சுஜாதா அறிந்திருந்த இணையம் எது?

suஎழுத்தாளர் சுஜாதா இணையம் பற்றி நிறைய எழுதியிருக்கிறார். ஆனால், வலை பற்றி எழுதியிருக்கிறாரா? என்று தெரியவில்லை. சுஜாதாவின் ’ஆயிரம் கணிப்பொறி வார்த்தைகள்’ புத்தகத்தை படிக்கும் போது, இந்த கேள்வி மனதில் எழுகிறது.

இந்த புத்தகத்தில், கம்ப்யூட்டர் துறை தொடர்பான வார்த்தைகளை சுஜாதா , வளைத்து வளைத்து அறிமுகம் செய்திருக்கிறார்.  கிட்டத்தட்ட ஒரு கணிப்பொறி அகராதி போல இந்த புத்தகம் அமைந்திருக்கிறது. ஆனால், இந்த விஷயங்களை எல்லாம் ஏன் எழுதவில்லை என்று கேள்விகளும் எழுகின்றன.

இந்த கேள்விகளில் ஒன்று தான், வலை பற்றி ஏன் எழுதாமல் விட்டுவிட்டார்?

வலை என்பது வைய விரிவு வலையை குறிப்பது என நீங்கள் அறிந்திருக்கலாம்.  ஆங்கிலத்தில் இதை வெப் என்கின்றனர்.  வலை, 1993 ல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. அதன் பிறகு தான் இணையம் பொதுமக்களுக்கு பரவலாக அறிமுகமாகத்துவங்கியது.

வலைக்கு முன்னர் இணையம் என்பது பெரும்பாலும், ஆய்வாளர்களும் கல்வியாளர்களும் மட்டுமே அறிந்த விஷயமாக இருந்தது. இந்த இரு தரப்பினர் தவிர, தொழில்நுட்ப கில்லாடிகள் பலர் இணையத்தை அறிந்தும், பயன்படுத்தியும் வந்தனர்.

இணையம் எல்லோரும் அணுக முடியாத அளவுக்கு சிக்கலான விஷயமாக இருந்ததே இதற்கு முக்கிய காரணம். வலையின் அறிமுகம் இதை எல்லாம் மாற்றியது.

இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், பரவலாக கருதப்படுவது போல, வலையும், இணையமும் ஒன்றல்ல.  இந்த இரண்டு வார்த்தைகளும் மாறி மாறி பயன்படுத்தப்பட்டு வந்தாலும், இரண்டும் வேறு வேறானது. இணையம் என்பது கம்ப்யூட்டர்களின் வலைப்பின்னல் என்றால், வலை என்பது அதன் மீது உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு அல்லது பிரதான செயலி என்று வைத்துக்கொள்ளலாம்.

அதாவது இணையம் எனும் உள்கட்டமைப்பு மீது உருவாக்கப்பட்ட சேவையாக வலையை கருதலாம். இணையம் வன்பொருள், வலை மென்பொருள் என்றும் புரிந்து கொள்ளலாம்.

இன்னும் எளிதாக சொல்வது என்றால், இணையத்தில் உள்ள தகவல்களை , பிரவுசர் வாயிலாக, வலைப்பக்கங்கள் மூலம் எளிதாக அணுக வழி செய்யும் வசதியாக வலையை கருதலாம்.

இனி விஷயத்திற்கு வருவோம். கணிப்பொறி வார்த்தைகள் புத்தகத்தில் சுஜாதா, பிரதானமாக கம்ப்யூட்டர் சார்ந்த வார்த்தைகளுக்கான விளக்கம் அளித்தாலும், இமெயில், இணையம் பற்றி எல்லாம் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த கம்ப்யூட்டர்களின் வலைப்பின்னல் அமெரிக்காவில் அர்பாநெட்டாக துவங்கி வளர்ந்தது பற்றி எழுதுபவர், கம்ப்யூட்டரும், மோடமும் இருந்தால், இணையத்தில் புத்தகம் படிக்கலாம், இமெயில் அனுப்பலாம் என்றெல்லாம் சொல்கிறார். அவரது பாணியில், சங்கப்பாடல்கள் முதல் ஏ ஜோக்ஸ் வரை எல்லாவற்றையும் அணுகலாம் என்கிறார்.

அநேகமாக தமிழில் இணையம் பற்றி எழுத்தப்பட்ட ஆரம்ப கால அறிமுகங்களில் ஒன்றாக இது இருக்கலாம். இந்த புத்தகம் 1992 இறுதியில் வெளியாகி இருக்கிறது. அந்த காலகட்டத்தில் தமிழில் இணையம் பற்றி எத்தனை பேர் பேசியிருக்கின்றனர் எனத்தெரியவில்லை.

கம்ப்யூட்டர் என்றால், மென்பொருள்களும், புரோக்ராம்களும் என்று மட்டுமே அறியப்படுவது இயல்பாக இருந்த காலத்தில் அவர் இணையம் பற்றி போகிற போக்கில் குறிப்பிடுவது பெரிய விஷயம் தான்.

ஆனால், இணையம் பற்றிய அறிமுகத்தில், அதன் துணை அங்கமான வலை விரிவு வலை பற்றி அவர் குறிப்பிடாமல் போனது ஆச்சர்யமாக இருக்கிறது.

இப்போது வலை என்று ஒன்று வந்திருக்கிறது. இந்த வசதி இணையத்தை இன்னும் பலருக்கு கொண்டு சேர்க்கும் என எதிர்பார்க்கலாம் என்பது  போல அவர் தனக்குறிய பாணியில் வலை பற்றி எழுதியிருக்கலாம் எனத்தோன்றுகிறது.

ஆனால், ஒன்று இந்த புத்தகம் வெளியான ஆண்டு வலை பொதுவெளிக்கு வந்திருக்கவில்லை.  1991 ல் வலை நிறுவப்பட்டு, அந்த ஆண்டே முதல் வலைமனை அமைக்கப்பட்டாலும், 1993 ம் ஆண்டில் தான் வலை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது, அதன் பிறகு, 1995 ல் தான்,  வலை எனும் கருத்தாக்கம் பேசுபொருளானது.

எனவே, 1992 ல் வெளியான இந்த புத்தகத்தில் வலை பற்றிய கருத்தாக்கத்தை எதிர்பார்க்க முடியாது தான். ஆனால், அதன் பிறகு சுஜாதா எங்காவது வலை பற்றி தனியே எழுதியிருக்கிறாரா என்று பார்க்க வேண்டும்.

இதை இங்கு குறிப்பிடுவதற்கான காரணம், சுஜாதாவின் இந்த புத்தகத்தை மிகவும் முக்கியமாக பார்ப்பதால் தான். கம்ப்யூட்டர் இயலை புரிந்து கொள்ள உதவும் வகையில் கம்ப்யூட்டர் தொடர்பான வார்த்தைகளை விளக்கி எழுதப்பட்ட இந்த புத்தகம் அரிய சாதனை தான்.

ஆனால் இந்த புத்தகத்தில் உள்ள விடுபடல்கள் பற்றி பேசுவது அவசியம் என்றேத்தோன்றுகிறது.

இந்த புத்தகமே கூட முதல் தொகுதி தான் என அறிய முடிகிறது. இரண்டாவது தொகுதியை சுஜாதா எழுதினாரா எனத்தெரியவில்லை.

ஆனால் ஒன்று, இந்த புத்தகம் பல பதிப்புகள் கண்டிருக்கின்றன. இதன் இரண்டாம் பதிப்பு 1995 ல் வெளியான போது இணையம் பிரபலமாகத்துவங்கி விட்டது. இதற்கு மூலக்காரணம் வலையின் அறிமுகம் தான்.  எனவே, இந்த இரண்டாம் பதிப்பில், இணையம் தொடர்பான விளக்கத்தில் வலை பற்றிய குறிப்பையும் சேர்த்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். தொடர்ந்து பல பதிப்புகள் வந்த போதும், இது போன்ற திருத்தங்களும், அப்டேட்களும் செய்யப்படவில்லை என்பது கொஞ்சம் ஏமாற்றமாக தான் இருக்கிறது.

வலை 3.0 – வலையின் கதை!

வாத்தியார்’ சுஜாதா தாக்கத்தில் ஒரு டெக் டிக்‌ஷனரி

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *