எனில், பிஸ்னஸ்.காம் பக்கம் வந்தால் போதும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த வலைவாசல் வடிவமைக்கப்பட்டிருந்தது. வர்த்தக நிறுவனங்களை இணைக்கும் பாலமாகவும் இது அமைந்திருந்தது. முன்னணி நாளிதழ்களும் இதனுடன் கைகோர்த்திருந்தன. நேரடி விளம்பரம், கிளிக் விளம்பரம் என வருவாய்க்கான ஆதாரங்களும் அதிகம் இருந்தன.

பிஸ்னஸ்.காம் அறிமுகமான காலத்தில் வரவேற்பும் அமோகமாகவே இருந்தது. வளர்ச்சியும் அதற்கேற்ப அமைந்திருந்தது. ஆனால் சோதனையாக, டாட்காப் குமிழ் வெடிப்பால் ஏற்பட்ட பாதிப்பு இந்த தளத்தையும் பாதிதத்து. அதோடு, இணைய உலகில், வலைவாசல் எனும் கருத்தாக்கமும் செல்வாக்கு இழந்து போனது. விளைவு பிஸ்னஸ்.காம் தட்டுத்தடுமாறி தாக்குப்பிடித்து பின்னர் வேறு நிறுவனத்திற்கு கைமாறியது. இன்று வலைவாசலுக்கான சுவடு தெரியாமல், வர்த்தக உலகிற்கான வழிகாட்டித்தகவல்களுடன் எந்த ஈர்ப்பும் இல்லாத தளமாக காட்சி அளிக்கிறது. ஆனாலும் என்ன, அதன் பின்னே இருக்கும் வரலாறு மறக்க முடியாதது.

இணைய பிளேஷ்பேக் பக்கம்: https://web.archive.org/web/19990220155417/http://www.business.com/

வலை 3.0 தொடரின் அங்கம் …

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.