வலை 3.0: ஒரு ராட்சத இணையதளம்!

monster-college-job-search-sampleஇணையத்தில், இனி வேலை தேடலாம். இப்போது, இப்படி சொல்வது அர்த்தமற்று தோன்றலாம். ஆனால், 1990 களில் முதன் முதலில் இப்படி சொல்வது சாத்தியமான போது, வேலை தேடுபவர்களுக்கு இந்த வாசகம் எத்தனை உற்சாகமும், நம்பிக்கையும் அளிக்க கூடியதாக இருந்திருக்க கூடும் என்பதை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.

1994 ல் அறிமுகமான மான்ஸ்டர்.காம் தான் இந்த நம்பிக்கையை ஏற்படுத்திய முதல் இணையதளம். அந்த காரணத்திற்காகவே இணையத்தின் முன்னோடி இணையதளங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

இப்போது திரும்பி பார்க்கும் போது, வேலைவாய்ப்பு இணையதளம் என்பது இயல்பானதாக தோன்றலாம். ஆனால், வேலைவாய்ப்பு தேடலுக்கு இணையத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதே அந்த காலத்தில் புதுமையான யோசனையாக இருந்தது என்பதை மறந்துவிடக்கூடாது.

பொதுமக்களுக்கு இணையம் அறிமுகமான துவக்கத்தில், இணையம் என்றான் என்ன என பிடிபடுவதே பெரிய விஷயமாக இருந்தது. இணையத்தை அறிமுகம் செய்து கொண்டவர்களில் பலருக்கும், இணையத்தை எப்படி பயன்படுத்தலாம் எனும் கேள்வியும் இருந்தது. பலர் இந்த கேள்விக்கான பதிலை மற்றவர்களிடம் தேடினர். ஒரு சிலர் தங்களுக்குள்ளேயே கேட்டுக்கொண்டனர். அவர்களில் சிலருக்கு, இணைய பயன்பாட்டிற்கான முற்றிலும் புதுமையான யோசனைகள் தோன்றின.

இப்படி ஜெப் டெய்லர் என்பவருக்கு மின்னலென தோன்றிய யோசனை தான், வேலைவாய்ப்பு தேடலுக்காக இணையத்தை பயன்படுத்திக்கொள்ள வழி செய்யும் மான்ஸ்டர்.காம் இணையதளம்.

அமெரிக்கரான டெய்லர் அப்போது விளம்பர ஏஜென்சி ஒன்றை நடத்திக்கொண்டிருந்தார். அது அப்படி ஒன்றும் பெரிய ஏஜென்ஸி அல்ல. பெரிய ஏஜென்சிகள் சார்பாக செயல்பட்டுக்கொண்டிருந்த சிறிய ஏஜென்சி அது. டெய்லர் பெரும்பாலும் மனிதவள செயல்பாடுகளுக்கு உதவிக்கொண்டிருந்தார். அதாவது, வர்த்தக நிறுவனங்களின் ஆட்கள் தேவை பகுதிக்கான விளம்பரங்களில் உதவிக்கொண்டிருந்தார்.

1990 களில் துவக்கத்தில் நிலவிய தேக்க நிலை காரணமாக, டெய்லரின் வாடிக்கையாளர் நிறுவங்கள் சில, வழக்கமான நாளிதழ் விளம்பரங்களில் அதிருப்தி அடைந்து, ஏதாவது பெரிய யோசனையாக சொல்லுங்கள், இல்லை என்றால் வேறு ஆள் பார்த்துக்கொள்கிறோம் என சொல்லிவிட்டன. டெய்லரும், தனது வாடிக்கையாளர்களுக்கான பெரிய யோசனையை தேடத்துவங்கினார். ஏற்கனவே, வேலைவாய்ப்பு விளம்பரங்களை கொடுப்பதில் அனுபவம் இருந்ததால், அதை மையமாக கொண்டே அவர் மனது யோசித்துக்கொண்டிருந்தது.

இந்த யோசனைகளுக்கு மத்தியில் தான் ஒரு நாள் அதிகாலை கனவில் டெய்லருக்கு, வேலைவாய்ப்பு தேடலுக்காக, புல்லட்டியன் போர்டு எனப்படும் இணையத்தின் தகவல் பலகை வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தோன்றியது. பி.பி.எஸ் என குறிப்பிடப்படும் தகவல் பலகை என்பது, வழக்கமான தகவல் பலகையின் மின்னணு வடிவம் தான். அதில் விரும்பிய தகவல்களை இடம்பெற வைத்து உறுப்பினர்களை பார்க்க வைக்கலாம். உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்கும் வசதியும் உண்டு.

அந்த காலக்கட்டத்தில் பல்வேறு விதமான இணைய தகவல் பலகைகள் பிரபலமாக இருந்தன. டெய்லர் இவற்றை ஓரளவு அறிந்திருந்தார். அதன் பயனாக, வேலைவாய்ப்புக்கான தகவல் பலகை ஒன்றை உருவாக்கலாம் என அவருக்குத்தோன்றியது. இந்த எண்ணம் தோன்றியதுமே, ஒரு கபேவுக்குச்சென்று அமர்ந்தபடி, தன மனதில் இருந்த எண்ணத்தை அப்படியே காகிதத்தில் குறிப்பெடுத்துக்கொண்டார். வேலைவாய்ப்பு தகவல் பலகைக்கான அடிப்படை அம்சங்களாக அந்த குறிப்புகள் அமைந்திருந்தன.

இப்படி ஒரு தகவல் பலகை மட்டும் உருவாக்கப்பட்டு வெற்றி பெற்றுவிட்டால், அதன் பிறகு வர்த்தக வாடிக்கையாளர்கள் தயவு இல்லாமல் தன்னால் தாக்குப்பிடிக்க முடியும் என்றும் அவர் நினைத்துப்பார்த்தார். அந்த ஏக்கத்துடன், வேலைவாய்ப்பு தகவல் பலகை உருவாக்க முயற்சியில் ஈடுபட்டார்.

1993 இறுதியில் இந்த முயற்சியை அவர் துவக்கிய போது, இணையத்தில் மொத்தம் 200 இணையதளங்களே இருந்தன. அவர் தனது சேவைக்கு மான்ஸ்டர் என பெயர் வைக்க தீர்மானித்திருந்தார். அவரிடம் பெரிய யோசனை கேட்டிருந்த வாடிக்கையாளர் உண்மையில், புதிய ராட்சத யோசனை தேவை என கூறியிருந்தார். அந்த தேடலில் பிறந்த யோசனைக்கு டெய்லர் ராட்சத என பொருள் தரும் ஆங்கில் சொல்லை ( மான்ஸ்டர்) பயன்படுத்திக்கொண்டார்.

தகவல் பலகையை உருவாக்குவதற்கான ஆலோசனை நாடிச்சென்ற போது தான், அவர் அப்போது அறிமுகமாகியிருந்த வலை பற்றி தெரிந்து கொண்டார். இதனிடையே ஆலோசனை கூறியவர்களில் ஒருவர், டெய்லர் கேட்ட கேள்விகளால் வெறுத்துப்போனார். எனினும் அவரை, வேறு ஒரு சின்ன நிறுவனத்திடம் அறிமுகம் செய்து வைத்தார். அந்த நிறுவனம், மொசைக் பக்கங்களை உருவாக்கித்தரும் சேவை அளித்து வந்தது. அதாவது மொசைக் பிரவுசரில் செயல்படக்கூடிய இணைய பக்கங்களை உருவாக்கி கொடுத்தது. அப்போது இணையதளம் எனும் வார்த்தை பிரபலமாகாமல், அவை மொசைக் பக்கங்கள் என்றே அழைக்கப்பட்டன.

டெய்லர், உருவாக்க விரும்பிய வேலைவாய்ப்பு தகவல் பலகை, கிராபிக்ஸ் அம்சங்களும் கொண்டிருந்ததால், இந்நிறுவனம், அவரிடம், தகவல் பலகைக்கு பதில் மொசைக் பக்கம் அமைக்கலாம், இதில் தான் கிராபிக்ஸ் வசதி உண்டு, தகவல் பக்கத்தில் கிடையாது என்றது. டெய்லரும் அதை ஏற்றுக்கொண்டு, மான்ஸ்டர் டாட் காம் முகவரியை பதிவு செய்தார். 1994 ஏப்ரலில் பதிவு செய்த போது, அவரது முகவரி 454 வது டாட்காம் முகவரியாக அமைந்தது.

இப்படி தான் வேலைவாய்ப்பு தேடலுக்கான முதல் இணையதளமாக மான்ஸ்டர்.காம் அறிமுகமானது.

வேலைவாய்ப்பு தேடலில் இன்றளவு பயன்படுத்தப்படும் பல அடிப்படை அம்சங்கள் மான்ஸ்டர் தளத்தில் அறிமுகமானது தான். ஒரு பக்கம் அந்த தளம் நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளை பட்டியலிட்டது. இன்னொரு பக்கம், வேலை தேடுபவர்கள் தங்களுக்கு பொருத்தமான வாய்ப்புகளை கண்டறிந்து, அந்த பணிக்கு இணையம் மூலம் விண்ணப்பிக்க வழி செய்தது. இதன் மூலம் வேலைதேடுபவர்கள் மற்றும் வேலைவாய்ப்பு அளிக்கும் அல்லது வேலைக்கு ஆள் தேடும் நிறுவனங்களுக்கு இடையிலான பாலமாக மான்ஸ்டர் தளம் விளங்கியது.

இணைய வேலைவாய்ப்புத்தேடல் எவ்வளவோ முன்னேறி வந்திவிட்டாலும் இந்த அடிப்படை அம்சங்கள் மாறிவிடவில்லை. இதுவே மான்ஸ்டர் தளத்தின் வெற்றிக்கும் அடிப்படையாக அமைந்தது. ஆனால், இந்த வெற்றி சுலபமாக வந்துவிடவில்லை. முதல் சில ஆண்டுகளில் மான்ஸ்டர்.காம் திண்டாட வேண்டியிருந்தது.

வேலைவாய்ப்புக்கான இணையதளம் ஒன்றை மாஸ்டர்.காம் எனும் பெயரில் உருவாக்கி இருக்கிறோம், இதில் உங்கள் வேலைவாய்ப்பு விளம்பரங்களை தாருங்கள் எனும் கோரிக்கையிடன் டெய்லர் 200 க்கும் மேற்பட்ட நிறுவனங்களை அணுகிய போது, பெரும்பாலான நிறுவனங்கள் மறுத்துவிட்டன. டெய்லருக்கு அறிமுகமான நிறுவனங்கள் மட்டும், சரி எங்கள் வேலைவாய்ப்பு பட்டியலை தருகிறோம், அதை வைத்து என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என கூறி அரை மனதுடன் ஒப்புக்கொண்டன.

ஆக, நாளிதழ்களில் இருந்து உருவி எடுக்கப்பட்ட வேலைவாய்ப்பு விளம்பரங்களின் தொகுப்பாக மான்ஸ்டர் தளம் அமைந்திருந்தது. அது மட்டும் அல்ல, எல்லாமே போஸ்டன் நகரில் இருந்த வேலைவாய்ப்புகள்.

இன்னொரு பக்கம் பார்த்தால், மான்ஸ்டர் தளத்தை பார்த்துவிட்டு, இந்தியா, பெரு ஆகிய நாடுகளில் இருந்தெல்லாம் வேலை வாய்ப்புக்கு பலர் விண்ணப்பித்தனர். யார் யாரோ விண்ணப்பிப்பதை பார்த்து நிறுவனங்கள் வெறுத்துப்போயின. அவை டெய்லரிடம் உங்கள் தளத்தால் எங்களுக்கு எந்த பலனும் இல்லை, எங்கள் வேலை வாய்ப்புகளை நீக்கி விடுங்கள் என்றன. மறுபக்கத்தில் வேலை தேடி வந்தவர்களோ, பாஸ்டன் தவிர வேறு நகர வேலை வாய்ப்பு இல்லாததால் அதிருப்தி அடைந்தனர்.

நிறுவனத்தை தொடர்ந்து நடத்த முடியாமல் தடுமாறிய நிலையில், அவர் முன்னணி நாளிதழான பாஸ்டன் குலோப்பிடம் சென்று, வேலைவாய்ப்பு இணையதளத்தை இணைந்து நடத்துவோம், நீங்கள் நிதி உதவி மட்டும் அளியுங்கள் எனக்கேட்டார். 50 சதவீத பங்குகளுக்கு பதிலாக அவர் கேட்ட ஒரு மில்லியன் டாலர் நிதியை அளிக்க பாஸ்டன் குலோப் மறுத்துவிட்டது. இணையத்தின் மூலம் வேலைவாய்ப்புகளை அளிக்கும் தளத்தை நம்பி எப்படி முதலீடு செய்யலாம் என அந்த நாளிதழ் நிர்வாகம் நினைத்து தயங்கியிருக்கலாம்.

மேலும், வேலைவாய்ப்பு வரிவிளம்பரம் மூலமான வருவாயை ஒரு இணையதளத்திடம் இழக்கலாமா? என்றும் தயங்கியிருக்கலாம். பின்னர், இணையம் பிரபலமாகி, இணைதளங்கள் பரவலாகி, அச்சு ஊடகங்களுக்கு சவால் விடத்துவங்கி போது, பாஸ்டன் குலோப் நிர்வாகம் இந்த தவறவிட்ட வாய்ப்பை நினைத்து வருந்தியது என்றாலும், இணையத்தின் ஆரம்ப காலத்தில் பிரதான ஊடகங்கள் இணையத்தை சரியாக புரிந்து கொண்டிருக்கவில்லை என்பதற்கு இது ஒரு உதாரணம்.

இந்த நிராகரிப்பை அடுத்து டெய்லர், எப்படியோ தடுமாறு டிஎம்பி வேர்ல்டுவைடு எனும் ஒரு நிறுவனத்திடம் தனது தளத்தை விற்றுவிட்டார். யெல்லோபேஜஸ் சேவை நடத்தி வந்த அந்த நிறுவனம், உண்மையில் டெய்லரின் விளம்பர நிறுவனத்தை வாங்கி கொண்டது. அதனுடன் மான்ஸ்டர் தளத்தையும் வாங்கி கொண்டது.

விற்பனைக்கான நிபந்தனையாக, மான்ஸ்டர் எனும் பெயரை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், அந்த தளத்தின் வளர்ச்சிக்கு தேவையான வசதிகளை அளிக்க வேண்டும் என்றும் அவர் நிபந்தனை விதித்தார். அவை ஏற்றுக்கொள்ளப்படவே, மான்ஸ்டர் தளத்தின் வெற்றிப்பயணம் துவங்கியது. 1995 ல் நிறுவப்பட்ட அந்த இணைய தளம், 1998 ல் அமெரிக்காவின் மிகப்பெரிய விளையாட்டு போட்டியான சூப்பர் பவுல் நடுவே விளம்பரம் செய்து கவனத்தை ஈர்த்தது.

மான்ஸ்டர் தளம் துவக்கப்பட்ட காலத்தில் நிறுவப்பட்ட கேரியர்பில்டர் மற்றும் பின்னர் அறிமுகமான ஹாட்ஜாப்ஸ் ஆகிய வேலைவாய்ப்பு தளங்கள் எல்லாம் சேர்ந்து, இணைய வேலைவாய்ப்பு தேடலை பிரபலமாக்கின.

https://mixergy.com/interviews/jeff-taylor-monster-interview/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.