கொரோனா உதவி தேடியந்திரம்

78193c75-6892-4753-9c27-ef286f4c1c47கொரோனா உதவிக்கான வலைவாசல் மற்றும் தேடியந்திரமாக கோவிட் ஹெல்ப் (https://covid.help/#/ ) இணையதளம் அமைந்துள்ளது.

கொரோனா கோரிக்கைகள், உதவிகளை ஒருங்கிணைக்கும் மற்ற தளங்கள் போலவே அமைந்திருந்தாலும், இதில் கூடுதலாக சில அம்சங்கள் உள்ளன.

அடிப்படையில் இந்த தளத்தில், கொரோனா நோயாளிகளுக்கு தேவையான அக்சிஜன் சிலிண்டர், மருந்து உள்ளிட்ட தகவல்களை எளிதாக தேடலாம். இந்த தகவல்களை தேடுவதோடு, பயனாளிகளே இதற்கான விவரங்களை பதிவேற்றவும் செய்யலாம். தகவல்களை சரி பார்க்கும் தன்னார்வலர்களாகவும் இணைந்து கொள்ளலாம்.

தளத்தின் முகப்பு பக்கத்திலேயே, இவை அனைத்திற்குமான பகுதிகள் இருக்கின்றன. கொரோனா வளங்கள் எனும் முதல் பகுதியில், கொரோனா உதவி தொடர்பான தகவல்களை எளிதாக தேடலாம். அடுத்த பகுதியில் உங்களுக்கு தெரிந்த உதவி தகவல்களை இடம்பெற வைக்கலாம். தன்னார்வலர்களாக இணைவதற்கான பகுதியும் இருக்கிறது. முக்கியமாக உதவி தேவைப்படுபவர்கள் தங்களுக்கு தேவையான தகவல்களை நோட்டிபிகேஷன் வடிவிலும் பெறும் வசதியும் இருக்கிறது.

கொரோனா உதவி தொடர்பான பிற இணையதளங்களுக்கான இணைப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

கொரோனா வளங்கள் பகுதியில் குறிப்பிட்ட நகரங்கள் தொடர்பான தகவல்களை எளிதாக தேடலாம். உதவி கோரிக்கை தொடர்பான விவரங்களுடன் தொடர்பு எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

தகவல்கள் சரி பார்க்கப்பட்டு வெளியிடப்பட்டாலும், அவற்றின் நம்பகத்தன்மை உறுதி செய்து கொள்ளப்பட வேண்டும் எனும் பொறுப்பு துறப்பும் இடம்பெற்றுள்ளது.

கொரோனா உதவி தகவல் சுரங்கம்

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *