வலை 3.0: இணையத்தின் ’எதிர்’ அகராதி ’அர்பன் டிக்ஷனரி’

uஇணையத்தையும், அது தரும் வாய்ப்புகளையும் போற்றுபவர் என்றால் அர்பன் டிக்‌ஷனரி (Urban Dictionary ) இணையதளம் உங்களை உற்சாகத்தில் ஆழ்த்தும். அகராதி என்பது பாரம்பரிய பாணியில் தான் இருக்க வேண்டுமா என்ன, அது கொஞ்சம் கேலியும், கிண்டலும் கலந்ததாக, இருந்தால் என்ன? வார்த்தைகளுக்கு அது தரும் பொருள் சரியாக இருக்கிறதோ, இல்லையோ, சுவாரஸ்யமாக இருப்பது முக்கியம் என நினைக்கும் போக்கு இருந்தால், அதைவிட முக்கியமாக, அகராதியின் ஜனநாயக தன்மை பிடித்திருந்தால், இந்த அகராதி, அட இது நமக்கான அகராதி என நினைக்க வைக்கும்.

அதே நேரத்தில், அகராதிக்கான வரையரை மீறப்படக்கூடாது என நினைப்பவர் எனில், இந்த தளம் உங்களை திகைப்பில் ஆழ்த்தும். இது அகராதியே அல்ல என கோபம் கொள்ள வைக்கும்.

ஆனால், ஒன்று முதல் முறையாக அர்பன் டிக்‌ஷனரியை அறிமுகம் செய்து கொள்ளும் போது, இது எந்தவகை அகராதி என புரியாமல், இதில் உள்ள விளக்கத்தை நம்பலாமா, வேண்டாமா எனும் குழப்பம் ஏற்படலாம். அதோடு, இந்த அகராதியின் தன்மை தெரியாமல், இதில் உள்ள அர்தத்தை அப்படியே பயன்படுத்த முயற்சித்தால் சிக்கல் உண்டாகலாம்.

மாறாக, இந்த அகராதியின் நோக்கம் மற்றும் தன்மையை தெரிந்து கொண்டால், இது தரும் அனுபவம் படு சுவாரஸ்யமாக இருக்கும். இணைய தலைமுறையை சேர்ந்த எண்ணற்ற பதின் பருவத்தினரும், இளைஞர்களும் இந்த சுவார்ஸ்ய அனுபவத்தை விரும்பியே அர்பன் டிக்‌ஷனரி அபிமானிகளாக இருக்கின்றனர். இணையத்தில் அவர்களுக்கான துணை கலாச்சாரம் போல அர்பன் டிக்‌ஷனரி அமைந்துள்ளது.

அர்பன் டிக்‌ஷனிரியை அறியாதவர்களுக்கு நிச்சயம் இவை எல்லாம் வியப்பாக இருக்கும். 20 ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்பட்டு வருவதை மீறி, அர்பன் டிக்‌ஷனரி தளம் இன்னமும் எல்லோரும் அறிந்த இணையதளங்கள் பட்டியலில் வரவில்லை. ஆனால், அதற்காக அது அதிகம் அறியப்படாத தளமும் இல்லை. அலெக்சா பட்டியல் படி முதல் ஆயிரம் இடத்திற்குள் உள்ள தளம் அது.

ஆனால், அர்பன் டிக்‌ஷனரி தளத்தை பயன்படுத்த அதன் ஆதார தன்மையை புரிந்து கொள்ள வேண்டும். பாரம்பரிய அகராதிகளுக்கு எதிரானது என்பதே அந்த ஆதார தன்மையாக அமைகிறது.

ஆம், ஆரான் பெக்கம் (Aaron Peckham ) எனும் அமெரிக்க கல்லூரி மாணவரால் 1999 ம் ஆண்டு விளையாட்டாக துவக்கப்பட்ட அர்பன் டிக்‌ஷனரி தளம், ஒரு கட்டற்ற அகராதி. அதற்கு ஆசிரியர் குழு எல்லாம் கிடையாது. அதில் யார் வேண்டுமானாலும் வார்த்தைகளை சமர்பித்து அதற்கு பொருள் கூறலாம். அந்த வார்த்தைகளுக்கு சக பயனாளிகள் வாக்களிக்கலாம். அந்த வகையில் இது விக்கிபீடியா போன்றது. ஆனால், விக்கிபீடியா அறிமுகமாவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே அர்பன் டிக்‌ஷனரி உதயமாகிவிட்டது.

விக்கிபீடியாவை விட, அதன் துணை தளமான விக்கிஷனரியுடன் அர்பன் டிக்‌ஷனரியை ஒப்பிடுவது இன்னும் பொருத்தமாக இருக்கும். விக்கிஷனரி, இணையவாசிகள் இணைந்து உருவாக்கும் இணைய அகராதி. அதில்,  உறுப்பினர்கள் வார்த்தைகளை சமர்பித்து பொருள் கூறலாம். அதை சக உறுப்பினர்கள் மதிப்பிடலாம், திருத்தலாம்.

அர்பன் டிக்‌ஷனரி, விக்கி அகராதியான விக்கிஷனரிக்கு முன்னதாக துவங்கப்பட்டது என்பது மட்டும் அல்ல, அதன் நோக்கத்திலும் செயல்பாட்டிலும் முக்கிய வேறுபாடு இருக்கிறது. முதல் வேறுபாடு அர்பன் டிக்‌ஷனரி பொது அகராதி அல்ல: அது ’ஸ்லேங்’ என சொல்லப்படும் பேச்சு மொழியிலான கொச்சை வார்த்தைகள் மற்றும் பதங்களுக்கு பொருள் கூறும் அகராதி. இரண்டாவதாக, இதில் வார்த்தைகள் சமர்பிக்கவோ, அதற்கான விளக்கம் அளிக்கவோ எந்தவித கட்டுப்பாடும் கிடையாது.

பயனாளிகள் தாங்கள் விரும்பும் வார்த்தையை சமர்பிப்பதோடு, அதற்கு தாங்கள் நினைக்கும் பொருள் அளிக்கலாம். அந்த பொருள் சரியாக இருக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. இதை தான் அர்பன் டிக்‌ஷனரி ’உங்கள் உலகை வரையரை செய்யுங்கள்’ என்கிறது.

ஆக, ஒரு வார்த்தை உங்களுக்கு பிடித்திருக்கிறது என வைத்துக்கொள்ளுங்கள், அதை சமர்பித்து, அதற்கு நீங்கள் விரும்புவது போல விளக்கம் அளிக்கலாம். அந்த வார்த்தைக்கான பயன்பாடு உதாரணங்களையும் அளிக்கலாம். ஒரு வார்த்தைக்கு ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் விளக்கம் அளித்தால், அவை அனைத்தும் வரிசையாக இடம்பெறும். வாக்குகள் அடிப்படையில், அவை பட்டியலிடப்படும்.

இதில் இடம்பெறும் வார்த்தைகளுக்கான விளக்கத்தை நம்பி பயன்படுத்தலாம் என்பதற்கு எந்த நிச்சயமும் இல்லை, ஆனால் நிச்சயம் ரசிக்கலாம். அதிலும் கொஞ்சம் எதிர்கலாச்சார தன்மையும், திறந்த மனதும் இருந்தால் தாராளமாக ரசிக்கலாம்.

இப்படி ஒரு இணைய அகராதியை எதற்கு உருவாக்க வேண்டும்? இதே கேள்வியை இதன் நிறுவனர் ஆரான் பெக்கமிடம் கேட்டால், ஏன் உருவாக்க கூடாது? என பதில் கேள்வி கேட்கலாம். ஏனெனில், வழக்கமான அகராதியின் அம்சங்களுக்கு எதிரான தன்மையோடு தான் அவர் அர்பன் டிக்‌ஷனரி தளத்தை உருவாக்கியதாக குறிப்பிட்டுள்ளார். வழக்கமான அகராதிகள் அலுப்பூட்டும் வகையிலும், வார்த்தைகளுக்கு விளக்கம் தருவதில் அவை காட்டும் தீவிரம் இன்னும் அலுப்பூட்டுவதாக கூறும் பெக்கம், பாரம்பரிய அகராதிகளை நையாண்டி செய்யும் நோக்கத்துடன் தனது அகராதியை உருவாக்கியதாக கூறியுள்ளார்.

பெக்காம் முதலில், அந்த காலகட்டத்தில் பிரபலமாக இருந்த கேள்விகள் பாணியில் தேட வழி செய்த ஆஸ்க் ஜீஸ்வ் தேடியந்திரத்தை நையாண்டி செய்யும் வகையில் ஒரு இணையதளத்தை அமைத்திருந்தார். அந்த தளத்திற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்ப படவே அதை மூடிவிட்டு, கேலி+ கிண்டல் இணைய அகராதியை கையில் எடுத்தார்.

u1கம்ப்யூட்டர் அறிவியல் பட்டதாரியான அவர், கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் சும்மா ஜாலியாக, அர்பன் டிக்‌ஷனரி தளத்தை துவக்கினார். அப்போது, அவரது நோக்கம், கலிபோர்னியா மாணவர் வட்டாரத்தில் புழங்கும் பேச்சு மொழி சொற்களுக்கான விளக்கம் தருவதாக இருந்தது. பொதுவாக இது போன்ற சொற்களுக்கான பொருளை அகராதியில் பார்க்க முடியாது. ஆனால் பேச்சு வழக்கில் அவை பயன்பாட்டில் இருக்கும். இத்தகைய சொற்களையும், பதங்களையும் அர்பன் டிக்‌ஷனரி பட்டியலிட்டு பொருள் கூறியது.

இதுவே கொஞ்சம் சுவாரஸ்யமானது தான். இதற்கு மேலும் சுவாரஸ்யம் அளிக்கும் வகையில், இத்தகைய வார்த்தைகளை யார் வேண்டுமானாலும் சமர்பிக்கலாம் என்பதோடு, கொஞ்சம் சலுகை எடுத்துக்கொண்டு இஷ்டம் போல பொருள் எழுதலாம் என அனுமதி அளித்தார். இந்த சுதந்திரம் பிடித்தவர்கள் மத்தியில் அர்பன் டிக்‌ஷனரி தளம் வேகமாக பிரபலமானது. இதில் உள்ள அர்தத்தை சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டாம் எனும் தன்மை பலருக்கு பிடித்திருந்தது. மேலும், புதிய வார்த்தைகளை சமர்பித்து அதற்கு விருப்பம் போல பொருள் கூறலாம் எனும் படைப்பூக்கம் கவர்ந்தது.

இந்த அம்சங்கள் தான் அர்பன் டிக்‌ஷனரி தளத்தை வளர்த்தெடுத்தது. பொதுவாக அகராதிகளில் புதிதாக ஒரு வார்த்தை இடம்பெற வேண்டும் எனில், அதற்கு என நீண்டதொரு செயல்முறை இருக்கிறது. மொழியியல் அறிஞர்கள் குழு அதற்கு பச்சைக்கொடி காட்ட வேண்டும். ஆனால், இத்தகைய சடங்குகள் (!) எல்லாம் இல்லாமல் அர்பன் டிக்‌ஷனரியில் புதிய வார்த்தையை சேர்த்து பொருள் கூறலாம். மேலும் அனாமேதயமாகவும் வார்த்தைகளை சமர்பிக்கலாம். துவக்கத்தில் பேச்சு வழக்கு சொற்களுக்கான அகராதி என்று இருந்தாலும் காலப்போக்கில் எல்லா வகையான வார்த்தைகளும் சமர்பிக்கப்பட்டு வருகின்றன.

இது வரை உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்ககணக்கானோர் இதில் வார்த்தைகளை சமர்பித்துள்ளனர். தினமும் இரண்டாயிரத்துக்கும் மேல் புதிய வார்தைகள் சமர்பிக்கப்படுகின்றன. இந்த வார்த்தைகள் தளத்தின் முகப்பு பக்கத்தில் இடம்பெறுவதை பார்க்கலாம். வார்த்தைகள் அகர வரிசையில் மற்றும் பல்வேறு தலைப்புகளிலும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவைத்தவிர தேடல் வசதியும் இருக்கிறது.

கேலியும், கிண்டலும் தான் நோக்கம் என்றாலும் அர்பன் டிக்‌ஷனரி அகராதியை வெறும் விளையாட்டு அகராதி என புறந்தள்ளிவிட முடியாது. மொழியில் ஏற்பட்டு வரும் மாற்றத்தை பேச்சு வழக்கில் புழங்கும் வார்த்தைகளை கொண்டு உணர்ந்து கொள்ளலாம் எனில், அதை கச்சிதமாக வெளிப்படுத்தும் இடமாக அர்பன் டிக்‌ஷனரி இருக்கிறது. இந்த காரணத்திற்காகவே மொழியியல் அறிஞர்களும் இந்த அகராதியை பொருட்படுத்த வேண்டும் என்கின்றனர்.

அது மட்டும் அல்ல, சமூகத்தில் பேச்சு வழக்கில் புழங்கி கொண்டிருக்கும் ஏதேனும் சொல்லுக்கு பொருள் தெரிய வேண்டும் எனில் அர்பன் டிக்‌ஷனரியை நாடலாம். நீதிமன்ற வழக்கு விசாரணைகளில் பயன்படுத்தப்பட்ட புரியாத சொற்களுக்கு நீதிபதிகள் இந்த அகராதியில் பொருள் தேடி வழக்கில் பயன்படுத்திய உதாரணங்களும் உண்டு என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

அதே நேரத்தில் இதன் விளக்கங்கள், இனரீதியான தாக்குதலாக அமைவதாகவும் கடும் விமர்சனங்கள் உண்டு. இந்த தளத்தில் இடம்பெறும் வார்த்தைகள் நீக்கப்படுவதில்லை என்றாலும், தனிப்பட்ட பெயர்களை தவிர்க்க வேண்டும் என்பது போன்ற பொதுவான நெறிமுறைகளை நிறுவனர் பெக்காம் கொண்டு வந்துள்ளார்.

ஆனால் ஒன்று, அர்பன் டிக்‌ஷனரி தளத்தின் வெற்றியை மீறி, அதை வர்த்தக நோக்கில் கொண்டு செல்லாமல் அதன் சுதந்திர தன்மை மாறாமல் பெக்கம் நடத்தி வருகிறார். இந்த தளத்தை பெரிய நிறுவனமாக்கி கோடிகளை அள்ளுவதில் எல்லாம் அவருக்கு ஆர்வம் இல்லை.

இந்த தளத்தின் தன்மை தொடர்பாக விரிவான ஆய்வும் நடத்தப்பட்டுள்ளது. எம்,ஐ.டி பல்கலை ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்ட அந்த ஆய்வு, இந்த தளத்தில் உள்ள வார்த்தைகளுக்கான அர்த்தம், ஒரு சிறு குழுவினருக்கு மட்டுமே புரியக்கூடியதாக இருப்பது உள்ளிட்ட பல விஷயங்களை தெரிவிக்கிறது. நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட நாளிதழ்கள் இந்த அகராதி பற்றி ஆழமாக அலசி ஆராய்ந்து எழுதியுள்ளன.

இந்த அகராதி அலட்சியம் செய்யக்க்கூடியதா, அல்லது ரசித்து மகிழ்வதற்கானதா என்பதை நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள்.

அர்பன் டிக்‌ஷனரி: https://www.urbandictionary.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.