கொரோனா கால சித்திரங்கள்

ae2c94e2-1257-4468-b337-3e7a25bd8280கொரோனா சூழலில் அதன் தாக்கத்தை குறைக்க அவரவர் தங்களால் இயன்றதை செய்யலாம். அந்த வகையில் இல்லஸ்ட்ரேஷன்ஸ் என சொலப்படும் சித்திரங்களை உருவாக்கு பிக்சல்ட்ரீ இணைய நிறுவனம், கொரொனா கால சித்திரங்களை உருவாக்கி, இலவச பயன்பாட்டிற்காக பகிர்ந்துள்ளது.

கொரோனா தொற்றை எதிர்த்து போராடுவதில் முக்கிய பங்கு வகிக்கும், முன்நிலை ஊழியர்களை குறிக்கும் வகையில் பிரண்ட்லைன்ஹிரோஸ் ( https://www.frontlinerheroes.design/) எனும் பெயரில் அமைக்கப்பட்ட இணையதளத்தில், இந்த சித்திரங்கள் இடம்பெற்றுள்ளன.

கொரோனா சூழலில் அதிகம் பேசப்படும் கருத்தாக்கங்களையும், அறிகுறிகளையும் குறிக்கும் வகையில் இந்த சித்திரங்கள் அமைந்துள்ளன. ஆன்லைன் வகுப்புகள் என்றால் அதை குறிக்க ஒரு சித்திரம். அதே போல சமூக இடைவெளியை குறிக்க ஒரு சித்திரம், முககவசம் அணிய வலியுறுத்த ஒரு சித்திரம், சானிடைசருக்கு ஒரு சித்திரம் என வரிசையாக கொரோனா தொடர்பான சித்திரங்கள் இடம்பெற்றுள்ளன,

கொரோனா தொடர்பான விழிப்புணர்வு கையேடுகள் அல்லது விளம்பரங்கள், கட்டுரைகளில் பயன்படுத்த பொருத்தமான சித்திரம் தேவை எனில் இந்த பட்டியலில் இருந்து தேர்வு செய்து கொள்ளலாம். எல்லாம் வெக்டார் பணி சித்திரங்கள் என்பதால், இவற்றை இஷ்டம் போல பெரிதாக்கியும் பயன்படுத்திக்கொள்ளலாம். வேறு இணைய செயலிகள் கொண்டு எளிதாக மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.

கொரோனா சூழலுக்கு மத்தியில் பிரபலமான வீடியோ சந்திப்புகளை சுவாரஸ்யமாக்க உதவும் செயலி தொடர்பான அறிமுகம் இன்றைய இணைய மலர் மின்மடலில் இடம்பெறுகிறது:

இணைய மலரில் இணைய:

இணைய மலரை டெலிகிராமில் பின் தொடர:

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.