நீங்கள் ஏன் ’ஸ்லேஷ்டாட்’ தளத்தை அறிந்து கொள்ள வேண்டும்

Screenshot_2021-04-10 ஆதியில் ஸ்லேஷ்டாட் இருந்தது – நுட்பம் – சைபர்சிம்மன்ஸ்லேஷ்டாட் இணையதளத்தை அறிமுகம் செய்யும் எனது மின்னூல் வெளியாகி இருக்கிறது. தமிழில் ஸ்லேஷ்டாட் பற்றி எழுதப்பட்டுள்ள முதல் நூல் இது. அந்த வகையில் இந்த நூல் குறித்து பெருமிதம் கொள்கிறேன்.

இந்த புத்தகத்தின் தலைப்பு மற்றும் இதன் பதிப்பு, இரண்டுமே பொருத்தமானதாக கருதுகிறேன்.

புத்தகத்தின் தலைப்பு, ஆதியில் ஒளி இருந்தது எனும் பைபிள் வாசகத்தை ஒட்டி அமைகிறது. ஸ்லேஷ்டாட் தொடர்பாக சில ஆண்டுகளுக்கு முன் படித்துக்கொண்டிருந்த போது, கட்டுரை ஒன்றில் இதே வாசகம் பயன்படுத்தப்பட்டதாக நினைவு. அதன் தாக்கமே புத்தகத்திற்கு தலைப்பானது.

ஆதியில் இருந்து…

பைபிள் வாசகம், ஸ்லேஷ்டாட்டின் இணைய ஆதி தன்மையை குறிப்பதாக நினைக்கிறேன். அதை விட முக்கியமாக இணைய வரலாற்றில் ஸ்லேஷ்டாட்டின் முன்னோடி தன்மையையும் குறிக்கிறது. தமிழில் அதிகம் பேசப்படாத இந்த இணையதளம் பற்றி தனியே ஒரு புத்தகம் எழுதியிருக்கிறேன்.

எந்த இணையதளத்தையும், ஒற்றை வரி அல்லது நான்கு வரி அறிமுகம் எழுதினால் போதும் எனும் சூழலில், ஒரு இணையதளம் பற்றி விரிவாக அலசி ஆராய்ந்து எழுதுவதே அரிதாக அமையும் நிலையில், ஒரு இணையதளத்திற்காக ஒரு அறிமுக நூலே எழுதுவது ஆச்சர்யம் அளிக்கலாம்.

தனி நூல் ஏன்?

ஒரு விதத்தில் ஸ்லேஷ்டாட் தொடர்பாக தனி நூல் எழுத வேண்டும் என்பது நானே எதிர்பாராதது. இதற்கான முன்கதையை இங்கே குறிப்பிடுவது அவசியமாகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட இணையதளங்களை அறிமுகம் செய்யும் என்னுடைய முதல் புத்தகமான இணையத்தால் இணைவோம் நூலில், ஸ்லேஷ்டாட் இணையதளத்தையும் ஒரு கட்டுரையாக எழுதியிருந்தேன்.

அதன் பிறகு, இணையதளங்களை மையமாக கொண்டு வலை வரலாற்றை தொடராக தமிழ் இந்து நாளிதழுக்காக எழுதிய போது, இணைய வரலாற்றில் மைல்கல்லாக அமைந்த தளங்கள் பற்றி எல்லாம் ஆய்வு செய்து கொண்டிருந்தேன். இந்த பட்டியலில் தான் மீண்டும் ஸ்லேஷ்டாட்டை பற்றி எழுத நினைத்தேன். தொடரின் வரம்பில், ஸ்லேஷ்ட்டாடை சேர்க்க முடியவில்லை என்றாலும்,விடுபட்ட தளங்களின் வரிசையில் எழுத விரும்பினேன்.

cover-3-212x300இணைய வரலாறு:

இதற்காக ஸ்லேஷ்டாட்டை மறு ஆய்வு செய்து கொண்டிருந்த போது தான், இந்த தளம் பற்றி எளிய அறிமுகம் போதாது, ஒரு சிறு நூலாக தனி அறிமுகம் தேவை என உணர்ந்தேன். அதன் பிறகு தொடர்ந்து ஸ்லேஷ்டாட்டை தீவிர வாசிப்புக்கு உள்ளாக்கி இந்த நூலை எழுதினேன்.

பத்துக்கும் குறைவான அத்தியாயகங்கள் கொண்ட ஐம்பது பக்க சிறிய நூல் என்றாலும், ஒரு இணையதளத்தை அறிமுகம் செய்ய ஒரு புத்தகமா என கேட்கலாம்.

இதற்கான காரணங்கள் இருக்கின்றன.

முதலில், ஸ்லேஷ்டாட் இணையத்தின் முன்னோடி தளங்களில் ஒன்று. முன்னோடி தளம் எனும் போது, அதன் பிரிவில் முதலில் துவங்கப்பட்ட இணையதளங்களில் ஒன்று என்பது மட்டும் அல்ல, ஒரு வகையில் சமூக ஊடக தளங்களுக்கான முன்னோடியாகவும் ஸ்லேஷ்டாட் அமைகிறது.

அப்போதே…

பேஸ்புக், டிவிட்டர் எல்லாம் வருவதற்கு முன்னரே, 1997 ல் ஸ்லேஷ்டாட் நிறுவப்பட்டதும், பயனர் பங்கேற்பு, கருத்து பரிமாற்றம் சார்ந்த விவாத வசதி மற்றும் கூட்டு முயற்சி ஆகிய அம்சங்களினால் ஸ்லேஷ்டாட் சமூக ஊடகம் என வரையறுக்கப்படும் இலக்கணத்திற்கான முன்னோடி தளங்களில் ஒன்றாக அமைகிறது.

வலைப்பதிவை பிரபலமாக்கிய பிளாகர் தளம் துவங்குவதற்கு முன்னரே ஸ்லேஷ்டாட் இருந்தது என்பதும் கவனிக்க வேண்டியது.

அது மட்டு அல்ல, நவீன இதழியலில் ஸ்லேஷ்டாட்டின் தாக்கம் இன்னும் வலுவானது. இணையத்தின் தாக்கத்தால் இதழியலில் ஏற்பட்டிருக்கும் குறிப்பிடத்தக்க மாற்றங்களின் மைய அம்சங்களில் ஒன்றாகவும் ஸ்லேஷ்டாட் திகழ்கிறது.

இதழியல் கோட்டை

செய்திகளின் வாயில் காப்பாளர்கள் என இதழாளர்களுக்கு இருந்த தனிப்பெருமையை இணையமும், அதன் அங்கமான சமூக ஊடகமும் கேள்விக்குறியாக்கி இருப்பது முக்கிய அம்சம் எனில், அதை முதலில் செய்த தளங்களில் ஸ்லேஷ்டாட் முதன்மையானது.

அந்த வகையில், ஸ்லேஷ்டாட்டின் வருகையை அல்லது தாக்கத்தை இதழாளர்களும், ஊடகத்தினரும் உணராமலே போயினர் என்றே சொல்ல வேண்டும்.

டிஜிட்டல் இதழியல்

அது மட்டும் அல்ல, நவீன டிஜிட்டல் இதழியலின் அம்சமாக அல்லது அதன் எதிர்கால திசையாக சொல்லப்படும் பயனாளிகளுடன் இதழாளர்கள் இணைந்து செயல்பட வேண்டிய ஓபன் சோர்ஸ் இதழியலின் துவக்கப்புள்ளிகளில் ஒன்றாகவும் ஸ்லேஷ்டாட் அமைகிறது.

இந்த காரணங்களினால் தான் இப்போது திரும்பி பார்த்தாலும் ஸ்லேஷ்டாட் வியக்க வைக்கிறது. எனவே தான் ஸ்லேஷ்டாட் பற்றி இந்த தனி அறிமுகம் நூல்.

இதனிடயே , லயோலா கல்லூரியின் கவுசல் கேந்திரா பிரிவில் டிஜிட்டல் இதழியல் துறையில் கவுரவ விரிவுரையாளராக பணியாற்றும் வாய்ப்பு காரணமாக உணடான புதிய கண் திறத்தலும் ஸ்லேஷ்டாட்டை புதிய வெளிச்சத்தில் புரிந்து கொள்ள உதவியது.

அதிலும் குறிப்பாக வலைக்கு முந்தைய இணையத்தின் முக்கிய அம்சங்களான, கம்ப்யூசர்வ், வீடியோட்ரான், வீடியோடெக்ஸ், ஆடியோடெக்ஸ்ட், டெலிடெக்ஸ்ட் ஆகிய சேவைகளின் தொடர்ச்சியாக ஸ்லேஷ்டாட்டை பொருத்திப்பார்க்கவும் முடிந்தது.

கணியம் நூல்

எல்லாவற்றுக்கும் மேல், இணைய கண்டறிதல் மற்றும் செய்தி பகிர்தலில் தனி ஆசிரியர் குழுவின் ஏகபோகத்தை தகர்த்து, பயனாளிகளின் கூட்டு முயற்சியை பிரதானமாக்கிய தளமாக ஸ்லேஷ்டாட் மின்னுகிறது. இந்த அம்சங்களை மையப்படுத்தி எழுதிய இந்த மின்னூலை, திறவு மூல கோட்பாட்டை மக்கள் மத்தியில் எடுத்துச்செல்ல முயன்று வரும் கணியம் அமைப்பின் சார்பில், ’பிரிடமில்இபுக்ஸ்’ இது கிரியேட்டிவ் காமம்ஸ் காப்புரிமை கொண்ட நூலாக இது வெளியாவது பொருத்தமாகவே கருதுகிறேன். இதற்கு உதவிய நண்பர் கணியம் ஸ்ரீனிவாசனுக்கு மனமார்ந்த நன்றி. மின்னுலாக்கிய லெனின் குருசாமிக்கு கூடுதல் நன்றி.

‘ஆதியில் ஸ்லேஷ்டாட் இருந்தது’ நூலை தரவிறக்கம் செய்து வாசிக்க: 

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.