வலை 3.0: ஹோட்டல் முன்பதிவு வசதி வழங்கிய முன்னோடி இணையதளம்

1_Y9C8TJRyNF1ZNSJXDqi7xgஇணையத்தில் ஹோட்டல் அறை முன்பதிவு செய்வதெல்லாம் ஒரு விஷயமா என்று சர்வ சாதாரணமாக நினைக்கலாம். ஸ்மார்ட்போன் செயலி வாயிலாக இதை எளிதாக செய்து விடலாம் என்பதோடு, விலை போன்ற அம்சங்களை ஒப்பிட்டு சிறந்த வாய்ப்பையும் தேர்வு செய்து கொள்ளலாம். அது மட்டும் அல்ல, பயணம் செல்ல உள்ள இடத்தில் பார்க்க வேண்டிய இடங்கள், தங்குமிடங்கள் உள்ளிட்டவற்றை வரைபடமாக்கி முழு பயண அட்டவணையையும் கூட தயார் செய்ய வழிகாட்டும் பயண செயலிகள் இருக்கின்றன.

பயண ஏற்பாடு மற்றும் சுற்றுலா சார்ந்த இணைய சேவைகள் எங்கேயோ வளர்ந்து வந்துவிட்டன என்பது உண்மை தான். இருப்பினும், ஹோட்டல் அறையை முன்பதிவு செய்வது என்பது நிஜமாகவே பெரிய விஷயமாக இருந்த காலம் உண்டு. அந்த காலகட்டத்தில், ஹோட்டல் அறையை முன்பதிவு செய்ய வேண்டும் என்றால், ஹோட்டலுக்கு போன் செய்து அல்லது பயண ஏற்பாட்டு நிறுவனம் மூலம் தொடர்பு கொண்டு அறையை முன்பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு பதிவு செய்யப்படும் ஹோட்டல் எப்படி இருக்கும்? அதன் அறைகள் எப்படி இருக்கும்? என்பதற்கு அதிக உத்திரவாதம் இல்லை. விலையை பற்றி மறுபேச்சு கிடையாது. அதிலும் வேறு நகரம் அல்லது வேறு நாடு என்றால் நிலைமை இன்னும் மோசம்.

எனவே அந்த நாள் பயணிகள், புதிதாக ஒரு நகருக்குச்சென்றதும், ஒவ்வொரு விளம்பர பலகையாக பார்த்தபடி அல்லது வழிபோக்கர்களிடம் விசாரித்தபடி ஹோட்டலை தேடிச்சென்று கொண்டிருந்தனர். சுருக்கமாகச்சொல்வது என்றால் எந்த இடத்தில் தங்கப்போகிறோம் என்பதை தீர்மானிக்க எளிதான வழி இருக்கவில்லை.

நினைவில் கொள்ளுங்கள், 1990 களின் இடைப்பட்ட காலம் வரை இது தான் நிலை.

இந்த பின்னணியில் தான் நெதர்லாந்து நாட்டு வாலிபர் ஜீர்ட் ஜான் புருயின்ஸ்மாவுக்கு ( Geert-Jan Bruinsma  ) தொழில்நுட்பம் மூலம் இதற்கு தீர்வு காணலாமே என்றுத்தோன்றியது. மென்பொருளாளரான புருயின்ஸ்மா, பேக்ஸ் சார்ந்த மென்பொருள் சேவை எப்படி எல்லாம் பயன்படக்கூடும் யோசித்துக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில், அவர் அமெரிக்கா ஹோட்டல் நிறுவனம், தனது ஹில்டன்.காம் இணையதளத்தில் இணையம் மூலம் அறையை முன்பதிவு செய்யும் வசதி அளிப்பதை பார்த்தார். உடனே அவருக்கு ஒரு பல்ப் எரிந்தது. தான் வசிக்கும் நகரான ஆம்ஸ்டர்டம்மில், இதே போல ஹோட்டல் அறைகளை இணையத்தில் முன்பதிவு செய்ய முடியுமா என தேடிப்பார்த்தார். அத்தகைய வசதி எதுவும் இல்லை என தெரிய வந்தது.

நெதர்லாந்து நாட்டில் ஹோட்டல்கள் சார்ந்த இரண்டு இணையதளங்கள் மட்டுமே இருந்தன. இரண்டுமே முன்பதிவு வசதியை அளிக்கவில்லை. ஒரு தளம் வெறும் ஹோட்டல் விளம்பரங்களை அளித்தது என்றால், இன்னொரு இணையதளம் இமெயில் படிவம் மூலம் முன்பதிவு வசதியை அளித்தது.

புருயின்ஸ்மா, ஹோட்டல் முன்பதிவு வசதியை அளிக்கும் உத்தேசத்துடன் புக்கிங்.என்.எல் எனும் இணையதளத்தை பதிவு செய்தார். ஹோட்டல்களுடன், ஒப்பந்தம் செய்து கொண்டு, 50:50 எனும் அடிப்படையில் முன்பதிவு வசதியை அளித்தார். அவரே இணையதளத்தை உருவாக்கினார். அதில் பிரச்சனை ஏற்படவே மேலும் சில நுட்பங்களை கற்றுக்கொண்டு இணையதளத்தை அமைத்தார். 1997 துவக்கத்தில் இணையதளம் முழுவீச்சில் அறிமுகமானது. அடுத்த மாதம் முதல் வாடிக்கையாளர் ஹோட்டல் அறையை முன்பதிவு செய்தார்.

அவ்வளவு தான், புக்கிங் இணையதளமும் வளர்ந்தது, இணையம் மூலம் ஹோட்டல் அறைகளை முன்பதிவு செய்யும் வசதியும் வளர்ந்து விஸ்வரூபம் எடுத்தது.

அடுத்த சில ஆண்டுகளில், சுற்றுலா பிரிவில் மற்றொரு முன்னோடி நிறுவனமான எக்ஸ்பீடியாவில் கையகப்படுத்தப்பட்டு பேச்சு வார்த்தை நடைபெற்று, பின்னர் மற்றொரு முன்னோடி முன்பதிவு சேவை நிறுவனமான பிரைஸ்லைனால் புக்கிங் தளம் விலைக்கு வாங்கப்பட்டு, புக்கிங்.காம் எனும் பெயரில் முன்னணி தளமாக விளங்கி வருகிறது.

=–

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.