உயிர் காக்க உதவி

நீங்கள் அவசியம் அறிந்திருக்க வேண்டிய இணையதளங்களின் பட்டியலில் ஐபிக்ஸிட் (https://www.ifixit.com/) தளத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். புதிதாக வெளியாகும் ஸ்மார்ட்போன்களை அக்குவேறு ஆணி வேறாக பிரித்து காட்சி விளக்கம் அளிக்கும் ’டியர்டவுன்’களுக்கு பெயர் பெற்ற இந்த தளம், தொழில்நுட்ப சாதனங்களை பயனாளிகளே பழுது பார்க்க வழி செய்யும் கையேடுகளை தொகுத்தளிக்கிறது. ஸ்மார்ட்போனில் இருந்து லேப்டாப் வரை பல்வேறு சாதனங்களை பழுது பார்த்துக்கொள்ள வழி காட்டும் ஐபிக்ஸிட் தளம், தொழில்நுட்ப பிரியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கிறது.

பழுது பார்ப்பது எங்கள் உரிமை எனும் முழக்கத்தை அடிப்படையாக கொண்ட இந்த தளம், மருத்துவ உபகரணங்களுக்கான தனிப்பகுதியையும் புதிதாக துவக்கியுள்ளது. கொரோனா பாதிப்பால், உலகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் வெண்டிலேட்டர் கருவிகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில், வெண்டிலேட்டர் கருவிகள் பழுதானால் அவற்றை உடனடியாக சரி செய்ய உதவும் வகையில், மருத்துவ சாதனங்களுக்கான பழுது பார்க்கும் கையேடுகள், புகைப்பட வழிகாட்டுதலுடன், ஐபிக்ஸிட் தளத்தில் சேர்க்கப்பட்டு வருகின்றன.

குட்டீஸ்களுக்கு ஒரு பட்டியல்

குட்டீஸ்கள் செய்து பார்க்க கூடிய சுவாரஸ்யமான செயல்களை பட்டியலிடுகிறது கிடாலிஸ்ட் (https://kidalist.com/) இணையதளம். இதில் இடம்பெற்றுள்ள யோசனைகள் எல்லாமே, பெற்றோர்களால் பரிந்துரைக்கப்பட்டவை. ஓவியங்களை வரைந்து பார்ப்பதில் துவங்கி, கலைப்பொருட்களை உருவாக்குவது வரை பலவிதமான செயல்கள் இடம்பெற்றுள்ளன. இவைத்தவிர, வீடியோகேம்கள், வினாடிவினாக்கள் போன்றவையும் பட்டியலிடப்பட்டுள்ளன. சுட்டிகளுக்கான பயனுள்ள செயலிகளும் இடம் பெற்றுள்ளன. ஆர்வம் உள்ள குழந்தைகள் கோடிங் கற்றுக்கொள்ளவும் முயற்சிக்கலாம். புதிய மொழியை கற்றுக்கொள்ளலாம், உலக அருங்காட்சியங்களை பார்வையிடலாம், புத்தகம் வாசிக்கலாம்… இப்படி பல விதங்களில் பிள்ளைகளை கவர்ந்திழுக்கிறது இந்த இணையதளம்.

இது இந்திய தேடியந்திரம்!

கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து வரும் நிலையில், இந்தியாவில் இருந்து ஒரு மருத்துவ தேடியந்திரம் அறிமுகம் ஆகியுள்ளது. விலோகனா (http://www.vilokana.in/) எனும் இந்த தேடியந்திரம் மூலம் கொரோனா வைரஸ் தொடர்பான ஆய்வு தகவல்களை எளிதாக தேடலாம். செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் செயல்படும் இந்த தேடியந்திரம், தேடப்படும் குறிச்சொல்லுக்கு பொருத்தமான மருத்து ஆய்வு கட்டுரைகளை பட்டியலிடும்.
சுட்டிக்காட்டப்படும் மருத்துவ கட்டுரைகளின் சுருக்கம், தொடர்புடைய குறிச்சொற்கள், வரைபட விவரங்களையும் பட்டியலிடுகிறது.

மருத்துவ ஆய்வாளர்களுக்கு உதவும் வகையில் இந்த தேடியந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. சிகிச்சை அளிப்பதிலும் சரி, மருந்து கண்டுபிடிப்பதிலும் மருத்துவர்கள், ஆய்வாளர்கள் பங்கு தானே முக்கியமாகி இருக்கிறது. எனவே அவர்களுக்கு உதவும் மருத்துவ தேடியந்திரம் நல் வரவு தான்.
கேரளாவின் இந்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கழகம் இந்த தேடியந்திரத்தை உருவாக்கியுள்ளது.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.