இணையத்தின் டிஜிட்டல் காப்பாளர்!

Screenshot_2019-09-27 வலை 3 0 இணையத்தின் காப்பான்1996 ல் இணையத்தில் அந்த அற்புதம் நிகழ்ந்தது. அந்த அற்புதத்தை நிகழ்த்தியவர் புருஸ்டர் கால். அதற்காக இணையமும், இந்த உலகமும் காலுக்கு என்றென்றும் கடன்பட்டிருக்கிறது.

ப்ருஸ்டர் கால் அப்படி என்ன செய்துவிட்டார்? இணைய வரலாற்றை காப்பாற்றி வருகிறார் என இதற்கு ஒற்றை வரியில் பதில் சொல்லிவிடலாம். ஆம், கால் இணைய யுகத்தின் டிஜிட்டல் காப்பாளராக இருந்து வருகிறார்.

இணையத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் பிரதியெடுத்து பாதுகாத்து வைக்கும் இண்டெர்நெட் ஆர்கேவ் எனும் லாப நோக்கிலாத அமைப்பை அவர் நடத்தி வருகிறார். இதன் அங்கமான வேபேக்மிஷின், இணையத்தின் கடந்த கால பக்கங்களை திரும்பி பார்க்க வழி செய்கிறது. ஒவ்வொரு இணைய பக்கத்தையும் சேமித்து அதை பாதுகாக்கும் டிஜிட்டல் நூலகத்தை நடத்தி வருவதோடு, புத்தகங்களின் டிஜிட்டல் பிரதியை பாதுகாப்பும் ஓபன்லைப்ரரி எனும் திறந்தவெளி இணைய நூலகத்தையும் நடத்தி வருகிறார். இவற்றோடு, இசைத்தட்டுகளின் டிஜிட்டல் பதிவையும் வருங்கால தலைமுறைக்கும், வரலாற்று ஆசிரியர்களுக்கும் சேமித்து வருகிறார்.

இணைய காப்பகமாக விளங்கும் இண்டெர்நெட் ஆர்கேவ் தளத்திற்கு சென்று பார்த்தால், கால் எத்தனை பெரிய விஷயத்தை செய்து கொண்டிருக்கிறார் என புரிந்து கொள்ளலாம்.

இணையத்தில் கோடிக்கணக்கான இணையதளங்கள் இருக்கின்றன. தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே உருவாக்கப்பட்ட தளங்களில் பல காணாமல் போய்விட்டன. ஒரு காலத்தில் இணையத்தில் கோலோச்சிய தளங்கள் கூட, கால வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு சுவடுகள் அற்று கிடக்கின்றன.

இந்த தளங்களின் அந்த கால தோற்றத்தை பார்க்க விரும்பினால், இணைய காப்பகமான இண்டெர்நெட் ஆர்கேவ் தான் ஒரே வழி. அதே போல, இணையத்தில் உலாவும் போது, தேடிச்செல்லும் ஒரு இணையதளத்தில், இந்த பக்கத்தை காணவில்லை என்பது உள்ளிட்ட பிழை செய்திகளை பார்த்து ஏமாற்றம் அடையும் அனுபவம் பெரும்பாலானோருக்கு உண்டு அல்லவா?

இது போன்ற நேரங்களிலும், காணாமல் போன அந்த இணைய பக்கத்தின் டிஜிட்டல் பிரதியை பார்க்க வேண்டும் என்றால், இண்டெர்நெட் ஆர்கேவ் தான் புகலிடம்.

இதற்கு காரணம், கால் உருவாக்கிய அமைப்பு, சீரான இடைவெளியில் இணையத்தை பிரதியெடுத்து பாதுகாக்கும் அரும்பணியை செய்து வருகிறது.

1996 ம் ஆண்டு முதல் கால் இந்த பணியை செய்து வருகிறார். டிஜிட்டல் தரவுகளை பாதுகாப்பது என்பது பெரும் சவாலான விஷயமாக இருக்கிறது. இன்று உருவாக்கும் மென்பொருள்களும், டிஜிட்டல் தகவல்கள் நாளை எல்லோரும் அணுகும் வடிவத்தில் கிடைக்குமா? எனும் கேள்வி இருக்கிறது. இப்போது தான், டிஜிட்டல் வடிவில் தகவகளையும், தளங்களையும் பாதுகாத்து வைப்பதில் விழிப்புணர்வு ஏற்பட்டு, இதற்கான முயற்சியில் தனிநபர்களும், அமைப்புகளும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த முயற்சியில் முன்னோடியாக இருப்பவர் புருஸ்டர் கால். வலையின் அறிமுகத்திற்கு பிறகு இணையம் வேகமாக வளரத்துவங்கிய 1990 களின் துவக்கத்தில், பலரும் புதிய தளங்களையும், புதிய சேவைகளையும் உருவாக்குவதில் தான் ஆர்வம் காட்டினர். ஆனால், இந்த தளங்களும் சேவைகளும் பாதுக்காக்கப்படுகிறதா? என்பதில் யாரும் கவனம் செலுத்தவில்லை. இது தேவை என்று கூட பெரும்பாலனோர் நினைக்கவில்லை.

புதிய இணையதளங்கள் உருவாக்கப்பட்டுக்கொண்டிருந்தன. 1994 ல் நூற்றுக்கணக்கான இருந்த இணையதளங்களின் எண்ணிக்கை 1995 ல் ஆயிரக்கணக்காக மாறியது. அதன் பிறகு பல லட்சங்களாகவும், கோடிகளாகவும் மாறியது. புதிய இணையதளங்கள் உருவாக்கப்பட்டுக்கொண்டிருந்த நிலையில், பழைய தளங்கள் கைவிடப்பட்டன, மறக்கப்பட்டன, மூடப்பட்டன.

இந்த தளங்களின் சுவடுகள் நமக்கு கிடைக்காமலே போயிருக்கும். ஆனால் அப்படி நிகழாமல் காப்பாற்றியது தான் காலின் சாதனை. இதை அவர் நிகழ்த்திகாட்டிய விதம் சுவாரஸ்யமானது.

அமெரிக்காவின் எம்.ஐ.டி பல்கலைக்கழக பட்டதாரியான கால், திங்கிங் மிஷின்ஸ் எனும் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நிறுவனம் இது. கல்லூரி காலத்தில் அவர் ஏ.ஐ துறை முன்னோடிகளில் ஒருவரான மார்வின் மின்ஸ்கியிடம் பயின்றிருக்கிறார். இந்த இரண்டு அனுபவங்களும் பின்னாளில் அவர் தேர்வு செய்த தொழில் வாழ்க்கை பாதையும் பெரும் தாக்கம் செலுத்தின.

1990 களின் துவக்கத்தில் கால், தனது நண்பர் புரூஸ் கில்லியட்டுடன் இணைந்து, வயஸ் ( வைடு ஏரியா இன்பர்மேஷன் சர்வர்) எனும் தகவல் கண்டெடுத்தல் சேவையை உருவாக்கினார். இணையத்தில் தகவல் கோப்புகளை தேடுவதற்கான இந்த சேவை, பின்னாளில் அறிமுகமான தேடியந்திரங்களுக்கான முன்னோடிகளில் ஒன்று எனலாம். இந்த சேவையை 1995 ல் ஏ.ஓ.எல் நிறுவனத்திற்கு விற்று லட்சாதிபதியானார்.

அடுத்த ஆண்டு இருவரும் சேர்ந்து அலெக்சா இண்டெர்நெட் நிறுவனத்தை உருவாக்கினர். அப்போது வேகமாக வளர்ந்து கொண்டிருந்த இணையததையும், அதில் அங்கம் வகிக்கும் இணையதளங்களின் செல்வாக்கையும் மதிப்பிடும் சேவையாக அலெக்சா அறிமுகமானது. அதாவது இணையதளங்களை அவற்றின் பயன்பாடு அடிப்படையில், அலெக்சா பட்டியலிட்டது.

அந்த காலத்தில் அலெக்சா என்பது இணையத்தின் அளவுகோளாகவே இருந்தது.

கால், அலெக்சாவை மட்டும் உருவாக்கவில்லை. அத்துடன் சேர்த்து இன்நெர்நெட் ஆர்க்வே எனும் இரட்டை நிறுவனத்தையும் உருவாக்கியிருந்தார். முன்னது, லாப நோக்கிலானது. இரண்டாவது நிறுவனம் லாப நோக்கில்லாதது. இரண்டாவது நிறுவனம் அவரது லட்சியத்திட்டம். அதை நடத்துவதற்கான நிதி ஆதாரமாக தான் முதல் நிறுவனத்தை துவக்கினார்.

அந்த காலகட்டத்தில் கால், எல்லாவற்றுக்குமான நூலகத்தை உருவாக்குவது மற்றும் தனிநபர்கள் அந்தரங்கத்தை பாதுகாக்கும் தொலைபேசி அமைப்பை உருவாக்குவது ஆகிய இலக்குகளை கொண்டிருந்தார். இவற்றில், தொலைபேசி அமைப்புக்கான அடிப்படையை உருவாக்க முடிந்தாலும் வர்த்தக நோக்கில் அதை வெற்றிபெற முடியவில்லை.

இந்த சூழலில் தான், எல்லாவற்றுக்குமான நூலக கனவுடன், அலெக்சாவை துவக்கினார். அலெக்சா என்ன செய்தது என்றால், இணையதளங்களுக்கான போக்குவரத்து அடிப்படையில் அவற்றை பட்டியலிட்டது.

இணையத்தில் உலாவும் எல்லோருக்கும் புதிய இணையதளங்களையும், பயனுள்ள இணையதளங்களையும் அறிமுகம் செய்து கொள்வதில் ஆர்வம் பொங்கி கொண்டிருந்த காலம் அது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். யாஹுவுன் இணைய கையேடு சேவையும், கூல் சைட் ஆப் தி டே போன்ற சேவைகளும் இதை ஓரளவு நிறைவேற்றன என்றாலும் இணையம் வளர்ந்த வேகத்தில், இணையதளங்களை கண்டறிய இன்னும் சிறந்த சேவை தேவைப்பட்டது.

இணையதளங்களை பட்டியலிடுவதன் மூலம் அலெக்சா இதை செய்தது. அலெக்சா அதன் பயனாளிகளுக்கு ஒரு டூல் பாரை வழங்கியது. இந்த டூல்பாரை தரவிறக்கம் செய்து நிறுவிக்கொண்டால், அது பயனாளிகள் பிரவுசர் பின்னே ஒளிந்து கொண்டு, இரண்டு விஷயங்கள் செய்யும். ஒன்று, பயனாளிகள் எந்த இணையதளத்தை பார்வையிட்டுக்கொண்டிருக்கிறார், அதிலிருந்து எந்த தளங்களுக்கு எல்லாம் செல்கிறார் எனும் தகவல்களை சேகரித்துக்கொள்ளும். இந்த தகவல்கள் மூலம், இணைய பயனாளிகள் உலா வரும் தளங்களுக்கான வரைபடத்தை உருவாக்கி கொள்ளும்.

இந்த தகவல் மூலம், இணையவாசிகள் மத்தியில் எந்த தளங்கள் எல்லாம் பிரபலமாக இருக்கின்றன என அறிய முடிந்தது. இதுவே அலெக்சா முன்னணி தளங்கள் பட்டியலானது. அதே நேரத்தில், இவ்வாறு சேகரிக்கும் தகவல்களை கொண்டு, பிரபலமாக உள்ள இணையதளம் எது, பயனாளி பார்த்துக்கொண்டிருக்கும் இணையதளத்தின் ஜாதகம் என்ன? அதனுடன் தொடர்புடைய இணையதளங்கள் என்ன? போன்ற தகவல்களையும் அலெக்சா வழங்கியது.

ஆக, ஒரு பக்கம் பயனாளிகளிடம் இருந்து தகவல்களை திரட்டியது என்றால், இன்னொரு பக்கம் அவர்களுக்கு பயனளிக்க கூடிய தகவல்களை அளித்து அவர்களுக்கு இணையத்தில் வழிகாட்டியது. அந்த வகையில் அது ஒரு உலாவி இயந்திரமாக ( சர்ஃப் இஞ்சின்) செயல்பட்டது. இணையத்தில் எந்த வகையான தளங்கள் பிரபலமாக உள்ளன, தொடர்புடைய தளங்கள் என்ன என்றெல்லாம் அலெக்சா வழிகாட்டியது. அந்த காலகட்டத்தில் பிரபலமாக இருந்த நெட்ஸ்கேப் பிரவுசர், அலெக்சாவின் இந்த சேவையை பயன்படுத்தி, தொடர்புடைய இணையதள பரிந்துரையை வழங்கியது.

ஒருவிதத்தில், அலெக்சா ஒரு தேடியந்திரம் போலவும் செயல்பட்டது. இணையத்தை துழாவுவதற்கான அதன் மென்பொருள்கள் இணையத்தில் உலா வந்து அதை பிரதியெடுத்துக்கொண்டிருந்தது. இந்த இணைய பிரதிகள் தான், டிஜிட்டல் காப்பகமான இண்டெர்நெட் ஆர்கேவிற்கு அடித்தளமானது.

1999 ம் ஆண்டு அலெக்சா சேவையை அமேசான் நிறுவனம் விலைக்கு வாங்கியது. இண்டெர்நெட் ஆர்கேவ் திட்டத்தை கால் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இந்த சாதனைக்காக அவர் இணைய புகழரங்கிலும் இடம், பெற்றுள்ளார்.

2001 ம் ஆண்டு முதல் வேபேக் மெஷின் எனும் வசதி மூலம், இணைய காப்பகத்தின் பக்கங்களை பொதுமக்களும் அணுக வழி செய்துள்ளார். புத்தகங்களை டிஜிட்டல்மயமாக்கும் ஓபன் லைப்ரடி உள்ளிட்ட துணை திட்டங்களையும் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார்.

புருஸ்ட கால், இணைய யுகத்தில் டிஜிட்டல் தகவல்களை பாதுகாப்பதன் அவசியத்தை உணர்த்தி, அதன் முன்னோடியாகவும் செயல்பட்டு வருகிறார்.

புர்ஸ்டர் கால் துவக்கிய அலெக்சா சேவை செய்ததை தான் இணையத்தில் இன்று கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் செய்து வருகின்றன.அதாவது இணையவாசிகளின் இணையசுவடுகளை பின் தொடர்ந்து தகவல்களை சேகரிப்பது. இது தனியுரிமை மீறல் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. ஆனால், கால் இதை நன்கறிந்திருந்தார். இணையவாசிகள் அளிக்கும் தகவல்கள் தனிப்பட்டவை என்பதை அவர் அறிந்திருந்தார். எனவே தான், அவர்கள் யார் என்பதை அவர் அடையாளம் காண்பதில் ஆர்வம் காட்டியதில்லை. மேலும், சேகிரித்த தனிப்பட்ட தகவல்களில் சிலவற்றை அவர் நீக்கவும் செய்தார். எந்த வகையான தகவல்கள் சேகரிக்கபப்டுகின்றன என்பதை இணையவாசிகள் அறியாத நிலையில் அவற்றில், சிக்கலான தகவல்களை நீக்கிவிடுவது தான் முறை என அவர் கூறியுள்ளார். ஆக, தரவுகள் பாதுகாப்பில் மட்டும் அல்ல, தனியிரிமை பாதுகாப்பிலும் அவர் முன்னோடியாக இருக்கிறார்.

  • அமேசான் நிறுவனம் அலெக்சா சேவையை இன்னமும் நடத்தி வருகிறது,. அதோடு, அதன் டிஜிட்டல் உதவியாளர் சேவையையும் அலெக்சா எனும் பெயரில் வழங்கி வருகிறது. ஒரே பெயரில் இரண்டு சேவைகள் விசித்திரம் என்றாலும், கால், தனது சேவைக்கு அலெக்சா என பெயர் சூட்டக்காரணம், மனித அறிவின் பொக்கிஷமாக விளங்கிய எகிப்தின் அலெக்சாண்ட்ரியா நூலகத்தின் நினைவை போற்றுவதற்காக தான்.

https://books.google.co.in/books?id=EFlfCgAAQBAJ&pg=PT1305&lpg=PT1305&dq=alexa+ranking%2Bkahle&source=bl&ots=Gda1_h1wRE&sig=ACfU3U0drvBMF6A079lnanrGE-iZ8JfzuQ&hl=en&sa=X&ved=2ahUKEwjWyLq9g_PjAhW-4HMBHcFIDQoQ6AEwGnoECAoQAQ#v=onepage&q=alexa%20ranking%2Bkahle&f=false

https://books.google.co.in/books?id=ktm885vGIXEC&pg=PA275&lpg=PA275&dq=Brewster+Kahle%2Balexa&source=bl&ots=vVzMPeVCce&sig=ACfU3U1uX7eEiGBpBsaD1U6G9Z7rfAydjg&hl=en&sa=X&ved=2ahUKEwjdo8G7hPPjAhVEVXwKHSQwAmg4ChDoATAHegQICRAB#v=onepage&q=Brewster%20Kahle%2Balexa&f=false

https://www.19.bbk.ac.uk/articles/10.16995/ntn.760/#A1

http://webreference.com/outlook/column28/index-2.html

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *