Tag Archives: travel

விசா பெற வழிகாட்டும் இணையதளம்

visaசுற்றுலா அல்லது உயர் கல்விக்காக வெளிநாடு செல்ல இருப்பவர்கள் அந்நாடுகளில் உள்ள விசா நடைமுறை விதிகளை தெரிந்து கொள்ள விரும்பினால் அதற்கான தகவல்களை எளிதாக தெரிந்து கொள்ள உதவுகிறது விசாடிபி இணையதளம்.
இந்த தளத்தை பயன்படுத்துவது எளிதானது. முதலில் எந்த நாட்டைச்சேர்ந்தவர் என்பதை குறிப்பிட வேண்டும். அதன் பிறகு பயணம் செய்வதற்கான காரணத்தை தேர்வு செய்துவிட்டு, செல்வதற்கான நாட்டை தேர்வு செய்தால், அந்த நாட்டிற்கான விசா நடைமுறை தொடர்பான தகவல் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் ஒன்று இந்த தகவல்கள் வழிகாட்டும் நோக்கத்திலானவை மட்டுமே. இவற்றை அடிப்படையாக கொண்டு, அதிகாரப்பூர்வ வழியில் உறுதி செய்து கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த தளம் இணையத்தில் உள்ள விசா தகவல்களை திரட்டித்தருகிறது. இந்த சேவையை வழங்கும் வேறு சில இணையதளங்கள் இருந்தாலும் இதன் இடைமுகம் எளிமையாக இருப்பது சிறப்பு.
இணைய முகவரி; http://visadb.io/index.html

செயலி புதிது : புதிய நண்பர்களை பெற உதவும் சேவை
புதிய நண்பர்களை அடையாளம் காண விரும்புகிறவர்களுக்கும், ஆர்வத்தின் அடிப்பையில் நட்பு வலை விரிப்பதில் ஆர்வம் கொண்டவர்களுக்கும் கைகொடுக்கும் வகையில் டூகதர் செயலி அமைந்துள்ளது.
சமூக வலைப்பின்னல் வகையை சேர்ந்த இந்த செயலி மூலம், பயனாளிகள் தங்கள் அருகாமையில் உள்ள ஒத்த கருத்துள்ளவர்களை அடையாளம் கண்டு அவர்களுடன் தொடர்பு கொள்ளலாம். இதற்கேற்ப தங்களுக்கு விருப்பமான செயல்களை பட்டியலிட்டு அதில் ஆர்வல் உள்ளவர்களை தேடி தொடர்பு கொள்ளலாம். இதே போல மற்றவர்கள் உருவாக்கியுள்ள விருப்ப பட்டியலிலும் இணைத்துக்கொள்ளலாம்.
புதிய நிகழ்ச்சிகளை கண்டறியவும் இந்த செயலியை பயன்படுத்தலாம். வார விடுமுறை நாட்களில் நிகழ்வுகளை திட்டமிடவும் இந்த செயலி உதவலாம். புதிய குழுக்களில் இணைந்து கொள்ளவும் இந்த செயலி வழிகாட்டும். ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் செயல்படுகிறது.
மேலும் தகவல்களுக்கு: https://www.letsdogether.com/

கண்டுபிடிப்பாளர்களின் பாதையில்…

பயண ஏற்பாட்டு இணையதளமான டிராவல்பேக், ’கண்டுபிடிப்பின் பாதையில்’ எனும் சுவாரஸ்யமான இணைய பக்கத்தை உருவாக்கி வரலாற்றில் பின்னோக்கி பயணிக்க வைத்துள்ளது.

,எளிமையாக வடிவமைக்கப்பட்ட இந்த பக்கத்தில் வரலாற்றின் ஆகச்சிறந்த கண்டிபிடிப்பாளராக கருதப்படும் கொல்ம்பசில் துவங்கி, வரலாற்று பயணியான மார்கோ போலோ வரை 13 முக்கிய கண்டுபிடிப்பாளர்கள் தொடர்பான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த கண்டுபிடிப்பாளர்கள் பயணத்தை மேற்கொண்ட போது அதற்கு தேவைப்பட்ட காலமும், தற்போது நவீன போக்குவரத்து வசதிகள் உள்ள சூழலில் அந்த பயணத்தை நிறைவேற்றக்கூடிய கால அவகாசமும் ஒப்பிடப்பட்டுள்ளது. இந்த ஒப்பீட்டை கூகுள் வரைபடம் மூலமும் செய்து பார்க்கலாம். கண்டுபிடிப்பாளர்கள் மேற்கொண்ட சாகசப்பயணத்தின் வழித்தடத்தை கூகுள் வரைபடம் மீது பார்க்கலாம்.

அட்லாண்டிக் பெருங்கடலை விமானம் மூலம் கடந்த வீராங்கனை அமிலி எர்ஹார்ட், கேப்டன் குக் உள்ளிட்டோரது சாகப்பயணங்களையும் இப்படி வரைபடத்தில் ஒப்பிட்டு பார்க்கலாம்.

இணைய முகவரி: https://www.travelbag.co.uk/a-race-of-discovery/#

 

செயலி புதிது: இமோஜிகள் உங்கள் கைகளில்…

ஸ்மார்ட்போனில் வாழ்த்து செய்தி அனுப்புவதாக இருந்தாலும் சரி, சாதாரண வாட்ஸ் அப் செய்தி அனுப்புவதாக இருந்தாலும் சரி, இமோஜி எனப்படும் சித்திர எழுத்துக்களை நாடுவதே பலரது வழக்கமாக இருக்கிறது. தேவையான் இமோஜிகளை தேர்வு செய்யும் வசதி போன் விசைப்பலக்கையிலேயே இருக்கிறது என்றாலும், இதற்கென பிரத்யேக செயலிகளும் இல்லாமல் இல்லை. அந்த வகையில் டெக்ஸ்ட் டு இமோஜி செயலி, வார்த்தைகளை இமோஜிகளாக மாற்றித்தருகிறது.

இதில் உள்ள தேடல் கட்டத்தில் ஆங்கில வார்த்தைகளை டைப் செய்து அதற்கு பொருத்தமான இமோஜிகளை கண்டுபிடிக்கலாம். இது தவிர ஆயிரக்கணக்கான இமோஜிகளில் இருந்தும் தேர்வு செய்து கொள்ளலாம்.

இமோஜி வாசகங்களை விருப்பம் போல மாற்றிக்கொள்ளும் வசதி இருக்கிறது. இவற்றை சமூக ஊடகங்களில் பகிரும் வசதியும் இருக்கிறது. இமோஜிகளை நகலெடுக்கும் வசதியும் இருக்கிறது. இமோஜி பிரியர்களுக்கு சுவாரஸ்யமான அனுபவமாக இந்த செயலி அமைந்துள்ளது.

 

மேலும் தகவல்களுக்கு: http://bit.ly/2tBl6vn

விசா பெற வழிகாட்டும் இணையதளம்

VisaDB-796x398சுற்றுலா அல்லது உயர் கல்விக்காக வெளிநாடு செல்ல இருப்பவர்கள் அந்நாடுகளில் உள்ள விசா நடைமுறை விதிகளை தெரிந்து கொள்ள விரும்பினால் அதற்கான தகவல்களை எளிதாக தெரிந்து கொள்ள உதவுகிறது விசாடிபி இணையதளம்.

இந்த தளத்தை பயன்படுத்துவது எளிதானது. முதலில் எந்த நாட்டைச்சேர்ந்தவர் என்பதை குறிப்பிட வேண்டும். அதன் பிறகு பயணம் செய்வதற்கான காரணத்தை தேர்வு செய்துவிட்டு, செல்வதற்கான நாட்டை தேர்வு செய்தால், அந்த நாட்டிற்கான விசா நடைமுறை தொடர்பான தகவல் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் ஒன்று இந்த தகவல்கள் வழிகாட்டும் நோக்கத்திலானவை மட்டுமே. இவற்றை அடிப்படையாக கொண்டு, அதிகாரப்பூர்வ வழியில் உறுதி செய்து கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த தளம் இணையத்தில் உள்ள விசா தகவல்களை திரட்டித்தருகிறது. இந்த சேவையை வழங்கும் வேறு சில இணையதளங்கள் இருந்தாலும் இதன் இடைமுகம் எளிமையாக இருப்பது சிறப்பு.

இணைய முகவரி; http://visadb.io/index.html

 

 

செயலி புதிது : புதிய நண்பர்களை பெற உதவும் சேவை

புதிய நண்பர்களை அடையாளம் காண விரும்புகிறவர்களுக்கும், ஆர்வத்தின் அடிப்பையில் நட்பு வலை விரிப்பதில் ஆர்வம் கொண்டவர்களுக்கும் கைகொடுக்கும் வகையில் டூகதர் செயலி அமைந்துள்ளது.

சமூக வலைப்பின்னல் வகையை சேர்ந்த இந்த செயலி மூலம், பயனாளிகள் தங்கள் அருகாமையில் உள்ள ஒத்த கருத்துள்ளவர்களை அடையாளம் கண்டு அவர்களுடன் தொடர்பு கொள்ளலாம். இதற்கேற்ப தங்களுக்கு விருப்பமான செயல்களை பட்டியலிட்டு அதில் ஆர்வல் உள்ளவர்களை தேடி தொடர்பு கொள்ளலாம். இதே போல மற்றவர்கள் உருவாக்கியுள்ள விருப்ப பட்டியலிலும் இணைத்துக்கொள்ளலாம்.

புதிய நிகழ்ச்சிகளை கண்டறியவும் இந்த செயலியை பயன்படுத்தலாம். வார விடுமுறை நாட்களில் நிகழ்வுகளை திட்டமிடவும் இந்த செயலி உதவலாம். புதிய குழுக்களில் இணைந்து கொள்ளவும் இந்த செயலி வழிகாட்டும். ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் செயல்படுகிறது.

மேலும் தகவல்களுக்கு: https://www.letsdogether.com/

chelsea

அமெரிக்க சுற்றுலா தலங்களை அடையாளம் காட்டும் அருமையான இணையதளம்

அமெரிக்க சொர்கபுரி என்பது பலரது எண்ணம். இருக்கலாம்! நம்மவர்களில் பலரும் அங்கு மேற்படிப்பிற்கும், மேல் வாழ்க்கைக்கும் ( அங்குயே குடிபெயர்தல்) விரும்புகின்றனர். ஆனால் அமெரிக்கா பிழைக்க்செல்லவும் அங்கேயே தங்கிவிடவும் மட்டும் ஏற்ற தேசம் அல்ல; அந்நாடு சுற்றுலா நோக்கிலும் அருமையான பிரதேசம். அமெரிக்காவில் சுற்றிப்பார்க்க சுற்றுலா இடங்கள் அநேகம் இருக்கின்றன. ஆனால் பிரான்சும் ,இத்தாலியும், ஸ்பெயினும் சுற்றுலாவுக்காக அறியப்படும் அளவுக்கு அமெரிக்க அறியப்படவில்லை.

அமெரிக்காவில் சுற்றிப்பார்க்க அப்படி என்ன இருக்கிறது ? என்று கூட நீங்கள அப்பாவிதனமாக கேட்கலாம். இந்த கேள்விக்கு அழகாக பதில் அளிக்கிறது அட்ராக்‌ஷன்ஸ் ஆப் அமெரிக்கா இணையதளம்.  அமெரிக்காவில் இருக்கும் 50 மாநிலங்களிலும் பார்க்க வேண்டிய இடங்களை இந்த இணையதளம் அழகாக பட்டியல் போட்டு காட்டுகிறது.  உலகிலேயே மிகவும் மாறுபட்ட நிலப்பரப்பை கொண்ட பெரிய நாடு என்ற முறையில் அமெரிக்காவில் நியூயார்க்கின் வானுயர் கட்டடம் முதல் அலாஸ்கா, அரோசோனாவின் இயற்கை எழில் பகுதிகள் அவரை பார்க்க வேண்டிய இடங்கள் எக்கச்சக்கமாக இருக்கிறது எனும் அறிமுகத்துடன் இந்த தளம் ஒவ்வொரு மாநில அழகையும் அறிமுகம்செய்கிறது.

ஒவ்வொரு மாநிலத்திலும் பார்க்க வேண்டிய பத்து இடங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.  50 மாநிலங்களும் வரிசையாக பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த மாநில பட்டியலின் கீழ் அமெரிக்காவில் பார்க்க வேண்டிய பத்து இடங்கள் என்பது போன்ற பொதுவாக பட்டியல் இடம்பெற்றுள்ளன.

அமெரிக்காவுக்கு செல்பவர்கள் மட்டும் அல்ல அங்கேயே கிரீன் கார்டு வாங்கி செட்டிலானவர்கள் கூட இந்த தளத்தை பார்த்து பயன்பெறலாம்.

இந்த தளமே சிறப்பாக இருக்கிறது. இதில் இன்னொரு நல்ல விஷய்ம் என்ன என்றால் பட்டியலில் அடையாளம் காட்டப்படும் எல்லா இடங்களுக்கும் தனியே இணையதளம் இருக்கிறது. எனவே கூடுதல் விவரன்களை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.

அமெரிக்காவை சுற்றிப்பார்க்க: http://www.attractionsofamerica.com/

ரெயில் பயண வெயிட்டிங் லிஸ்ட் உறுதி ஆகுமா? பதில் சொல்லும் இணையதளம்

trநேற்று தற்செயலாக டிரைமேன் இணையதளத்தை பார்த்தேன்.எளிமையான இணையதளம் என்றாலும் முதல் பார்வையிலேயே ’அட’ என வியக்க வைத்தது. இது ஒரு கணிப்பு இணையதளம் . காத்திருப்பில் இருக்கும் முன்பதிவு டிக்கெட் உறுதியாவதற்கான வாய்ப்பு எந்த அளவு இருக்கிறது என்பதை கணித்துச்சொல்கிறது இந்த தளம். இது தான் இந்த தளத்தின் அடிப்படை.

ஆம், ரெயில் பயணங்களுக்கு முன்பதிவு செய்யும் போது என்ன செய்வீர்கள். ரெயில்வே தளத்திற்கு சென்று பயண நாளின் போது ரெயில் இருக்கிறதா என்பதையும் அதன் பிறகு அந்த ரெயிலில் இடம் இருக்கிறதா? என்பதையும் அறிந்து கொண்டு முன்பதிவு செய்வீர்கள்.

முன்பதிவு செய்யும் போது பல நேரங்களில் காத்திருப்பில் (வெயிட்டங் லிஸ்ட்) இருப்பதாக தகவல் வரும். என்ன செய்ய இந்திய ரெயில் பயணங்களில் காத்திருப்பை தவிர்ப்பதற்கில்லை. காத்திருப்பில் இருக்கும் டிக்கெட் உறுதியாகுமா ? என்பது சிதம்பர ரகசியம் இல்லை என்றாலும் பல நேரங்களில் புரியாத புதிர் தான். பதற்றத்தை தரக்கூடிய புதிர். காத்திருப்பு பட்டியலை சொல்லி நண்பர்களிடம் விவரம் கேட்கலாம்.ரெயில் பயண அனுபவசாலிகள் காத்திருப்பு எண் மற்றும் ரெயிலின் பெயர் உள்ளிட்ட பல விஷ்யங்க்ளை கணக்கு போட்டு இதற்கு பலவித பதில் சொவார்கள்.TrainManlogo2

இனி இந்த விசாரணையோடு டிரைன்மேன் தளத்தின் கணிப்பையும் சேர்த்துக்கொள்ளுங்கள். உங்கள் ரெயில் பயண டிக்கெட்டுக்கான பி.என்.ஆர் எண்ணை இந்த தளத்தில் சமர்பித்தால் அந்த டிக்கெட் உறுதியாவதற்கு எந்த அளவு வாய்ப்புள்ளது என இந்த தளம் கணக்கு போட்டு சொல்கிறது.

சரி, இந்த கணிப்புகள் எந்த அளவு சரியானவை. பொதுவாக எல்லா கணிப்புகளும் எந்த அளவு சரியானவையோ அதே அளவு இதுவும் நம்பகமானது என இந்த தளம் சொல்கிறது. அது மட்டும் அல்ல, கிட்டத்தட்ட ஒரு லட்சம் முறைக்கு மேல் பரிசோதித்து பார்த்து சேவையை அறிமுகம் செய்திருப்பதால் இந்த கணிப்பு நம்பகமானவை என்றும் உறுதி அளிக்கிறது.

கணிப்பு 65 சதவீத்திற்கு மேல் இருந்தால் டிக்கெட் உறுதி ஆகலாம். கணிப்பு சதவீத்தில் குறிப்பிடப்படுவதோடு வண்ணங்களிலும் காட்ட்ப்படுகிறது.பச்சை வண்ணம் என்றால் ஒ.கே.

இது தவிர ரெயில்களை அறியும் வழக்கமான வசதியும் இருக்கிறது. ரெயில் பயண அடிப்படை தகவல்கள் மற்றும் காத்திருப்பு பட்டியல் செயல்படும் விதம் பற்றிய விளக்க குறிப்புகள் அவசியம் படிக்க வேண்டியவை.

எளிமையான சேவை தான். ஆனால் வியக்க வைக்கிறது. அமெரிக்க போன்ற நாடுக்ளில் விமான சேவை சார்ந்து பல புதுமையான இணையசேவைகளும் தளங்களும் அநேகம் இருக்கினறன. சில தளங்கள் அவற்றின் புதுமையாக வியக்க வைக்கும். ஏறக்குறைய அதே பாணியில் இந்த இந்திய தளம் அமைந்திருக்கிறது. நமக்கு இது போன்ற சேவைகள் மேலும் தேவை.

இந்த தளத்தை பார்த்ததுமே அதன் சுருக்கமான அறிமுகத்தை என் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட போதும் நல்ல வரவேற்பு இருந்தது.

-இணையதள முகவரி; http://www.trainman.in/

லெகோ பயணங்களில் ! இணைய உலகம் ரசிக்கும் பயணம்

insஎப்படியும் உங்கள் பயணங்களை புகைப்படமாக்கி பேஸ்புக்கிலும் இன்ஸ்டாகிராமிலும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளத்தான் போகிறீர்கள் . இந்த புகைப்படங்களை உலகமே பார்த்து ரசிக்க வேண்டும் என்றாலோ, உங்கள் பயணங்களை எல்லோரும் ஆர்வத்துடன் பின் தொடர வேண்டும் என்றால் நீங்கள் கொஞ்சம் புதுமையாக செயல்பட வேண்டும். இந்த ஸ்காட்லாந்து ஜோடியைப்போல !

கிரேக் மெக்கார்ட்னி மற்றும் அவரது காதலி லின்சே தான் அந்த ஜோடி. இப்போதைக்கு தங்கள் பயணங்களால் இணைய உலகை கலக்கும் ஜோடி!

மெக்கார்டினியும், லின்சேவும் தங்கள் பயணங்களின் போது எடுத்து வெளியிடும் புகைப்படங்களை ஆயிரக்கணக்கானோர் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து வருகின்றனர். பேஸ்புக்கிலும் , இன்ஸ்டாகிராமிலும் அவர்கள் பயணத்தை ஆயிரக்கணக்கானோர் புகைப்படங்களின் மூலம் பின் தொடர்கின்றனர். அந்த புகைப்படங்களை பார்ப்பவர்கள் எல்லோருமே , ஒரு புன்னகையோடு மனதுக்குள் அவற்றை பாராட்டி மகிழ்கின்றனர்.

மெக்கார்ட்னி ஜோடி எடுத்து மகிழும் புகைப்படங்களில் என்ன சிறப்பு என்றால் அவற்றில் மைய பாத்திரங்கள் தான். ஆம், அந்த படங்களில் அவர்கள் பயணிக்கும் அழகான இடங்களை பார்க்கலாம். ஆனால் அவற்றின் நடுவே அவர்களை பார்க்க முடியாது. அதற்கு பதிலாக அவர்களின் பிரதிநிதியான் லெலோ பொம்மைகளை தான் பார்க்கலாம். எல்லா இடங்களிலும் தங்களுக்கு பதிலாக லெகோ பொம்மைகளை நிறுத்தி வைத்து படம் எடுத்து பகிர்ந்து கொண்டு வருகின்றனர். அவர்களின் அடையாளமாக இருக்கும் லெகோ பொம்மைகள் ஒவ்வொரு இடத்திலும் ஒரு விதமான போஸ்களில் காட்சி அளிக்கின்றன.

எத்தனையோ அருமையான படங்களை பார்த்து ரசித்திருக்கிறோம். சுற்றுலா பயணிகள் எடுத்துக்கொண்ட படங்களில் அவற்றின் அழகை மீறி ஒரு தனிப்பட்ட தன்மை இருக்கும். அதே நேரத்தில் தொழில்முறை கலைஞர்கள் எடுக்கும் புகைப்படங்களில் அவற்றின் நேர்த்தி இயற்கை மீறிய அழகாக இருக்கும். ஆனால் இந்த புகைப்படங்களில் , பார்த்து ரசிக்க கூடிய இடங்களில் , லெகோ பொம்மைகளை பார்ப்பது ஒரு புதிய அனுபவமாக இருக்கிறது. இந்த படங்களுக்கு வழக்கத்தை மீறிய உயிரோட்டத்தை தருவதோடு , உலகையே லெகோ பொம்மைகள் வழியே பார்ப்பது போல இருக்கிறது.

ins2எல்லோரும் தங்களை முன்னிறுத்தி சுயபடங்கள் எடுத்துக்கொள்ளும் காலத்தில் , படம் எடுப்பவர் தன்னை பின்னுக்கு தள்ளிக்கொண்டு அந்த இடத்தில் லெகோ பொம்மையை நிறுத்தி வைப்பது வித்தியாசமானது தான். ஆனால் , இந்த லேகோ பொம்மைகள் தான் எத்தனை விதமாக இருக்கின்றன.

ஒரு புகைப்படடத்தில் பேக்பேக் மாட்டிய லெகோ ஆணும் ,கையில் காமிரா ஏந்திய லெகோ பெண்ணும் ஒன்றாக கைகோர்த்தபடி நடந்து செல்கின்றனர். இன்னொரு படத்தில் புல்வெளி நடுவே லகோ ஆண்ல் போஸ் கொடுக்க லெகோ பெண் படம் பிடிக்கிறாள். மற்றொரு படம், நீரூற்று நடுவே லேகோ ஜோடி சைக்கிள் ஓட்டிச்செல்கிறது. பாலத்தின் முன்னே லெகோ ஜோடி போஸ் கொடுப்பதாக இன்னொரு படம். இப்படி எல்லா புகைப்படங்களிலும் லெகோ பொம்மை வழியே அந்த இடங்களை பார்ப்பது தனியான அனுபவமாக இருக்கிறது.

அதனால் தான் இன்ஸ்டாகிராம் புகைப்பட பகிர்வு தளத்தில் இந்த ஜோடியின் கணக்கை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 5,000 தொட இருக்கிறது. இது தவிர பேஸ்புக்கில் சில ஆயிரம் பேர் பின் தொடர்கின்றனர். டிவிட்டர் பக்கத்தில் சில ஆயிரம் பேர் பின்தொடர்கின்றனர். எல்லா கணக்குகளுக்குமே லெகோ டிராவலர்ஸ் என்பது தான் முகவரி.

ins3இந்த ஜோடி தங்களை , லெகோ பயணிகள் என்று தான் அழைத்துக்கொள்கிறது. தங்கள் வாழ்க்கையை லெகோ வாழ்க்கை என குறிப்பிடுகிறது. ஸ்காட்லாந்தில் இருந்து புறப்பட்ட இந்த ஜோடி ஐரோப்பிய நாடுகளில் சுற்றி விட்டு இப்போது ஆஸ்திரேலியாவில் தங்கள் பயணத்தை பதிவு செய்து கொண்டிருக்கிறது.

எல்லாம் சரி, இந்த எண்ணம் உருவானது எப்படி? மெக்க்கார்டினியின் அம்மா கடந்த ஆண்டு , வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்த போது , அவர் சிறுவனாக இருந்த போது விளையாடிய பழைய லெகோ பொம்மைகளை எடுத்து பார்த்திருக்கிறார். அந்த பொம்மைகளை பார்தததும் சிறுவயது நினைவுகளில் மூழ்கிய மெக்கார்ட்னி அவற்றை தனது காதலி லின்சேவுக்கு பரிசளித்திருக்கிறார். அந்த பொம்மைகளைல் இரண்டு பொம்மைகள் அவர்களது அடையாளமாக இருக்கவே பாரீஸ் நகரில் அவற்றை தங்கள் இடத்தில் நிற்க வைத்து புகைப்படம் எடுத்தனர். அப்போது விளையாட்டாக, இந்த லேகோ படத்திற்காகவே ஒரு பேஸ்புக் பக்கம் அமைப்பது பற்றி பேசியுள்ளனர். ஆனால் அந்த ஐடியா பிடித்துப்போகவே , அதன் பிறகு போகும் இடங்களிலும் எல்லாம் லெகோ பொம்மகளை நிறுத்தி வைத்து படம் எடுத்து பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொண்டனர்,.முதலில் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் என்று இருந்த இந்த பக்கம் படிப்படியாக எல்லோரும் பார்த்து ரசிக்கும் பக்கங்களாக மாறிவிட்டன. தொடர்ந்து இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் பக்கங்களும் அமைக்கப்பட்டன.

இன்று அவர்களின் லெகோ பயணங்களை உலகமே பார்த்து ரசிக்கிறது.

 

——

லெகோ பயண பேஸ்புக் பக்கம் :https://www.facebook.com/LegoTravellers

இன்ஸ்டாகிராம் பக்கம்’; http://instagram.com/legotravellers